தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்- ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்:
ஒரு சொல் ஒரு பொருளைக் குறிப்பதும் உண்டு; பல பொருளைக் குறிப்பதும் உண்டு.
(எ-டு:):
மரம் - ஒரு பொருள் குறித்தது
தாமம் -
மலர் மாலை, அச்சம், இடம், உடல், ஒழுங்கு, கயிறு, ஒளித்தொகுதி, கொன்றை மரம், நகரம், பறவைகளின் கழுத்து ஆரம், பூ, பெருமை, போர்க்களம், மணிகள் கோத்த அணிகலன், மலை, மாலை, தலைப்பின்னல் வகையில் ஒன்று, யானை, விருப்பம், வீடு எனப் பல பொருள் குறித்தது.
இவ்வாறு, பல பொருள் குறித்த சொல் ஒரு தொடரில் வரும் பொழுது எவ்வாறு பொருள் கொள்வது என்பதற்குச் சான்றோர்கள் வழிகாட்டியுள்ளனர். பல பொருள் குறித்த சொல்லை ஒரு தொடரில் பயன்படுத்தும் பொழுது, வினை, சார்பு, இனம், இடம் என்பனவற்றைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துச் சொல்லி அதன் பொருளைத் தெளிவுபடுத்துதல் மரபு.
பல பொருள் குறித்த ஒரு திரிசொல்:
இதழ் என்னும் சொல் - பூவின் இதழ், உதடு, கண்இமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.
ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
எ.கா : சொல்லுதல் - பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்
1) ஒரு பொருள் தரும் இரு சொற்களைத் தருக. (இசை)
a) அசை, அசைவு
b) புகழ், இசைவு
c) மாலை, பூமாலை
d) ஓசை, குழலோசை
விடை:
b) புகழ், இசைவு
2) ஒரு பொருள் தரும் பல சொற்கள் ( ‘திங்கள்’ )
a) கிழமை, சூரியன்
b) சந்திரன், மாதம்
c) சந்திரன், சூரியன்
d) நிலவு, அறவு
விடை
b) சந்திரன், மாதம்
3) ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
சொல்லுதல்
a) மொழிதல், வாசித்தல்
b) செப்புதல், கூறல்
c) உரைத்தல், கேட்டல்
d) விளம்புதல், கவனித்தல்
விடை
b) செப்புதல், கூறல்
4) ஒரு பொருள் தரும் பல சொற்கள்
பிள்ளை, குட்டி, மடலி, வடலி, கன்று ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
a) இளம் விலங்கினம்
b) தென்னை ஓலை
c) இலைகள்
d) இளம் பயிர் வகை
விடை
d) இளம் பயிர் வகை
5) ஒரு பொருள் தரும் பல சொற்கள் – அணி
a) அணிகலன், அழகு
b) இலக்கணம், அணில்
c) ஆடை, அணிதல்
d) நகைகள், அணிதல்
விடை
a) அணிகலன், அழகு
6) மரம், விலங்கு, பெரிய, அழகு, வண்டு எனப் பொருள் தரும் சொல்லை எழுதுக.
a) தா
b) மா
c) தீ
d) பூ
விடை
b) மா
7) ‘மதி’ என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.
a) அறிவு
b) நிலவு
c) ஞானம்
d) பகலவன்
விடை
d) பகலவன்
8) ‘வேழம்’ என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.
a) பிடி
b) களிறு
c) சிங்கம்
d) பெண் யானை
விடை
c) சிங்கம்
9) ஒரு பொருள் தரும் பல சொற்கள் “ஈ” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.
a) உயிரெழுத்து
b) ஒரு வகை பறவை
c) அணிகலன்
d) பகிர்ந்து கொடு
விடை
c) அணிகலன்
10) ஒரு பொருள் கரும் பல சொற்கள்
வடு, மூசு, குரும்பை, கச்சல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
a) பிஞ்சு வகை
b) காய் வகை
c) கனி வகை
d) குலை வகை
விடை
a) பிஞ்சு வகை
பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக
(ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி)
(எ.கா.) ஆறு – ஈ ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.
விளக்கு : இலக்கணப் பாடத்தை விளக்கிக் கூறு.
அறியாமை என்னும் இருளைப் போக்குவது கல்வி என்னும் விளக்கு.
படி : காலையில் தினமும் படி.
மாடிப்படி ஏறி வா.
சொல் : சொற்கள் சேர்ந்தால் பாமாலை.
பெரியோர் சொல் கேட்டு சிறியோர் நடக்க வேண்டும்.
கல் : கற்களால் ஆனது கோபுரம்.
இளமையில் கல்.
மாலை : நேற்று மாலை பூங்காவிற்குச் சென்றேன்.
பூ மாலை நல்ல மணம் வீசியது.
இடி இடிக்கும் சப்தம் கேட்டது.
தவறுகளைக் கண்டால் இடித்துரைத்தல் வேண்டும்.
ஒரு பொருள் பல சொற்கள் :
(1)அரசன் - கோ
அரசன் - கொற்றவன்
அரசன் - காவலன்
அரசன் - வேந்தன்
அரசன் - மன்னன்
அரசன் - ராஜா
அரசன் - கோன்
(2)அமைச்சர் - மந்திரர்
அமைச்சர் -சூழ்வோர்
அமைச்சர் -நூலோர்
அமைச்சர் - மந்திரிமார்
(3)அழகு -அணி
அழகு - வடிவு
அழகு - வனப்பு
அழகு - பொலிவு
அழகு - எழில்
(4)அடி -கழல்
அடி-கால்
அடி-தாள்
அடி-பதம்
அடி-பாதம்
(5)அணிதல் - அலங்கரித்தல்
அணிதல் - சூடுதல்
அணிதல் - தரித்தல்
அணிதல் - புனைதல்
அணிதல் - பூணல்
அணிதல் - மிலைதல்
(6)அந்தணர் - பார்ப்பார்
அந்தணர் -பிராமணர்
அந்தணர் -பூசகர்
அந்தணர் -பூசுரர்
அந்தணர் -மறையவர்
அந்தணர் -வேதியர்
(7)அக்கினி - நெருப்பு
அக்கினி -தழல்
அக்கினி -தீ
(8)அச்சம் - பயம்
அச்சம் -பீதி
அச்சம் -உட்கு
(9)அடைக்கலம் - சரண்புகுதல்
அடைக்கலம் -அபயமடைதல்
அடைக்கலம் -கையடை
(10)அபாயம் - ஆபத்து
அபாயம் - இடையூறு
அபாயம் - துன்பம்
(11)அரக்கன் - இராக்கதன்
அரக்கன் - நிருதன்
அரக்கன் - நிசிசரன்
(12)அல்லல் - இன்னல்
அல்லல் - துயர்
அல்லல் - இடும்பை
(13)ஆசிரியன் - உபாத்தியாயன்
ஆசிரியன் - ஆசான்
ஆசிரியன் - தேசிகன்
ஆசிரியன் - குரவன்
(14)அரசி -இராணி
அரசி -தலைவி
அரசி -இறைவி
(15)அம்பு-கணை
அம்பு-அஸ்த்திரம்
அம்பு-சரம்
அம்பு-பாணம்
அம்பு-வாளி
(16)அருள்-இரக்கம்
அருள்-கருணை
அருள்-தயவு
அருள்-கிருபை
அருள்-அபயம்
(17)அழகு-அணி
அழகு-வடிவு
அழகு-வனப்பு
அழகு-பொலிவு
அழகு-எழில்
அழகு-கவின்
(18)அறிவு - உணர்வு
அறிவு - உரம்
அறிவு - ஞானம்
அறிவு - மதி
அறிவு - மேதை
அறிவு - விவேகம்
(19)அன்பு - நேசம்
அன்பு - ஈரம்
அன்பு - நேயம்
அன்பு - பரிவு
அன்பு - பற்று
அன்பு - கருணை