இலக்கணம்-ஒருமைப் பன்மை அறிதல்:
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
எண்:
பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எண் எனப்படும். எண் இரண்டு வகைப்படும். அவை,
1) ஒருமை
2) பன்மை
ஒருமை:
ஏதேனும் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை எனப்படும். பொருள்களைக் குறிக்கும் பிரிவுகளில் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்னும் மூன்றும் ஒருமைக்குரிய பால்கள் ஆகும்.
முருகன், வளவன், அவன் - ஆண்பால்
வள்ளி, குழலி, அவள் - பெண்பால்
மாடு, கல், அது - ஒன்றன்பால்
பன்மை:
பொருள்களில் பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். பொருள்களைக் குறிக்கும் பிரிவுகளில் பலர் பால், பலவின் பால் என்னும் இரண்டும் பன்மைக்குரிய பால்கள் ஆகும்.
அவர்கள், ஆண்கள், பெண்கள் - பலர்பால்
அவை, மாடுகள் - பலவின்பால்
ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்
இது ஒரு எளிய வகை வினா, தேர்வரின் தமிழறிவை சோதிக்கும் வண்ணம் , வாக்கியங்களில் வரும் ஒருமை/பன்மை (singular/flural) வேறுபாடுகளை கண்டறியும் திறனை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.
உதாரணம் : ஒருமை/பன்மை பிழைகளைக் கண்டறிக ?
அ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர்
ஆ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றார்கள்
இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது
ஈ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றன.
விடை : இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது( தமிழ்நாடு என்ற பெயர் ஒருமையில் வந்ததால் வென்றது என்பது ருமையிலேயே வர வேண்டும்.)
ஒருமை - பன்மை பிழைகளை நீக்குதல்
வினா: குயில் மயில் ஒன்றாய் இருந்தன .
- விடை: குயிலும் மயிலும் ஒன்றாய் இருந்தன
வினா: தோட்டத்தில் மாடுகள் மேய்கிறது .
- விடை: தோட்டத்தில் மாடுகள் மேய்கின்றன
வினா: அன்று பார்த்தப் பெண் அவள் அல்ல .
- விடை: அன்று பார்த்தப் பெண் அவள் அல்லள்
வினா: தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன .
- விடை: தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது
வினா: ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றது .
- விடை: ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றன
வினா: மரத்தில் பழங்கள் பழுத்தன .
- விடை: மரங்களில் பழங்கள் பழுத்தன
வினா: சில வீரர்கள் கீழே விழுந்தனர் .
- விடை: வீரர்கள் சிலர் கீழே விழுந்தனர்
வினா: பள்ளியில் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள் .
- விடை: பள்ளியில் குழந்தைகள் பாடங்களைப் படிக்கிறார்கள்
வினா: குதிரை வேகமாக ஓடின
- விடை: குதிரைகள் வேகமாக ஓடின
வினா: முருகன் கவிதை எழுதுகிறார்
- விடை: முருகன் கவிதை எழுதுகிறான்
வினா: அணை உடைகின்றன
- விடை: அணைகள் உடைந்தன
வினா: மான்கள் காட்டில் மேய்ந்தது
- விடை: மான்கள் காட்டில் மேய்ந்தன
வினா: புலிகள் வந்தது, எருதுகள் ஓடியது
- விடை: புலி வந்தது, எருதுகள் ஓடின
வினா: தமிழர் திரைகடல் ஓடி திரவியம் தேடினார்
- விடை: தமிழர் திரைகடல் ஓடி திரவியம் தேடினர்.
வினா: கோயிலில் திருமுழுக்கும் கூட்டு வழிபாடும் நடந்தது
- விடை: கோயிலில் திருமுழுக்கும் கூட்டு வழிபாடும் நடந்தன.