தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்- ஒற்றுப் பிழைகள் அறிதல்:
ஒற்றுப் பிழைகள் :
ஒற்றுப் பிழைகள் என்பவை எழுதும்போது ஏற்படும் சந்திப் பிழைகளே ஆகும். அதாவது வலி மிகும் இடங்களில் மிகாமலும் தேவையற்ற இடங்களில் மிகுந்தும் எழுதப்படுவதாகும்.
வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுவதுவதும் மிகக்கூடாத இடத்தில் வல்லின மெய்இட்டு எழுதுவதும் தவறாகும். இது சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை எனப்படும்.
"இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும் விதவாதன மன்னே "
என்ற நன்னூல் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் இயல்பாகவும் விதியின் படியும் உயிரெழுத்து வரும்பொழுது வருமொழி முதலில் வரும் வல்லெழுத்து (சிறப்பு விதிகளால் கூறப்படாத இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில்) மிகும். இஃது உயிரீற்றுப் புணரியலில் (நூற்பா.165) இடம்பெறுகிறது
பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.
விடை :
1. சுட்டுத் திரிபு – மிகும்
2. திசைப் பெயர்கள் – மிகும்
3. பெயரெச்சம் – மிகாது
4. உவமைத் தொகை – மிகும்
5. நான்காம் வேற்றுமை விரி – மிகும்
6. இரண்டாம் வேற்றுமை தொகை – மிகாது
7. வினைத்தொகை – மிகாது
8. உருவகம் – மிகும்
9. எழுவாய்த் தொடர் – மிகாது
10. எதிர்மறைப் பெயரெச்சம் – மிகாது
2. வேற்றுமைகனில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.
வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்கள் :
(i) இரண்டாம் வேற்றுமை உருபாதிய வெளிப்படையாக வருடத்தில் வல்லினம் மிகும்
எ.கா. தலையைக் காட்டு.
(ii) நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
எ.கா. எனக்குத் தெரியும்.
3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.
விடை
வல்லினம் மிகாத் தொடர்கள் :
(i) எழுவாய்த் தொடர் – தம்பி படித்தான்
(ii) பெயரெச்சம் – எழுதிய பாடல்
(iii) எதிர்மறைப் பெயரெச்சம் – எழுதாத பாடல்
(iv) வினைத் தொகை – சுடுசோறு
(v) உம்மைத் தொகை – தாய்தந்தை