தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்:அலகு II: சொல்லகராதி
பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் :
பேச்சு வழக்கு |
பிழை திருத்தம் |
அம்மா பசிக்கிது எனக்குச் சோறு வேணும். |
அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும். |
வூட்டுக்கு போகனும். |
வீட்டிற்குப் போக வேண்டும். |
வவுறு நிறையா சாப்புடு. |
வயிறு நிறைய சாப்பிடு. |
இன்னிக்கு காத்தால வாங்கிட்டு வந்தே |
இன்றைக்குக் காலையில் வாங்கி வந்தேன். |
தண்ணி கொண்டா |
தண்ணீர் கொண்டு வா. |
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ |
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள். |
நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும் |
நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும். |
அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான. |
அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான். |
வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு. |
வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார். |
புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது |
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது. |
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் |
இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல். |