பிழை திருத்துக / PILLAI THIRUTHAM TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0
PILLAI THIRUTHAM TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்:அலகு II: சொல்லகராதி 

பிழை திருத்துக:


பிழை திருத்துக. (எ.கா) ஒரு ஓர்; 

தமிழில் பிழை இல்லாமல் எழுத முடியுமா? என்று ஐயம் கொள்ளத் தேவையில்லை. மொழியின் இயல்பை உணர்ந்தும் இலக்கண விதிகளை அறிந்தும் கவனத்துடன் எழுதினால் பிழைகளைத்தவிர்க்க முடியும். சிறிதளவு முயற்சியும் பயிற்சியும் தவறில்லாமல் எழுதத் துணைபுரியும்.

சிலர் ந, ண, ன / ற, ர / ல, ள, ழ ஆகிய எழுத்துகள் பற்றித் தெளிவில்லாமல் இருக்கின்றனர். உயிர்மெய் எழுத்துகளில் வரும் மேல்விலங்கு, கீழ்விலங்கு, கொம்புகள், துணைக்கால் போன்றவற்றைப் பயன்படுத்தும் முறையிலும் கவனம் தேவை. சொல்லில் எழுத்துப் பிழை இல்லாதிருக்கலாம். ஆனால் பொருட்பிழை ஏற்பட வாய்ப்புண்டு. முடிந்தால் தரலாம் / முடித்தால் தரலாம்; கறி தின்றான் / கரி தின்றான் - இங்கே எழுத்துப்பிழையில்லை. ஆனால் பொருள் வேறுபாடு உண்டு. இடமறிந்து எழுத வேண்டும்.


தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை? 

  • எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும். 
  • இவ்வெழுத்துக்கள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எழுதும் போது தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது. 
  • வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும், எனவே நிதானமாக எழுதுவது நல்லது. 
  • கெ, கே, கொ, கோ போன்ற கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.


வாக்கியப் பிழையும் திருத்தமும் :

  • வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும்.
  • உயர்திணைப் எழுவாய் உயர்திணைப் பயனிலையைப் பெற்று வரும். அது போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின் அஃறிணை வினைமுற்றே வர வேண்டும்.
  • எழுவாய் ஐம்பால்களுள் எதில் உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.
  • கள் விகுதி பெற்ற எழுவாய், வினைமுற்றிலும் கள் விகுதி பெறும். அதே போன்று எழுவாய் ‘அர்’ விகுதி பெற்றிருந்தால் வினைமுற்றிலும் ‘அர்’ விகுதி வருதல் அவசியம்.
  • எழுவாய் ஒருமையாயின் வினைமுற்றும் ஒருமையாகவே இருக்க வேண்டும்.
  • தொடரில் காலத்தை உணர்த்தும் குறிப்புச் சொற்கள் இருப்பின் அதற்கேற்ற காலத்திலமைந்த வினைமுற்றே எழுத வேண்டும்.
  • கூறியது கூறல் ஒரே தொடரில் இடம் பெறக் கூடாது.
  • வாக்கியத்தில் உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் கலந்து வந்தால், சிறப்பு கருதின் உயர்திணைப் பயனிலைக் கொண்டும், இழிவு கருதின் அஃறிணைப் பயனிலைக் கொண்டும் வாக்கியத்தை முடிக்க வேண்டும்.
  • உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் விரவி வந்தால், மிகுதி பற்றி ஒருதிணை வினை கொண்டு முடித்தல் வேண்டும்.



6th to 10th Tamil Book:

பிழையான தொடரைக் கண்டறிக.

அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
[விடை : இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது]

பிழையான தொடரைக் கண்டறிக.

அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
ஆ) ஏதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்.
ஈ) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறியமுடியும்.
[விடை : இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.]

பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

1. அதைச் செய்தது நான் அன்று.
விடை : அதைச் செய்தது நான் அல்லேன்.
2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
விடை : பானையை உடைத்தது கண்ணன் அல்லன்.
3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை : மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்ற.
4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை : சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்.
5. பகைவர் நீவீர் அல்லர்.
விடை : பகைவர் நீவீர் அல்லீர்.


பிழை நீக்கி எழுதுக :

1. மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்
விடை : மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும்
2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்
விடை : நல்ல தமிழில் எழுதுவோம்
3. பவள விழிதான் பரிசு உரியவள்.
விடை : பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.
4. துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்
விடை :துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.
5. குழலியும் பாடத் தெரியும்
விடை :குழலிக்கும் பாடத் தெரியும்

பிழை நீக்கி எழுதுக:

1.சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
3.மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன:
விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
4 .நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
விடை : சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தனர்.


தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

1) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
விடை: என் விட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
2) தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
விடை: தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.
3) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
விடை: வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக:

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
விடை : ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
விடை : ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
விடை : அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
 4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
விடை : அது நகரத்திற்குச் செல்லும் சாலை.
5. அது ஒரு இனிய பாடல்.
விடை : அஃது ஓர் இனிய பாடல்.


பிழை நீக்குக.

பெருந்தலைவர் காமராசர் பள்ளிப்படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

விடை: 
பெருந்தலைவர் காமராசர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச்செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது, எப்போது அறையைவிட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்கு செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்து வைத்துக் கொள்வார்.


ஒலி வேறுபாடறிந்து எது சரியானது என ஆய்க

A. இராமன் இராவணனை அளித்தான்
B. இராமன் இராவணனை அழித்தான்
C. கர்ணன் குந்திக்கு வரம் அழித்தான்
D. கர்ணன் குந்திக்கு வறம் அளித்தான்

விடை: B. இராமன் இராவணனை அழித்தான்


ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக.

1. அரம் - அறம்
விடை: 
அரம் – கூர்மையான கருவி – இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.
அறம் – தர்மம் – பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.
 
2. மனம் – மணம்
விடை
மனம் – உள்ளம் – பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
மணம் – வாசனை – மல்லிகை மணம் மிக்க மலர்.


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக. 

எ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.

நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது. 

1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.
விடை : எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. 
2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். 
விடை : ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். 
3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 
விடை : வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 
4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது. 
விடை : ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது. 
5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும். 
விடை : இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்.


சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக.

மண்னர், குதிறைச் சவாரி, உர்சாகம், சிறந்தவண், மக்கலெள்ளாம், கனைப்பொளி, இறக்கக் குணம், கிராமங்கல்,

விடை:

1. மண்னர் – மன்னர்
2. குதிறைச் சவாரி – குதிரைச் சவாரி
3. உர்சாகம் – உற்சாகம்
4. சிறந்தவண் – சிறந்தவன்
5. மக்கலெள்ளாம் – மக்களெல்லாம்
6. கனைப்பொளி – கனைப்பொலி
7. இறக்கக் குணம் – இரக்கக் குணம்
8. கிராமங்கல் – கிராமங்கள்


ஒருமை பன்மை பிழையற்ற தொடர்:

1. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. நாங்கள் நூலகத்திற்குச் சென்றேன்
B. நான் நூலகத்திற்குச் சென்றோம்
C. நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம்
D. மேற்கூறிய எதுவும் இல்லை
விடை:  C. நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம்

2. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. இராணுவ வீரர்கள் நாட்டிற்குத் தன்னுயிரை ஈந்தார்
B. இராணுவ வீரர் நாட்டிற்குத் தன்னுயிரை ஈந்தனர்
C. இராணுவ வீரர்கள் நாட்டிற்குத் தன்னுயிரை ஈந்தனர்
D. மேற்கூறிய எதுவுமில்லை
விடை: C. இராணுவ வீரர்கள் நாட்டிற்குத் தன்னுயிரை ஈந்தனர்>

3. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. கண்ணகி சிலம்பை உடைத்தாள்
B. கண்ணகி சிலம்பை உடைத்தார்கள்
C. கண்ணகி சிலம்பை உடைத்தன
D. கண்ணகி சிலம்பை உடைத்தனர்
விடை: A. கண்ணகி சிலம்பை உடைத்தாள்

4. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. அவர்கள் சான்றோர்கள் அல்ல
B. அவர்கள் சான்றோர்கள் அன்று
C. அவர்கள் சான்றோர்கள் அல்லர்
D. அவர்கள் சான்றோர்கள் அல்லன்
விடை: C. அவர்கள் சான்றோர்கள் அல்லர்

5. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. மலர் மலர்ந்து மணம் பரப்பின
B. மலர்கள் மலர்ந்து மணம் பரப்பியது
C. மலர்கள் மலர்ந்து மணம் பரப்பின
D. மேற்கூறிய ஏதுவுமில்லை
விடை: C. மலர்கள் மலர்ந்து மணம் பரப்பின

6. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. கடற்கரையில் அலை மோதுகின்றது
B. கடற்கரையில் அலைகள் மோதுகின்றது
C. கடற்கரையில் அலை மோதுகின்றது
D. மேற்கூறிய எதுவுமில்லை
விடை: A. கடற்கரையில் அலை மோதுகின்றது

7. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. மாடு பயிரை மேய்ந்தன
B. மாடுகள் பயிரை மேய்ந்தது
C. மாடுகள் பயிரை மேய்ந்தன
D. மாடு மேய்ந்தன பயிரை
விடை: C. மாடுகள் பயிரை மேய்ந்தன

8. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. அவை இங்கே உள்ளது
B. அவை இங்கே உள்ளன
C. அது இங்கே உள்ளன
D. அது இங்கே உள்ளவை
விடை: B. அவை இங்கே உள்ளன

9. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. அவன் கவிஞன் அல்ல
B. அவன் கவிஞன் அன்று
C. அவன் கவிஞன் அல்லன்
D. கவிஞன் அல்ல அவன்
விடை: C. அவன் கவிஞன் அல்லன்

10. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. பஞ்சபாணடவர்கள் ஐவருமே சிறந்தவன்
B. பஞ்சபாண்வர்கள் ஐவருமே சிறந்தவர்கள்
C. பஞ்சபாண்டவர் ஐவருமே சிறந்தவன்
D. மேற்கூறிய ஏதுவுமில்லை
விடை:  B. பஞ்சபாண்வர்கள் ஐவருமே சிறந்தவர்கள்

11. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. உன் வீடு எங்கே உள்ளன?
B. உன் வீடுகள் எங்கே உள்ளன?
C. உன் வீடுகள் எங்கே உள்ளது?
D. மேற்கூறிய எதுவுமில்லை
விடை:  B. உன் வீடுகள் எங்கே உள்ளன?

12. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. நல்லவைகளும் கெட்டவைகளும் உலகில் உண்டு
B. நல்லவைகளும் கெட்டதும் உலகங்களில் உண்டு
C. நல்லதும் கெட்டவைகளும் உலகத்தில் உண்டு
D. நல்லவைகளும் கெட்டவைகளும் உலகத்தில் உள்ளன
விடை:  D. நல்லவைகளும் கெட்டவைகளும் உலகத்தில் உள்ளன

13. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A. புலி வந்ததால் எருதுகள் ஓடியது
B. புலி வந்தன எருதுகள் ஓடின
C. புலி வந்தது எருதுகள் ஓடின
D. புலி வந்ததும் எருதுகள் ஓடியது
விடை:  C. புலி வந்தது எருதுகள் ஓடின

14. நான் வாங்கிய நூல் இது அல்ல – ஒருமை பன்மை பிழை நீக்கி எழுது
A. நான் வாங்கிய நூல் இது அன்று
B. நான் வாங்கிய இது நூல் அல்ல
C. நான் வாங்கியவை நூல் இது அல்ல
D. நான் வாங்கிய நூல்கள் இது அல்ல
விடை:  A. நான் வாங்கிய நூல் இது அன்று


மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள், அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.


விடை
சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல் கண்விழித்தாள். பூக்கொய்ய நேரமாகிவிட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.


மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
விடை: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர். 
2. கயல்பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.
விடை :  கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள். 
3. நேற்று தென்றல் காற்று அடித்தது.
விடை :  நேற்று தென்றல் வீசியது
 4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
விடை : தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்)
5. அணில் பழம் சாப்பிட்டது
விடை : அணில் பழம் தின்றது 
6 .கொடியிலுள்ள மலரை எடுத்து வா.
விடை : கொடியில் உள்ள மலரைக் கொய்து வா. (அல்லது) கொடியில் உள்ள பூக்களைப் பறித்து வா?


சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கோழி ………………………. (கூவும் / கொக்கரிக்கும்)

2. பால் …………………….. (குடி / பருகு)
3. சோறு ……………………… (தின்/ உண்)
4. பூ ………………………. (கொய் / பறி)
5. ஆ ……………………. (நிரை / மந்தை )

விடை : 

1. கொக்கரிக்கும்
2. பருகு
3. உண்
4. கொய்
5. நிரை


தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
விடை : வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன. 
2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
விடை : முருகன் சோறு உண்டு பால் பருகினான். 
3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார். 
விடை : கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான். 
4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
விடை : வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன். 
5. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
விடை : ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன. 
6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
விடை : பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர். 


தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.

பறவைகளின் ஒலிமரபு:

● ஆந்தை அலறும்
● காகம் கரையும்
● சேவல் கூவும்
● குயில் கூவும்
● கோழிகொக்கரிக்கும்
● புறா குனுகும்
● மயில் அகவும்
● கிளி பேசும்
● கூகை குழறும்
 
தொகை மரபு:

● மக்கள் கூட்டம்
● ஆநிரை
● ஆட்டு மந்தை
 
வினைமரபு:

● சோறு உண்
● தண்ணீர் குடி
● பூக் கொய்
● முறுக்குத் தின்
● கூடை முடை
● இலை பறி
● சுவர் எழுப்பு
● பால் பருகு
● பானை வனை


மரபு வழூஉச்சொல் திருத்தம்

1. பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
A. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினம்
B. பட்டனம் என்பது காவிரிப் பூம்பட்டணம்
C. பட்டிணம் என்பது காவிரிப் பூம்பட்டிணம்
D. பட்டனம் என்பது காவரிப் பூம்பட்டனம்
விடை: A. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினம்

2. மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A. அண்ணாக் கயிறு விக்கிறான்
B. அரைஞான் கயிறு விக்கிறான்
C. அரைஞாண் கயிறு விற்கிறான்
D. அண்ணாக் கயிறு விற்கிறான்
விடை: C. அரைஞாண் கயிறு விற்கிறான்

3. மரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் குறிப்பிடுக
A. அவரக்கா கூட்டம் கூட்டமாய்க் காய்க்கும்
B. அவரக்காய் கொத்துக் கொத்தாய் காய்க்கும்
C. அவரைக்காய் கூட்டம் கூட்டமாய்க் காய்க்கும்
D. அவரைக்காய் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்
விடை: D. அவரைக்காய் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்

4. பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
A. குளகரையில் கொக்கு பறந்து சென்றது
B. குளக்கரையில் கொக்குப் பறந்துச் சென்றது
C. குளக்கரையில் கொக்கு பறந்து சென்றது
D. குளக்கரையில் கொக்கு பறந்துச் சென்றது
விடை: C. குளக்கரையில் கொக்கு பறந்து சென்றது

5. மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A. மாதவன் புழக்கடைப் பக்கம் சென்று இடது பக்கம் திரும்பினான்
B. மாதவன் புழைக்கடைப் பக்கம் சென்று இடப்பக்கம் திரும்பினான்
C. மாதவன் புறக்கடைப்பக்கம் சென்று இடப்பக்கம் திரும்பினான்
D. மாதவன் புறக்கடைப்பக்கம் சென்று இடதுபக்கம் திரும்பினான்
விடை: C. மாதவன் புறக்கடைப்பக்கம் சென்று இடப்பக்கம் திரும்பினான்

6. வழூஉச் சொற்களை நீக்குக
A. தென்னை இலையால் கீத்து பின்னினான்
B. தென்ன ஓலையால் கீத்து பின்னினான்
C. தென்னை இலையால் கீற்று முடைந்தான்
D. தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்
விடை: D. தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்

7. மரபுப் பிழையை நீக்குக
A. குயில் கூவக் காகம் கரைந்தது
B. குயில் கத்தக் காகம் கூவியது
C. குயில் கூவக் காகம் கத்தியது
D. குயில் கத்தக் காகம் காகா என்றது
விடை: A. குயில் கூவக் காகம் கரைந்தது

8. சரியான கூற்று எது?
A. கிணரின் சுவரில் ஓர் பாம்பு உள்ளது.
B. கிணறின் சுவற்றில் ஒரு பாம்பு உள்ளது
C. கிணற்றின் சுவரில் ஓர் பாம்பு உள்ளது
D. கிணற்றின் சுவரில் உரு பாம்பு உள்ளது
விடை: C. கிணற்றின் சுவரில் ஓர் பாம்பு உள்ளது

9. சரியானது எது?
A. யானைக் கொட்டில் குதிரைக் கூடம்
B. யானைத் தொழுவம் குதிரைக் கூடம்
C. யானைக் கூடம் குதிரைத் தொழுவம்
D. யானைக் கூடம் குதிரைக் கொட்டில்
விடை: D. யானைக் கூடம் குதிரைக் கொட்டில்

10. பிழையற்ற வாக்கியம் எது?
A. வருவதும் போவதும் கிடையா
B. வருவதும் போவதும் கிடையாது
C. வருவதும் போவதும் கிடையது
D. வருவதும் போவதும் கிடையாயது
விடை: A. வருவதும் போவதும் கிடையா




பிழை திருத்துக -.கா.

தங்கை வருகிறது

பிழை

தங்கை வருகிறாள்

திருத்தம்

தம்பி வந்தார்

பிழை

தம்பி வந்தான்

திருத்தம்

மாணவர்கள் எழுதினர்

பிழை

மாணவர்கள் எழுதினார்கள்

திருத்தம்

ஆசிரியர் பலர் வந்தார்கள்

பிழை

ஆசிரியர் பலர் வந்தனர்

திருத்தம்

மங்கையர்க்கரசியார் பேசினாள்

பிழை

மங்கையர்க்கரசியார் பேசினார்

திருத்தம்

என் எழுதுகோல் இதுவல்ல

பிழை

என் எழுதுகோல் இதுவன்று

திருத்தம்

அவன் மாணவன் அல்ல

பிழை

அவன் மாணவன் அல்லன்

திருத்தம்

உடைகள் கிழிந்து விட்டது

பிழை

உடைகள் கிழிந்து விட்டன

திருத்தம்

செழியன் இன்று ஒரு புதிய  நூல் ஒன்றை வாங்கினான்

பிழை

செழியன் இன்று புதிய நூல் ஒன்று வாங்கினான்

திருத்தம்

தலைவர் நாளை வந்தார்

பிழை

தலைவர் நாளை வருவார்

திருத்தம்

ஆமைகள் வேகமாக ஓடாது

பிழை

ஆமைகள் வேகமாக ஓடா

திருத்தம்

நதிகள் தோன்றுமிடத்தில் சிறியதாய் இருக்கும்

பிழை

நதிகள் தோன்றுமிடததில் சிறியனவாய் இருக்கும்

திருத்தம்

தலைவர் தன் தொண்டர்களுக்கு நன்றி கூறினார்

பிழை

தலைவர் தம் தொண்டர்களுக்கு நன்றி கூறினார்

திருத்தம்

ஒவ்வொரு ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது.

பிழை

ஒவ்வோர் ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது.

திருத்தம்

தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தொன்மையானது

பிழை

தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் தொன்மையானது

திருத்தம்

மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர்

பிழை

மூடனும் மாடும் குளத்தில் குளித்தன

திருத்தம்

ஆற்று வெள்ளத்தில் மக்களும், மரங்களும், குடிசைகளும், ஆடு மாடுகளும் மிதந்து சென்றனர்.

பிழை

ஆற்று வெள்ளத்தில் மக்களும், மரங்களும், குடிசைகளும், ஆடு மாடுகளும் மிதந்து சென்றன.

திருத்தம்

ஆறு காலிழந்த ஆண்களும், நான்கு கையிழந்த பெண்களும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டன.

பிழை

காலிழந்த ஆண்கள் அறுவரும், கையிழந்த பெண்கள் நால்வரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டன.

திருத்தம்

 


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)