பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோ / PLUTO - plug-and-train robot

TNPSC PAYILAGAM
By -
0
 
பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோ / PLUTO - plug-and-train robot


  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
  • ‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம் வழங்கப்பட்டது. 
  • த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் சந்தையில் குறிப்பிட்ட அளவு இடைவெளியை நிவர்த்தி செய்கிறது. மருத்துவமனைகள், வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப விலைகுறைந்த மறுவாழ்வுத் தீர்வுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த புதுமையான சாதனம் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ‘ப்ளூட்டோ’ இந்தியாவில் உள்ள வீடுகளில் சோதிக்கப்பட்ட முதலாவது ஒரே உள்நாட்டு ரோபோவாகும். தீவிர சிகிச்சையை அணுகக் கூடியதாக அளிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் ப்ளூட்டோவினால் ஏற்கனவே 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
  • ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் (முதன்மை ஆராய்ச்சியாளர்), ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை மற்றும் வேலூர் சிஎம்சி உயிரிபொறியியல் துறை ஆகியவற்றில் பிஎச்டி பெற்ற டாக்டர் அரவிந்த் நேருஜி, சிஎம்சி வேலூர உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சிவகுமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் இந்த சாதனத்தைக் கண்டுபிடித்தவர்கள். 
  • காப்புரிமை பெறப்பட்ட இத்தொழில்நுட்பம் துல்லியமான சிகிச்சை இயக்கங்களையும், நிகழ்நேர தரவுகளையும் வழங்குகிறது. பக்கவாதம், முதுகுத்தண்டு காயம், தண்டுவட மரப்புநோய் (multiple sclerosis), பார்கின்சன் நோய், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நோயாளிகள் உள்ளிட்டோருக்கு சிறந்த பயனளிக்கிறது.
  • மறுவாழ்வு மையங்கள், புறநோயாளிகளுக்கான மருத்துவமனைகள், பெரிய மருத்துவமனைகள், நோயாளிகளின் இல்லங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த இந்த சாதனம் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். பயனுள்ள அதே நேரத்தில் குறைந்த விலையில் கை மறுவாழ்வுத் தீர்வுகள் கிடைக்கச் செய்வதில் இருந்து வந்த இடைவெளி இதனால் குறைகிறது. விலை குறைவாக இருப்பது மட்டுமின்றி கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதால் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக அமைவது உறுதி.



பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோ / PLUTO - (plug-and-train robot )சிறப்பம்சங்கள்:

  • படுக்கை அல்லது சக்கர நாற்காலி அடிப்படையிலான சிகிச்சையை அனுமதிக்கும் சிறிய, எடுத்துச் செல்லக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வீடு- மருத்துவமனைப் பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது.
  • கை செயல்பாடுகளுக்கான பல்வேறு சிகிச்சைக் கருவிகளைக் கொண்ட பிளக்-அண்ட்-டிரெய்ன் (Plug-and-train) செயல்பாட்டுமுறை காரணமாக பயன்பாடு, நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது.
  • பிளக்-இன் செயல்பாட்டுடன் கூடிய கியர் அற்ற டிசி மோட்டார் சிகிச்சைக் கருவிகளின் தடையற்ற இணைப்பு- செயல்பாட்டை எளிதாக்குகிறது.
  • உயர்தரத்துடன், மலிவு விலையில் உற்பத்திசெய்யப்படுவதுடன் சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் எளிதாகவும், குறைந்த விலையிலும் கிடைப்பதை உறுதி செய்கிறது.
  • பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு, மருத்துவமனைகள், மறுவாழ்வு அமைப்புகள், வீடுகளில் பரவலாக பயன்படுத்த ஏதுவாக உள்ளது.
  • பக்கவாதம் அல்லது கை முடக்கம் போன்ற நிலைமைகளுக்கு ஆரம்பகால மறுவாழ்வு நிலைகளை நிவர்த்தி செய்யும் வடிவமைப்பு, விரைவான செயல்பாட்டு முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.

SOURCE : PIB 




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)