இலக்கணம்-சந்திப்பிழை
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
சந்திப்பிழை நீக்கி எழுதுதல்
எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால், எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம்.
வல்லினம் மிகும் இடங்கள்
1.க், ச், த், ப் என்ற நான்கு வல்லின மெய்யெழுத்துக்கள் மட்டுமே உயிரெழுத்துடன் கூடி மொழிக்கு முதலில் வரும்.
இவ்வெழுத்துக்கள் ஒன்றை முதலாகக் கொண்ட சொற்கள் நிலைமொழியோடு சேரும்போது சிலவிடங்களில் இம்மெய்யெழுத்து மிகுந்து வரும்.
எ.கா.
சட்டை + துணி = சட்டைத்துணி
2. “அ, இ, உ” என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், “எ” என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
அ + சிறுவன் = அச்சிறுவன்
இ + சிறுவன் = இச்சிறுவன், உச்சிறுவன்
எ + பையன் = எப்பையன்
3. “அந்த, இந்த, அங்கு, இங்கு, ஆண்டு, ஈண்டு, அப்படி, இப்படி” என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், “எந்த, எப்படி, எங்கு” என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.
அந்த + சாலை = அந்தச்சாலை
இங்கு + பேனான் = இங்குப்போனார்
ஆண்டு + சென்றான் = ஆண்டுச்சென்றான்
அப்படி + செய் = அப்படிச்செய்
எங்கு + பார்த்தாய் = எங்குப்பார்த்தாய்
எப்படி + செய்தாய் = எப்படிச்செய்தாய்
எந்த + செடி = எந்தச்செடி
– யாங்கு, யாண்டு பின் மிகும்
– அவ்வகை, இவ்வகை, எவ்வகை பின் மிகும்
– அத்துணை, இத்துணை, எத்துணை பின் மிகும்.
4. இரண்டாம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
நூலை + படி = நூலைப்படி
பாலை + குடி = பாலைக்குடி
5. நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
சோலைக்கு + சென்றான் = சோலைக்குச் சென்றான்
புலவர்க்கு + காெடுத்தான் = புவலர்க்குக் கொடுத்தான்
6. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனுமும் உடன் தொக்க தொகையில் மிகும்
தண்ணீர் + குடம் = தண்ணீர்க் குடம்
மலர் + கூடை = மலர்க்கூடை
7. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனுமும் உடன் தொக்க தொகையில் மிகும்
மரம் + பெட்டி = மரப்பெட்டி
இரும்பு + சாவி = இரும்புச்சாவி
8. நான்காம் வேற்றுமை உருபும் பயனுமும் உடன் தொக்க தொகையில் மிகும்
சட்டை + துணி = சட்டைத்துணி
குடை + கம்பி = குடைக்கம்பி
9. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனுமும் உடன் தொக்க தொகையில் மிகும்
அடுப்பு + புகை = அடுப்புப்புகை
விழி + புனல் = விழிப்புனல்
10. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
நீலம் + கடல் = நீலக்கடல்
உண்மை + செயல் = உண்மைச்செயல்
11. இருபெயரொட்டு பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லி + பூ = மல்லிப்பூ
12. உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
மலர் + கண் = மலர்க்கண்
13. வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்
எடுத்து + பார்த்தேன் = எடுத்துப் பார்த்தேன்
பட்டு + சேலை = பட்டுச்சேலை
(எட்டு, பத்து ஆகிய வ.தொ. குற்றியலுகரம்
14. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் மிகும்.
மருந்து + கடை = மருந்துக்கடை
பண்பு + தொகை = பண்புத்தொகை
15. முற்றியலுகர சொற்களின் பின் வல்லினம் மிகும்
திரு + குறள் = திருக்குறள்
பொது + தேர்வு = பொதுத்தேர்வு
16. ட, ற ஒற்று இரட்டிக்கும் உயிர்த்தொடர், நெடில் தொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்
திரு + குறள் = திருக்குறள்
பொது + தேர்வு = பொதுத்தேர்வு
17. ஓரெழுத்து ஒருமொழியின் பின் வல்லினம் மிகும் (சிலவற்றில் மிகாது)
பூ + கடை = பூக்கடை
கை + கடிகாரம் = கைக்கடிகாரம்
18. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் மிகும்.
அழியாப் + புகழ் = அழியாப்புகழ்
வளையா + செங்கோல் = வளையாச் செங்கோல்
உலவா + தென்றல் = உலவாத்தென்றல்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை
19. இடை, உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
இனி + காண்போம் = இனிக்காண்போம்
சால + சிறந்தது = சாலச்சிறந்தது
தவ + பெரிது = தவப்பெரியது
தனி + சொல் = தனிச்சொல்
மற்று, மற்ற, மற்றை சொற்களின் பின் மிகும்
மற்று + காணலாம் = மற்றுக்காணலாம்
மற்ற + தோழர்கள் = மற்றத்தோழர்கள்
மற்றை + செல்வம் = மற்றச் செல்வம்
20. அரை, பாதி என்னும் எண்ணுப் பெயர்ச் சொற்களின் பின் மிகும்
அரை + காணி = அரைக்காணி
பாதி + பங்கு = பாதிப்பங்கு
21. என, ஆக என்னும் சொற்களுக்கு முன் வரும் வல்லினம் மிகும்.
என + கூவினான் = எனக்கூவினான்
ஆக + சொன்னான் = ஆகச்சொன்னான்
22. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகும்.
நன்றாய் + பாடினாள் = நன்றாய்ப்பாடினாள்
போய் + கேட்டாள் = போய்க்கேட்டாள்
23. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க, வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகும்.
நிலா + சோறு = நிலாச்சோறு
மழை + காலம் = மழைக்காலம்
பனி + துளி = பனித்துளி
24. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
தாமரை + பூ = தாமரைப்பூ
குதிரை + கால் = குதிரைக்கால்
25. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்
வழி + சென்றார் = வழிச்சென்றார்
26. அகர, ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
தேட + சொன்னாள் = தேடச்சொன்னாள்
என + கூறு = எனக்கூறு
27. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
முன்னர் + கண்டோம் = முன்னர்க் கண்டோம்
பின்னர் + காண்போம் = பின்னர்க் காண்போம்
28. யகர மெய்யீற்று வினையெச்சத்தின் பின் மிகும்
வருவதாய் + கூறினார் = வருவதாய்க் கூறினார்
விரைவாய் + போ = விரைவாய்ப் போ
29. இகரவீறு்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
ஓடி + சென்றாள் = ஓடிச்சென்றாள்
தேடிப் + பார்த்தோம் = தேடிப்பார்த்தோம்
30. ட, ற, இரட்டித்து வரும் நெடில்தொடர், உயிர்த்தொடர், குற்றியலுகரங்களுக்கு பின் வல்லினம் மிகும்.
வீட்டு + சுவர் = வீட்டுச்சுவர்
ஆற்று + பாசம் = ஆற்றுப்பாசனம்
முரட்டு + காளை = முரட்டுக்காளை
வல்லினம் மிகா இடங்கள்:
1. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களின் பின் மிகாது
அத்தனை + படங்களா? = அத்தனை படங்களா
2. வினா எழுத்துக்களின் பின் மிகாது (அ, ஓ, ஏ, யா)
அவனா + சொன்னான் = அவனா சொன்னான்?
அவனா + கொடுத்தான் = அவனா கொடுத்தான்
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்
3. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
செய் + தவம் = செய்தவம்
அலை + கடல் = அலைகடல்
4. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் முன் மிகாது.
ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்
5. இரட்டைக்கிளவியிலும், அடுக்குத்தொடரிலும் மிகாது.
சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு
6. வியங்கோள் வினைமுற்றுகளுக்குப் பின் மிகாது.
கற்க + கசடற = கற்ககசடற
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
7. இரண்டு வடசொற்கள் சேரும்போது மிகாது.
சங்கீத + சபா = சங்கீதசபா
8. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர மற்ற பெயரெச்சங்களுக்குப் பின் மிகாது.
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்
9. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் மிகாது
வள்ளுவர் + கருத்து = வள்ளுவர் கருத்து
10. சில வினையெச்சத் தொடரில் மிகாது.
வந்து + பேனான் = வந்துபேனான்
செய்து + கொடுத்தாள் = செய்து கொடுத்தாள்
11. சில வினைமுற்றுத் தொடரில் மிகாது.
வந்தது + பறவை = வந்தது பறவை
சென்றன + குதிரைகள் = சென்றன குதிரைகள்
12. சில எழுவாய்த் தொடரில் மிகாது
சீதை + சென்றாள் = சீதை சென்றாள்
கொக்கு + பறந்தது = கொக்கு பறந்தது (வன்றொடர்)
13. குற்றியலுகரம், எழுவாய்த்தொடரில் மிகாது, உகர வீற்று வினையெச்சங்கள் முன் மிகாது.
வந்து + பார்த்தான் = வந்து பார்த்தான்
14. வல்லின றகர, டகரத்தின் பின் ஒற்று வராது.
15. உம்மைத் தொகையில் மிகாது.
தாய் + தந்தை = தாய்தந்தை
மார்கழி + தை = மார்கழிதை
16. அவை, இவை என்னும் சொற்களின் முன்வரும வல்லினம் மிகாது.
அவை + போயின = அவைபோயின
இவை + செய்தன = இவைசெய்தன
17. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது.
வரும்படி + கூறினாள் = வரும்படி கூறினாள்
போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான்
18. அது, இது என்னும் சுட்டுகளின் பின்னும் எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின்னும் மிகாது.
அது + போயிற்று = அதுபோயிற்று
இது + பிறந்தது = இது பிறந்தது
எது + கண்டது = எது கண்டது
யாது + சொல் = யாது சொல்
19. சில, பல எனும் சொற்களின் முன் வலி மிகாது.
பல + குடிசைகள் = பல குடிசைகள்
சில + சொற்கள் = சில சொற்கள்
20. விளிப்பெயர் பின் மிகாது
தம்பி போ
21. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிகாது.
தமிழ் + கற்றார் = தமிழ்கற்றார்
துணி + கட்டினான் = துணி கட்டினான்
22. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்களின் பின் வலி மிகாது.
அவ்வளவு + பெரிது = அவ்வளவு பெரிது
இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா
எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு
23. அஃறிணைப் பன்மை முன் வரும் வல்லினம் மிகாது.
பல + பசு = பலபசு
சில + கலை = சிலகலை
24. ஏவல்வினை முன் வரும் வல்லினம் மிகாது
வா + கலையரசி = வா கலையரசி
எழு + தம்பி = எழு + தம்பி
25. மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஒடு, ஓடு ஆகியவற்றின் பின்வரும் வல்லினம் மிகாது.
கோவலனோடு + கண்ணகி வந்தாள் = கேவலனோடு கண்ணகி வந்தாள்
துணிவோடு + செல்க = துணிவோடு செல்க
26. செய்யிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சத்தி பின் வல்லினம் மிகாது
காணிய + சென்றேன் = காணிய சென்றேன்
உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான்
27. பொதுப்பெயர், உயர் திணைப் பெயர்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது
தாய் + கண்டாள் = தாய் கண்டாள்
கண்ணகி + சீறினள் = கண்ணகி சீறினள்
28. ஐந்தாம் வேற்றுமையின் சொல் ஊருபுகளான இருந்து, நின்று என்பவைகளின் பின் வல்லினம் மிகாது.
மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்
மலையின்று + சரிந்தது =மலையினின்று சரிந்தது
29. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் கள், தல் என்னும் விகுதிகள் வரும் போது மிகாது.
எழுத்து + கள் = எழுத்துக்கள்
போற்று + தல் = போற்றுதல்
30. அன்று, இன்று, என்று எனனும் சொல்கள் பின் மிகாது.
அன்று + கொடுத்தேன் = அன்று கொடுத்தேன்
ஆறாம் வேற்றுமைத் தொகையில் பயன் தரும் சொல் மறைந்து வருவதில்லை.