அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் / SOLLAI THAKUNTHA IDATHIL SERTHAL TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

  SOLLAI THAKUNTHA IDATHIL SERTHAL TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்:அலகு II: சொல்லகராதி 

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் :

(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)


இணைப்புச்சொற்கள்:

  • இணைப்புச்சொற்கள், நாம் பேசும் பேச்சில் இயல்பாகவே இடம்பெறுகின்றன. இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திப் பேசவும் எழுதவும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. நாம் தங்குதடையின்றிப் பேசவும் எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன.
  • தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர். தொடர்களில் பயன்படும் 

சில இணைப்புச்சொற்கள் பின்வருமாறு:

அதனால், அப்படியானால், அல்லது, அவ்வாறெனில், ஆனால், ஆகையால், ஆகவே, ஆதலால், ஆயினும், இருந்தபோதும், உம், எனவே, எனில், ஏனெனில், எவ்வாறெனில்.



அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் :

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி புத்தகத்தில் (6th to 10 th Std Tamil Bpok) இருந்து எடுக்கப்பட்டதே.


'அதனால்' என்பது

அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) உரிச்சொல்
ஈ) இணைப்புச்சொல்
[விடை : ஈ) இணைப்புச்சொல்]
 
கருமேகங்கள் வானில் திரண்டன ………………..மழைபெய்யவில்லை .இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச்சொல்

அ) எனவே
ஆ) ஆகையால்
இ) ஏனெனில்
ஈ) ஆயினும்
[விடை : ஈ) ஆயினும்]
 
கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ………… அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான்.

அ) அதனால்
ஆ) ஆதலால்
இ) இருந்தபோதிலும்
ஈ) ஆனால்
[விடை : ஈ) ஆனால்]


கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக.


1. நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். (உம்)

   விடை : நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம்.
 
2. வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை . (ஆனால்)
    விடை : வள்ளி எழுதி முடித்துவிட்டாள். ஆனால் எழிலி எழுதவில்லை.
 
3. பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. (அதனால்)

    விடை :பெருமழை பெய்தது. அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
 
4. முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு உடல்நலமில்லை. (ஏனெனில்)
 விடை : முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனெனில் அவனுக்கு உடல்நலமில்லை.
 
5. அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். (ஆகவே)
    விடை : அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. ஆகவே கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும்.


கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான இணைப்புச்சொற்களை இணைத்து எழுதுக.


(ஆனால்அதனால்ஏனெனில்ஆகையால்எனவேஆகவேபிற)

அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஆனால்சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ஏனெனில்அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. ஆகையால்அதனைக் கண்டு பிற விலங்குகள் அஞ்சின. எனவேஅது தனியாகக் குகையில் வசித்தது. ஆனால் அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. அதனால் குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் பிற விலங்குகள் அஞ்சியோடின. ஏனெனில்அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா?


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)