சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் / SORKALAI INAITHU PUTHIYASOL URUVAKUTHAL TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

  SORKALAI INAITHU PUTHIYASOL URUVAKUTHAL TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்:அலகு II: சொல்லகராதி 

சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்:

(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்)

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் ( சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்) பள்ளி புத்தகத்தில் (6th to 10 th Std Tamil Bpok) இருந்து எடுக்கப்பட்டதே.


கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

  • மா – மாவிலை, மாமரம், மாங்காய்
  • தேன் – மலர்த்தேன், தேன்சிட்டு, தேன்கூடு
  • மலர் – தேன்மலர்
  • செம்மை – சேயிலை, செங்குருவி, செந்தேன்
  • சிட்டு – சிட்டுக்குருவி, தேன்சிட்டு
  • கனி – மாங்கனி, கனிமரம், தேன்கனி
  • குருவி – சிட்டுக்குருவி, குருவிக்கூடு
  • இலை – மாவிலை
  • காய் – மாங்காய், காய்கனி
  • கூடு – தேன்கூடு, குருவிக்கூடு
  • முட்டை – குருவிமுட்டை
  • மரம் – மாமரம், செம்மரம்

கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

  • கரும்பு – கரு, கம்பு
  • கவிதை – கவி, விதை, கதை, தை
  • பதிற்றுப்பத்து – பதி, பத்து, பற்று
  • பரிபாடல் – பரி, பாடல், பா, பால், பாரி

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

நூல்  மொழி  கோல்  மீன்  நீதி  எழுது

கண்  வெளி  தமிழ்   மணி  மாலை  விண்

(எ.கா.) விண்மீன்

விடை : விண்மீண் , தமிழ்மணி ,மொழிநூல் ,மீன்கண்,தமிழ்மொழி , தமிழ்மாலை ,எழுதுகோல் ,தமிழ்நூல் ,கண்மணி , விண்வெளி ,நீதிநூல், மணிமாலை


இரண்டு சொற்கனை இணைத்துப் புதிய சொற்கனை உருவாக்கு. 

 விடை : 

வடக்கு உண்டு ,இல்லை - வடக்குண்டு , வடக்கில்லை
பந்து உண்டு ,இல்லை - பந்துண்டு, பந்தில்லை
பாட்டு - உண்டு ,இல்லை - பாட்டுண்டு , பாட்டில்லை
எனக்கு -உண்டு ,இல்லைனக்குண்டு எனக்கில்லை 

கண் அழகு உண்டு கண்ணழகு ,கண்ணுண்டு
மண் அழகு உண்டு மண்ணழகு ,மண்ணுண்டு
விண் அழகு உண்டு விண்ணழகு ,விண்ணுண்டு 
பண் அழகு உண்டு  பண்ணழகு ,  பண்ணுண்டு


கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

பல் 
மின்          உண்டு இல்லை 
மண்

விடை:

1. பல் + ல் + உண்டு = பல்லுண்டு
பல் + ல் + இல்லை = பல்லில்லை .
 
2. மின் + ன் + உண்டு = மின்னுண்டு
மின் +ன் + இல்லை = மின்னில்லை
 
3. மண் + ண் + உண்டு = மண்ணுண்டு
மண் + ண் + இல்லை = மண்ணில்லை.


சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக.


(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)

புதிய சொற்கள்:

தேன்மழை; மணிவிளக்கு; மழைத்தேன்; விண்மணி; மணிமேகலை; பொன் விலங்கு; செய்வான்; வான்மழை; பொன்மணி; பொன்விளக்கு; பூமழை; பூமணி; பூவிலங்கு.


கலங்கரை விளக்கம் - இச்சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குக:

விடை : கலம் ,கலங்கரை விளக்கம் – கலம், கரை, கலக்கம், விளக்கம்.



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)