2025 ஜனவரி 22 செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது:
- செல்வமகள் சேமிப்புத் திட்டம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் அதிகாரமளித்தலின் அம்சமாகத் திகழ்கிறது. இது அவர்களின் கனவுகள், விருப்பங்களுக்கான அரசின் உறுதியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரி 22 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்த ஆண்டு 2025 ஜனவரி 22 செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது. குடும்பங்கள் தங்கள் மகள்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றன.
- அதன்படி, 2024 நவம்பர் நிலவரப்படி 4.1 கோடிக்கும் அதிகமான செல்வமகள் சேமிப்பு திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் சமமான மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இயக்கத்தையும் குறிக்கிறது.
கணக்கைத் தொடங்குதல்:
பெண் குழந்தை பிறந்தது முதல் அவள் 10 வயதை அடையும் வரை இந்த இந்தக் கணக்கைத் தொடங்கலாம். கணக்கைத் தொடங்கும் காலம் முதல் முதிர்ச்சி / கணக்கை நிறைவு செய்யும் காலம் வரை இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு பெண் குழந்தையும் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவர் ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பெற்றோர்கள் அதிக பட்சமாக தங்களின் இரணடு பெண் குழந்தைகளுக்கு கணக்குகளைத் தொடங்கலாம். இருப்பினும், இரட்டையர்கள் அல்லது ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தால் அதிக கணக்குகள் தொடங்க விதிவிலக்கு தரப்படும். இந்த கணக்கை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். கணக்கைத் தொடங்குவதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவை:
• செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்கும் படிவம்
• பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
• அடையாளச் சான்று
• குடியிருப்புச் சான்று
வைப்புத்தொகை:
பெற்றோர் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திலும் அல்லது நியமிக்கப்பட்ட வணிக வங்கிக் கிளையிலும் பெண்களுக்கான செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்ச தொடக்க வைப்புத்தொகை ரூ. 250 ஆகும். மொத்த வருடாந்திர வைப்புத்தொகை வரம்பு ரூ.1,50,000 ஆகும். இதற்கு அதிகப்படியான தொகைக்குவட்டி அளிக்கப்படாது. திருப்பித் தரப்படும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை வைப்புத்தொகை செலுத்தலாம்.
SOURCE : PIB