தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் / T. P. MEENAKSHISUNDARAM TNPSC NOTES

TNPSC PAYILAGAM
By -
0

T. P. MEENAKSHISUNDARAM TNPSC NOTES


தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (1901-1980)

(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]-தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்)


அறிமுகம்:

  • தென்பட்டினம் பொன்னுசாமியின் திருமகனாகப் பிறந்த தெ.பொ.மீனாட்சி-சுந்தரனார், தமிழக மக்களால் 'தெ.பொ.மீ.' என்று மதிப்போடு அழைக்கப் பெற்றவர். 

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை
  • தந்தை = பொன்னுசாமி கிராமணி
  • ஏறக்குறைய எண்பது ஆண்டுக் காலம் (8.1.1901 - 27.8.1980) தமிழ் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர்: 

தெ பொ மீனாட்சி சுந்தரனார் குறிப்பு:

  • 'பன்மொழிப் புலவர்' (குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்), 'பல்கலைச் செல்வர்' (திருவாவடுதுறை ஆதீனம்) , 'பெருந்தமிழ்மணி'(சிவபுரி சன்மார்க்க சபை) , 'குருதேவர்', 'பத்மபூஷண்', 'கலைமாமணி' ,நடமாடும் பல்கலைக்கழகம் (திரு.வி.க) முதலான பல்வேறு சிறப்புப் பெயர்களாலும் பட்டங்களாலும் சிறப்பிக்கப்பட்டவர். 
  • சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மென், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் செயலர், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்-கழகத்தின் மொழியியல் துறைத் தலைவர், மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர், திராவிட மொழியியல் கழகத்தின் முதுநிலை ஆய்வாளர், ஆழ்நிலைத் தியானத்தின் தேசியக் குழு உறுப்பினர் -எனப் பல்வேறு பொறுப்புகளில் வீற்றிருந்து தமிழ்நாட்டுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியவர். 
  • சட்டம், வரலாறு, உளவியல், தத்துவம், இலக்கியம், இலக்கணம், மொழியியல், ஆன்மிகம் முதலான பல்வேறு அறிவுத் துறைகளில் பழுத்த புலமை பெற்றிருந்தவர். அவருக்கு அன்பும் அறிவும் குழைத்து ஊட்டி வளர்த்த அவரது தமையனார் சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலரைத் தமிழ் கூறு நல்லுகம் நன்கறியும்.
  • பன்மொழி புலவர், பல்கலைவித்தகர், சங்க இலக்கிய வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவர். தன் முப்பத்தி ஆறாம் வயதிலேயே பன்மொழிப் புலவர் எனும் பட்டம் ஈன்ற பெருமகனார்.
  • இவர் தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றிப் பெற்றார்
  • சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்
  • அரிஜனங்களுக்கு இரவுப்பள்ளி தொடங்கினார்
  • மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார்
  • சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்கிய பொது அங்குத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்
  • இவர் பத்மபூஷன் விருதும், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்
  • 1947 பாண்டிச்சேரி பள்ளியை நிறுவியவர் - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். 1977 ல் பத்மபூசன், 1978 ல் கலைமாமணி விருதும் பெற்றார். 
  • 1920 இல் பி.ஏ. 1922 இல் பி.எல். 1924 இல் எம்.ஏ. (வரலாறு) பெற்றார். மேலும் எம்.ஒ.எல். பட்டம் பெற்றார். தமிழ் வித்துவான் தேர்வுக்குரிய முன்னிலைத் தேர்வு இறுதித் தேர்வு இரண்டையும் ஒருசேர எழுதி மாநிலத்தில் முதல்வராக வெற்றி பெற்றார்.
  • 1923 இல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞாரனார். 
  • நாட்டு விடுதலைக்காகப் போராடி 1944 இல் சிறை சென்றார் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். · 
  • 1916 இல் அரிஜனங்களுக்கு இரவுப்பள்ளிக் கூடம் நடத்தியவர் - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். · 
  • 1925 அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவர் - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் · 
  • 1944-1946 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் பேராசிரியர். 1958 இல் துறைத் தலைவர் - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்.
  • மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றியவர் (Centre Advanced Study in Linguistics) -தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். 
  • 1961 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்கியபோது அங்கத் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார். 
  • 1973-74 திருவேங்கடவன் பல்கலைகழகத்தில் திராவிட மொழியில் சிறப்பாய்வாளராகப் பணியாற்றினார். 
  • 1967 இல் மதுரைப் பல்கலைக் கழகம், 1976 இல் இலங்கைப் பல்கலைக் கழகம், 1975 இல் அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகியவை டி.லிட் பட்டம் அளித்துள்ளது. 
  • 1977 இல் பத்மபூசன் விருதும், 1978 இல் கலைமாமணி பட்டமும் பெற்றவர் - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். 
  • அனைத்து இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தைத் தொடங்கியவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். 
  • தமிழ் மொழியியல் கழகத்தின் முதல் தலைவர் ஆவார். தன் இறுதிக்காலம் வரை அதன் தலைவராக இருந்தவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆவார்.

 நூல்கள்

  • வள்ளுவரும் மகளிரும்
  • அன்பு முடி
  • கால்டுவெல் ஒப்பிலக்கணம்
  • தமிழா நினைத்துப்பார்
  • நீங்களும் சுவையுங்கள்
  • வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
  • பிறந்தது எப்படியோ?
  • கானல்வரி
  • சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
  • கல்விச் சிந்தனைகள்
  • தமிழ் மணம்
  • தமிழும் பிற பண்பாடும்
  • வாழும் கலை
  • தமிழ் மொழி வரலாறு
  • மொழியியல் விளையாட்டுக்கள்
  • பத்துப்பாட்டு ஆய்வு


நன்றி: Annacentenarylibrary



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)