தன்வினை, பிறவினை,செய்வினை, செயப்பாட்டு வினை அறிதல் / THANVINAI PIRAVINAI SEIVINAI SEYAPATTUVINAI TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

  THANVINAI PIRAVINAI SEIVINAI SEYAPATTUVINAI TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்:அலகு III: எழுதும் திறன் 

செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை:



தன்வினை, பிறவினை,செய்வினை, செயப்பாட்டு வினை அறிதல்:

ஒரு வாக்கியத்தைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக என வினாக்கள் அமையும்.

1. தன் வினை வாக்கியம்:

தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது.
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
(எ.கா) கரையைச் சேர்வான்
என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.
செல்வி பாடம் கற்றாள்.
முருகன் திருந்தினான்.


2. பிறவினை வாக்கியம்

பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.
ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
'பித்து' 'வித்து' எனும் சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா)  கரையில் சேர்ப்பான்
என்பது சொல்லாயின், வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது பொருளாகும், முன்னதில் சேரும் வினை இவனுடையது. பின்னதில் அவ்வினை வேறு ஒரு பொருளுக்கு உரியது.
ஆசிரியை பாடம் கற்பித்தார்
அவன் திருத்தினான்
பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
நட - நடப்பி - நடப்பித்தான்செய் - செய்வி - செய்வித்தான்
என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.


தன்வினை - பிறவினை

திருந்தினான் - திருத்தினான்
உருண்டான் - உருட்டினான்
பயின்றான் - பயிற்றுவித்தான்
பெருகு - பெருக்கு
செய் - செய்வி
வாடு - வாட்டு
நடந்தான் - நடத்தினான்
சேர்கிறேன் - சேர்க்கிறேன்
ஆடினாள் - ஆட்டுவித்தாள்
பாடினான் - பாடுவித்தான்
கற்றார் - கற்பித்தார்
தேடினான் - தேடுவித்தான்
உண்டாள் - உண்பித்தாள்
அடங்குவது - அடக்குவது
திருக்குறள் கற்றேன். -திருக்குறளை கற்பித்தேன்.
கொள்ளையர் கொட்டம் அடிங்கினர். -காவலர், கொள்ளையர் கொட்டத்தை அடிக்கினர்
நண்பர்கள் வீட்டில் விருந்து உண்டேன். -நண்பரை விருந்து உண்பித்தேன்.
நான் நேற்று வந்தேன். -நான் நேற்று வருவித்தேன்
தாய் உணவை உண்டாள் -தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.
செல்வம் பாடம் கற்றான். -செல்வம் பாடம் கற்பித்தான்.
பூங்கோரை பொம்மை செய்தாள் -பூங்கோதை பொம்மை செய்வித்தாள்
ஆடினார் ஆட்டுவித்தார்
கண்டான் காண்பித்தான்
உழுதார் உழுவித்தார்

3.செய்வினை வாக்கியம்

ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
(எ.கா) புத்தகம் படிக்கிறேன்கொசு கடித்ததுநாயை அடிக்கிறான்பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்.தச்சன் நாற்காலியைச் செய்தான்அவள் மாலையைத் தொடுத்தாள்ராதா பொம்மையைச் செய்தாள்
இத்தொடர்களில் உள்ள வினைச் சொற்கள் செய்வினைச் சொற்களாகும்.


4. செயப்பாட்டு வினை வாக்கியம்

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) கல்லணை(செயப்படுபொருள்) கரிகாலனால்(எழுவாய்) கட்டப்பட்டது(பயனிலை)
தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..
புத்தகம் (என்னால்) படிக்கப்படுகிறது.
நான் (கொசுவால்) கடிக்கப்பட்டேன்.
நாய் (அவனால்) அடிக்கப்படுகிறது.
இத் தொடர்களில் செயப்பாட்டு வினைகள் உள்ளன. செய்வினையில் படிக்கிறேன் என்றிருந்த சொல், செயப்பாட்டு வினையில் படிக்கப்படுகிறது என மாறுகிறது. படு என்னும் துணைவினைச் சொல் இவை அனைத்திலும் சேர்ந்து வருகிறது.

செய்வினை செயப்பாட்டு வினை

1. கரிகாலன் கல்லணையைக் கட்டினான் கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது

2. சோழன் சேக்கிழாரை வரவேற்று வணங்கினான். சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டு வணங்கப்பட்டார்

3. நான் பாடம் படித்தேன் பாடம் என்னால் படிக்கப்பட்டது.

4. திருவள்ளுவர் திருக்குறளை திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. திருக்குறள் இயற்றினார்.


செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை பிழையறிந்து சரியான தொடரறிதல் :

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி புத்தகத்தில் (6th to 10 th Std Tamil Bpok) இருந்து எடுக்கப்பட்டதே.


தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியை விட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.
பதவியை விட்டு நீக்குவித்தான்.
ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர
இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே – இத்தொடரை செய்வினைத் தொடராக மாற்றுக.
உண்ணும் தமிழ்த்தேனே
ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.
திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பட்டுள்ளன
உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக.
நிலவன் சிறந்த பள்ளியில் படிபித்தான்.


II. சொற்களைத் தொடர்களாக மாற்றுக.

அ) மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக.
தன்வினை – மொழி  பெயர்த்தாள்
பிறவினை – மொழி பெயர்ப்பித்தாள்
ஆ) பதிவுசெய் – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
செய்வினை – பதிவு செய்தான்
செயப்பாட்டு வினை – பதிவு செய்யப்பட்டது
இ) பயன்படுத்து – பிற வினை, காரண வினைத் தொடர்களாக.
பிற வினை – பயன்படுத்துவித்தாள்
காரண வினை – பயன்படுத்தினாளா
ஈ) இயங்கு – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
செய்வினை – இயங்கினாள்
செயப்பாட்டு வினை – இயக்கப்பட்டாள்



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)