தொடர் வகைகள் / THODAR VAGAIKAL TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

  THODAR VAGAIKAL TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்:அலகு III: எழுதும் திறன் 

தொடர் வகைகள்:




தொடர்கள் பொருள் வகையில் நான்கு வகைப்படும். அவை,
  1. செய்தித் தொடர்
  2. வினாத் தொடர்
  3. விழைவுத் தொடர்
  4. உணர்ச்சித் தொடர்

செய்தித் தொடர்

ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.


வினாத்தொடர்

ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்
(எ.கா) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?


விழைவுத் தொடர்

ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.) இளமையில் கல். (ஏவல்)
உன் திருக்குறள் நூலைத் தருக. (வேண்டுதல்)
உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்)
கல்லாமை ஒழிக.  (வைதல்}


உணர்ச்சித் தொடர்

உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்!   (உவகை)
ஆ! புலி வருகிறது!  (அச்சம்)
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்)
ஆ! மலையின் உயரம்தான் என்னே!


தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி புத்தகத்தில் (6th to 10 th Std Tamil Bpok) இருந்து எடுக்கப்பட்டதே.



கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

செய்தித்தொடர்

2. கடமையைச் செய்.

விழைவுத்தொடர்

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!

உணர்ச்சித் தொடர்

4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?

வினாத்தொடர்

 
தொடர்களை மாற்றுக.

(வியப்பு)

எ.கா: நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத் தொடராக மாற்றுக)

நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக)

விடை : என்னே , காட்டின் அழகு!

2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை : பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.

3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)

விடை : அதிகாலையில் துயில் எழு.

4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக)

விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)

விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)