தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதர்/ U. V. SWAMINATHA IYER TNPSC NOTES

TNPSC PAYILAGAM
By -
0

 

U. V. SWAMINATHA IYER TNPSC NOTES

தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதர் (1855 – 1942) 

(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]-தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்)


அறிமுகம் 

  • தமிழ்ப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான உ.வே.சாமிநாதர் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி பாபநாசம்,உத்தமதானபுரம் எனும் ஊரில் பிறந்தார். வெங்கட்ராமன் என்பது இவரது இயற்பெயர் . இவரது தாயார் சாமிநாதன் என்ற செல்ல பெயரால் அழைக்க, பின்னர்  அதுவே நிலைத்து விட்டது. 
  • இவர் குடும்பம் வசதியில்லாமல் ஊர்ஊராக இடம் பெயர்ந்து வாய்ப்புகளை தேடியலைந்த போதும் , மனம் தளராமல் சடகோப ஐயங்கார் மற்றும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் விடாமுயற்சியுடன் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார்  உ. வே. சா.

தமிழ் மற்றும் சமுதாயப் பணி 

  • 1880 ஆம் ஆண்டு முதல்  கும்பகோணம் கல்லூரியில் தொடர்ந்து 23 ஆண்டுகளும்  பின்பு 1903 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வரானார். 
  • அழிந்துக் கொண்டிருந்த சங்ககால நூல்களை, ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றை தேடித்தேடி கண்டறிந்து,அதில்  சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் ஆராய்ந்தறிந்து  முழுப்பொருள் விளங்கும் படி  அதை பதிப்பித்தார். 
  • 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள் 

1. கீழ்திசைச்சுவடிகள் நூலகம் (சென்னை) வல்லு 

2. அரசு ஆவணக்காப்பகம் (சென்னை) 

3. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை) 

4. சரசுவதி மஹால் (தஞ்சாவூர்)


படைப்புகள் 

  • உ. வே. சா. அவரது 23 ம் வயதிலேயே ஆதீனம் பெரிய காறுபாறு  வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றியிருந்த 'தேசிக விலாசச் சிறப்பு'; 'வேணுவனலிங்க விலாசச்  சிறப்பு' என்னும் நூலை பதிப்பித்து வெளியிட்டார்.
  • விரிவான முன்னுரை, நூலாசிரியர் உரையாசிரியர் வரலாறு, கதைச் சுருக்கம் ஆகியவற்றுடன் முதல் பதிப்பு முயற்சியாக  அக்டோபர் 1887இல் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார்.
  • சங்க இலக்கியம் , 12 புராணங்கள் ,9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள் ,4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள் ,2 மும்மணிக் கோவை ,2 இரட்டை மணி மாலை,அங்கயற்கண்ணி மாலை மற்றும் 4 சிற்றிலக்கியம் உள்ளிட்ட  பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்துள்ளார்.  
  • கலைமகள் துதி , திருலோக மாலை, ஆனந்த வல்லியம்மை பஞ்சரத்னம்  போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்,
  • சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.
  • மீனாட்சிசுந்தரம், மகாவைத்தியநாதர், கோபால கிருஷ்ண பாரதி, உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
  • 'என் சரித்திரம்' எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக, தனது வாழ்க்கை வரலாற்றை,   உ. வே. சா. அவர்கள் எழுதி வந்தார். இது புத்தகமாக 1950 ஆம் ஆண்டில் வெளி வந்தது.

விருதுகள் /சிறப்புகள் :

  • மகாமகோபாத்தியாய(1906), தக்ஷிணாத்ய கலாநிதி, திராவிட வித்யாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். 
  • 1932-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கி கௌரவித்தது . 
  • தமிழ்மொழிக்குச் செய்த தொண்டினால் ‘தமிழ்த்தாத்தா’ என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். 
  • 1937-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில்  இவரது உரையை கேட்ட மகாத்மா 'இவரிடம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி தான் என்னிடம் எழுகிறது "-என்றார்.
  • இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 ம் ஆண்டு இவரது நினைவு அஞ்சல் தலை-யை வெளியிட்டது .
  • உத்தமதானபுரத்தில்  உ. வே. சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் ‘உ. வே. சா நினைவு இல்லம்’-ஆக பராமரிக்கப்பட்டு வருகிறது .
  • ருக்மணி அருண்டேல் உதவியுடன்  1943-ம் ஆண்டு ' டாக்டர் உ.வே.சாமிநாதர் நூல் நிலையம்’ சென்னை பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
  • தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக உ.வே.சா. விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. 


இவரைச் சிறப்பித்து இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. சென்னை பெசன்ட் நகரில் இவரது பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா என்று போற்றப்படும் இவர், 1940-ஆம் ஆண்டு 84-ஆம் வயதில் மறைந்தார்.


நன்றி: Annacentenarylibrary


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)