உருத்திரங்கண்ணனார் / URUTTIRAN KANNANAR TNPSC NOTES

TNPSC PAYILAGAM
By -
0

 URUTTIRAN KANNANAR TNPSC NOTES

(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்)

உருத்திரங்கண்ணனார்


பெயர்க் காரணம்

  • தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை.
  • இந்தக் கடிகையைக் கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது.
  • காஞ்சியில் இருந்த தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தும் பெரும்பாணாற்றுப்படை பாலை நில வழியை முதலில் காட்டுகிறது.
  • சோழன் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தும் நூலின் பெயர் பட்டினப்பாலை.
  • இப் புலவரது பிற இரண்டு பாடல்களும் பாலைத்திணை.
  • எனவே பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரத்தைப் பாடிய புலவர் என்று காட்டக் கண்ணனாருக்கு உருத்திரம் என்னும் அடைமொழி தரப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.
  • ஆயினும் பெயரைக் கொண்டு நோக்கின் தமிழ்ப் படுத்தப்பட்ட ருத்ரக்ருஷ்ண என்ற வடமொழிப் பெயரை இவர் கொண்டிருந்தார் என்றும் இன்னொரு கருத்து உண்டு.
  • இவர் தந்தையார் பெயர் உருத்திரன் என்றும் இவரது பெயர் கண்ணனார் என்றும் கூறுவர்.

இலக்கிய வாழ்க்கை:


கடியலூர் உருத்திரங்கண்ணனார் பத்துப்பாட்டு நூல்களில் இரண்டு நூல்களையும்,எட்டுத் தொகை நூல்களில் இரண்டு பாடல்களும் இயற்றியுள்ளார். அவை;

  • பெரும்பாணாற்றுப்படை (500 அடிகள்)
  • பட்டினப்பாலை (301 அடிகள்)
  • அகநானூறு- பாடல் எண் - 167
  • குறுந்தொகை - பாடல் எண் 352


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)