(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்)
வேலுநாச்சியார்
வேலுநாச்சியார் வாழ்க்கை குறிப்பு :
- இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.
- சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.
- சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
காளையார்கோவில் போர்:
- காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.
- வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார்.
- திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்
திண்டுக்கல் கோட்டை:
- சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் கோட்டையில் வேலுநாச்சியார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
- இதில் அமைச்சர் தாண்டவராயர், தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் கலந்துக்கொண்டனர்.
ஐதர்அலி
- வேலுநாச்சியாருக்கு ஆதரவாக போரிட மைசூர் மன்னர் ஐதர்அலி, தனது 5000 குதிரைப்படை வீரர்களை அனுப்பி வைத்தார்.
- ஐதர்அலியிடம் உதவி கேட்க சென்ற பொழுது, அவரிடம் உருது மொழியில் பேசி வேலுநாச்சியார் உதவி கேட்டிருந்தார்.
பெண்கள் படைத்தளபதி குயிலி :
- வேலுநாச்சியார் தனது கணவர் இறந்த காளையார்கோவில் பகுதியை மீட்க முடிவு செய்து ஆண்கள் படையை மருது சகோதரர்கள் தலைமையிலும், பெண்கள் படையை குயிலி தலைமையிலும் அனுப்பி வைத்தார்.
- ஆங்கிலேயர்களை தோற்கடித்து காளையார்கோவில் பகுதியைக் கைப்பற்றினார் வேலுநாச்சியார்.
சிவகங்கை கோட்டை
- விசயத்தசமி திருநாள் அன்று பெண்கள் மட்டுமே கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்பதால் அன்று சிவகங்கை கோட்டையை தாக்க முடிவு செய்தார் வேலுநாச்சியார்.
உடையாள்
- ஆங்கிலேயர்கள் “உடையாள்” என்னும் பெண்ணிடம் வேலுநாச்சியார் உள்ள இருப்பிடம் பற்றி தகவல் கேட்க, அவர் கூறு மறுத்து விட்டார்.
- அதனால் ஆங்கிலேயர்கள் அவளை கொன்றுவிட்டனர்.
- இச்செய்தியை கேட்ட வேலுநாச்சியார் “உடையாள்” நினைவாக நடுகல் ஒன்றினை நிறுவினார்.
சிவகங்கையை மீட்டல்
- குயிலி தனது பெண்கள் படையுடன் மாறுவேடத்தில் சிவகங்கை கோட்டைக்குள் நுழைந்து அங்கிருந்த ஆயுதக் கிடங்கிற்கு தீ வைத்தார்.
- பின்னர் வேலுநாச்சியார் தனது படையுடன் உள்ளே சென்று ஆங்கிலேயர்களை வென்று சிவகங்கை கோட்டையை மீட்டார்.
- குயிலி தனது உடலில் தீ வைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கிற்குள் சென்று அக்கிடங்கை அழித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
தெரிந்து தெளிவோம்:
- வேலுநாச்சியாரின் காலம் 1730-1706
- வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780.
- ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்.
- ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி வேலு நாச்சியார்.
- இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து. சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி. 1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகளாகத் தோன்றியவர்தான் வேலுநாச்சியார். இவர் ஆண்களைப் போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி முதல் அனைத்துப் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் சிவகங்கையை ஆண்ட மன்னரான முத்துவடுகநாதரை மணந்து கொண்டார்.
- ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின் மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீர மரணமடைந்தார். வேலுநாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து, ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர்அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.
- மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச் சென்ற வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். ஒரு விஜயதசமி நாளில் இப்போர் நடந்தது. அப்போரில், கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்டார்.
VELUNACHIYAR TNPSC EXAM KEY POINTS :
- வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முதல் பெண்மணி
- இராமநாதபுரத்தை ஆண்டு மன்னர் செல்லமுத்து சேதுபதி – சக்கந்தி முத்தம்மாள் இணையருக்கு பிறந்தவர்.
- வேலு நாச்சியார் பெற்றோரால் ஆண் வாரிசைப் போன்று வளர்க்கப்பட்டார்.
- ஆயுதப்பயிற்சி முதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
- சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
- 1772-ல் ஆங்கிலேயர் சிவகங்கை சீமையின் மீது படையெடுத்தனர். காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.
- வேலு நாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர் அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.
- மருது சகோதரர்களுடன் வீரர் படைக்குத் தலமையேற்றுச் சென்ற வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். அப்போரில் கணவரைக் கொன்றவர்களை வென்று 1780-ஆம் ஆண்டு சிவகங்கையை மீட்டார்.