வேர்ச்சொல் அறிதல் / VERSOL THERVUSEITHAL TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0
VERSOL THERVUSEITHAL TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்-வேர்ச்சொல் அறிதல்:



வேர்ச்சொல் என்றால் என்ன?

ஒரு சொல்லின் மூலச்சொல்லே அச்சொல்லின் வேர்ச்சொல் எனப்படும்.

வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.

கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி அமைந்திருக்கிறதோ அதுவே வேர்ச்சொல் ஆகும்.

(எ.கா):
நினைத்தேன்
விடை : நினை

சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:

சொற்கள் வேர்ச்சொற்கள்
  • பற்றினால் -பற்று
  • ஒடாதே -ஒடு
  • அகன்று -அகல்
  • பார்த்தான் -பார்
  • அறுவடை -அறு
  • கெடுத்தாள் -கெடு
  • இயக்கிடு -இயக்கு
  • பாடிய -பாடு
  • கேட்க -கேள்
  • உற்ற -உறு
  • உருக்கும் -உருக்கு
  • எஞ்சிய -எஞ்சு
  • ஒட்டுவிப்பு -ஒட்டு
  • கண்டனன் -காண்
  • நினைத்தேன் -நினை
  • கொடுதீர் -கொடு
  • ஓடாது -ஓடு
  • கற்றேன் -கல்
  • காத்தவன் -கா
  • காட்சியில் -காண்
  • கொடாமை -கொள்
  • தட்பம் -தண்மை
  • மலைந்து -மலை

வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்:

1. அளித்தல் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - அளி
2. ஆடினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - ஆடு
3. அணிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - அணி
4. அறுந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல்                           - அறு
5. இழப்பர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                                - இழ
6. ஈட்டினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                       - ஈட்டி
7. உண்பார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                             - உண்
8. ஊர்ந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல்                             - ஊர்
9. எய்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                              - எய்
10. ஒழிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - ஒழி
11. ஓதியவர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - ஓதி
12. கண்டோம் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - காண்
13. கொய்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - கொய்
14. செய்யார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - செய்
15. சொல்வான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                   - சொல்
16. தட்டுவான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - தட்டு
17. தெளிந்தனர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                  - தெளி
18. தொடர்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்              - தொடர்
19. நின்றார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                            - நில்
20. பிரித்தார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - பிரி
21. புகழ்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - புகழ்
22. பெற்றாள் என்ற சொல்லின் வேர்ச்சொல்                        - பெறு
23. வென்றார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                       - வெல்
24. வனைந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                 - வனை
25. உறங்கினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்              - உறங்கு
26. தின்றான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - தின்
27. பாடினார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - பாடு
28. நடித்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                        - நடி
29. பற்றினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - பற்று
30. வாழ்க என்ற சொல்லின் வேர்ச்சொல்                                - வாழ்



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)