வினா எழுத்துகள் :
வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.
வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
- ஏ, யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
- மொழியின் முதலில் வருபவை - எ, யா (எங்கு, யாருக்கு)
- மொழியின் இறுதியில் வருபவை - ஆ,ஓ (பேசலாமா,தெரியுமோ)
- மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை - ஏ (ஏன், நீதானே)
அகவினா
- எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துக்களுக்குப் பொருள் இல்லை.
- இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
புறவினா
- அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
- இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.
அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
விடை :
அகச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) அது, இவன், அவர்.
அகவினா : வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) எது? எவர்? யார்?
புறச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) அப்பையன், இப்பெட்டி
புறவினா : வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) எவ்வீடு? வருவானோ ?
(i) அகச்சுட்டு, அகவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் உள்ளேயே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
(ii) புறச்சுட்டு, புறவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் வெளியே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
1. என் வீடு அங்கே உள்ளது. (அது/அங்கே )
2. தம்பி இங்கே வா. (இவர்/இங்கே )
3. நீர் எங்கே தேங்கி இருக்கிறது? (அது/எங்கே )
4. யார் அவர் தெரியுமா? (அவர்/யாது)
5. உன் வீடு எங்கே அமைந்துள்ளது? (எங்கே என்ன)