VINAIMURRU, VINAI YETCHAM, VINAIYALANAIYUM PEYAR, PEYARACHAM

TNPSC PAYILAGAM
By -
0
VINAIMURRU, VINAI YETCHAM, VINAIYALANAIYUM PEYAR, PEYARACHAM

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்-வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்:


தா, அறி, கெடு இப்படி எதாவது வேர்ச்சொல்லைக் கொடுத்து அதற்கான வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயரை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளிலிருந்து சரியானதை தெரிவு செய்ய வேண்டும் .

வினை முற்று:

வினை முற்று என்றால் என்ன ?

வினைமுற்று என்பது,

தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) ,

காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.

திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') ,
பால் காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். ( நடந்தான் - ஆண்பால்)

உதாரணம் :
இருந்தான், நடந்தான், கற்றான், வாழ்ந்தாள். அரும்பியது, தளர்ந்தது
{பொதுவாக வினைமுற்றுகள் ர், ன, ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)
வினைமுற்று

மலர்விழி எழுதினான். கண்ணன் பாடுகிறான். மாடு மேயும்.

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.

வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

தெரிநிலை வினைமுற்று

ஒரு செயல் தடைபெறுவதற்குச் செய்யவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

(எ.கா.) மாணவி கட்டுரை எழுதினாள்.

செய்பவர் - மாணவி   காலம் - இறந்தகாலம்

கருவி - தாளும்      எழுதுகோலும். செய்பொருள் - கட்டுரை

நிலம் – பள்ளி        செயல் - எழுதுதல்

குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

பொருள் – பொன்னன்

இடம் - தென்னாட்டார்

காலம் - ஆதிரையான்


சினை - கண்ணன்

பண்பு (குணம்) - கரியன்

தொழில் - எழுத்தன்

தெரிநிலை,குறிப்பு வினைமுற்றுகள் அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு.

ஏவல் வினைமுற்று

 பாடம் படி.  கடைக்குப் போ.

இத்தொடர்கள் ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. இவ்வாறு தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.

(எ.கா.) எழுது - ஒருமை

எழுதுமின் - பன்மை

பன்மை ஏவல் வினைமுற்று எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.

வியங்கோள் வினைமுற்று

வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று இரு திணைகளையும் (உயர்திணை, அஃறிணை) ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்) மூன்று இடங்களையும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) காட்டும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.

(எ.கா.) வாழ்க,ஒழிக, வாழியர், வாரல்

ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்று

• முன்னிலையில் வரும்.

• ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.

• கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்.

• விகுதி பெற்றும் பெறாமலும் வரும்.

வியங்கோள் வினைமுற்று

• இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.

• ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.

• வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.

• விகுதி பெற்றே வரும்.


தெரிந்து தெளிவோம்:

1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது.

2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ளன.


எச்சம் :

'படித்தான், படித்த, படித்து - ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே, இது வினைமுற்று ஆகும்.

படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை. இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

பெயரெச்சம்

படித்த என்னும் சொல் மாணவன், மாணவி, பன்ணி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

(எ.கா.) படித்த மாணவன்.

படித்த பள்ளி.

இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.

(எ.கா) பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம்

பாடுகின்ற பாடல் - நிகழ்காலப் பெயரெச்சம்

பாடும் பாடல் - எதிர்காலப் பெயரெச்சம்

தெரிநிலை, குறிப்புப் பெயரெச்சங்கள்

எழுதிய கடிதம் - இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

சிறிய கடிதம் - இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ, காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.


வினையெச்சம்:

படித்து என்னும் சொல் முடித்தான், வியந்தாள், மகிழ்ந்தார் போன்ற வினைச் சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

(எ.கா.) படித்து முடித்தான்.

படித்து வியந்தான்.

இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.

தெரிநிலை, குறிப்பு வினையெச்சங்கள்

எழுதி வந்தான் - இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

மெல்ல வந்தான் - இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.


வினையாலணையும் பெயர்:

வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?

இலக்கண விளக்கம் :

"ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."

வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.

உதாரணம் :

"கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?
அ.கொடுத்து
ஆ.கொடுத்த
இ.கொடுத்தல்
ஈ.கொடுத்தவள்

விடை : ஈ.கொடுத்தவள்

(மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)
ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும், எ.கா. அறிந்தவன், படித்தவர்

வினையாலணையும் பெயர் :

ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும். அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.

எ.கா. வந்தவர் அவர்தான்.

பொறுத்தார் பூமியாள்வார்.


வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்:

இணையத்தில் காண்க (VIEW IN WEB): முழு அட்டவணை உள்ளடக்கம்

வேர்ச்சொல்

வினைமுற்று

வினையெச்சம்

வினையாலணையும் பெயர்

கொடு

கொடுத்தான்

கொடுத்து

கொடுத்தவன்

படு

படுத்தார

படுத்து

படுத்தவரை

நடி

நடித்தது

நடித்து

நடித்தவனை

பெறு

பெற்றான்

பெற்று

பெற்றோரை

உண்

உண்டான்

உண்டு

உண்டரை

செல்

சென்றார்

சென்று

சென்றவரை/சென்றவன்

தொடு

தொட்டது

தொட்டு

தொட்டவனை

வீழ்

வீழ்ந்தான்

வீழந்து

வீா்ந்தவணை

காண்

கண்டான்

கண்டு

கண்டாரை

தேர்

தேர்ந்தார்

தேர்ந்து

தேர்ந்தவரை

தின்

தின்றது

தின்று

தின்றாரை

குடி

குடித்தான்

குடித்து

குடித்தாரை

அறு

அறுத்தான்

அறுத்து

அறத்தவனை

உடை

உடைத்தார்

உடைத்து

உடைத்தவரை

பறி

பறித்தான்

பறித்து

பறித்தானை

ஒடி

ஒடித்தாள்

ஒடித்து

ஒடித்தவனை

ஓடு

ஓடியது

ஓடு

ஓடுயதை

வெட்டு

வெட்டினான்

வெட்டி

வெட்டியவனை

பூசு

பூசினார்

பூசி

பூசியவரை

அடி

அடித்தார்

அடித்து

அடிப்பாரை

இயற்று

இயற்றுனர்

இயற்றி

இயற்றியவணை

எழுது

எழுதினார்

எழுதி

எழுதியவனை

பற

பறந்தது

பறந்து

பறந்ததை

கிழி

கிழித்தது

கிழித்து

கிழித்ததை

வரை

வரைந்தான்

வரைந்த

வரைந்ததை

எய்

எய்தான்

எய்து

எய்தவனை

குத்து

குத்தினார்

குத்தி

குத்தியவனை

பாய்ச்சு

பாய்ச்சினார்

பாய்ச்சி

பாய்ச்சியவனை

பிள

பிளந்தான்

பிளந்து

பிளந்தானை

கொய்

கொய்தது

கொய்து

கொய்தவனை

அரி

அரிந்தார்

அரிந்து

அரிந்தவரை


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)