இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல் / VINAISOL VERUPADU ARITHAL TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0


VINAISOL VERUPADU ARITHAL TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்-இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்:


1) சரியான இணையைத்‌ தேர்ந்தெடு. (குரை – குறை)
a) நாயின்‌ குரைப்‌பாலி அளவைக்‌ குறைத்தல்‌
b) அளவைக்‌ குறைத்தல்‌ நாயின்‌ குரைப்பொலி
c) வீட்டின்‌ மேல்‌ பகுதி அளவைக்‌ குறைத்தல்‌
d) அளவைக்‌ குறைத்தல்‌ வீட்டின்‌ மேல்பகுதி
விடை : a) நாயின்‌ குரைப்‌பாலி அளவைக்‌ குறைத்தல்‌

2) இருவினைகளின்‌ பொருள்‌ வேறுபாடு அறிதல்‌ :
சரியானத்‌ தொடரைத்‌ தேர்ந்தெடு : [விரிந்து – விரித்து]
a) காற்று வீசியது, பூக்கள்‌ விழுந்தன, மயில்‌ விரித்தது
b) மழைக்‌ காற்று வீசியதால்‌, பூவின்‌ இதழ்கள்‌ விரிந்தன, மயில்‌ தோகையை விரித்தது
c) மயில்‌ தோகையை விரித்ததால்‌ பூக்கள்‌ விரிந்தன
d) பூக்கள்‌ விரிந்ததால்‌ மயில்கள்‌ ஆடியது
விடை :  b) மழைக்‌ காற்று வீசியதால்‌, பூவின்‌ இதழ்கள்‌ விரிந்தன, மயில்‌ தோகையை விரித்தது

3) இரு வினைகளின்‌ வேறுபாடு அறிந்து தவறான தொடரைத்‌ தெரிவு செய்க
நீங்கு – நீக்கு
a) பெயரை நீக்கியவுடன்‌ பள்ளியை விட்டு நீங்கு
b) இக்குழுவை விட்டு நான்‌ நீங்க வேண்டுமானால்‌ என்‌ பெயரை நீக்கு
c) என்‌ பெயரை நீக்க நினைத்தால்‌ நீங்கு
d) தவறான பதிவுகள்‌ நீங்க வேண்டுமென்று நினைத்து நீக்கி விட்டேன்‌
விடை : c) என்‌ பெயரை நீக்க நினைத்தால்‌ நீங்கு

4) கீழ்கண்ட வினைகளின்‌ பொருள்‌ வேறுபாடு அறிக
சேர்ந்து – சேர்த்து
a) ஒன்று சேர்ந்து வீட்டினைக்‌ கட்டினர்‌
b) அனைவரையும்‌ சேர்த்து கல்வியை புகட்டினர்‌
c) அனைவரும்‌ ஒன்று சேர்ந்து சிதறியுள்ள விறகினை சேர்த்து பல கட்டுகளாக கட்டினர்‌
d) சேர்த்து வைத்த சொத்து வீண்‌ போகாது
விடை:  c) அனைவரும்‌ ஒன்று சேர்ந்து சிதறியுள்ள விறகினை சேர்த்து பல கட்டுகளாக கட்டினர்‌

5) இருவினைகளின்‌ பொருள்‌ வேறுபாடு அறிக.
புதைந்து, புதைத்து
a) ரவி மண்ணில்‌ புதைந்தப்‌ பொருளை புதைத்து வைத்தான்‌
b) புதைந்தப்‌ பொருளை மறைத்து வைத்தல்‌
c) புதையலைக்‌ கண்டு மகிழ்ந்தான்‌
d) ரவி புதைத்தப்‌ புதையலை மறந்தான்‌
விடை :  a) ரவி மண்ணில்‌ புதைந்தப்‌ பொருளை புதைத்து வைத்தான்‌

6) இருவினைகளின்‌ பொருள் வேறுபாடு அறிதல்‌ :
சரியான தொடரைத்‌ தோர்ந்தெடு
சேர்ந்து, சேர்த்து
a) மாணவர்கள்‌ சேர்ந்து சண்டையிட்டனர்‌; ஆசிரிய சேர்த்து வைத்தார்‌
b) ஆசிரியர்கள்‌ சேர்த்து மாணவர்கள்‌ சேர்ந்தனர்‌
c) மாணவர்கள்‌ சேர்த்து விளையாடி ஆசிரியர்கள்‌ சேர்ந்தனர்‌
d) மாணவர்கள்‌ சேராமல்‌ ஆசிரியர்‌ சேர்ந்தார்‌
விடை :  a) மாணவர்கள்‌ சேர்ந்து சண்டையிட்டனர்‌; ஆசிரிய சேர்த்து வைத்தார்‌

7) பொருள்‌ வேறுபாடறிந்து சரியானவற்றைத்‌ தேர்க.
போரில்‌ பயன்படுத்தியது ————, பூனைக்கு உள்ளது ————
a) வாழ்‌, தாழ்‌
b) வாள்‌, வால்‌
c) கால்‌, காளை
d) மனம்‌, மணம்‌
விடை : b) வாள்‌, வால்‌

8) இருவினைகளின்‌ பொருளை வேறுபடுத்துக.
பணிந்து – பணித்து – இரு வினைகளின்‌ பொருள்‌ வேறுபாடு உணர்த்தும்‌ தொடரைத்‌ தேர்க.
a) பெரியோர்களிடம்‌ பணிந்து நடக்க வேண்டும்‌ என்று ஆசிரியர்‌ பணித்தார்‌
b) இறைவனிடம்‌ பணியாதவர்கள்‌ பணித்தனர்‌
c) பணியாதவர்கள்‌ படிப்பறிவில்லாதவர்கள்‌
d) பணிந்தால்‌ படிப்பறிவு வளரும்‌
விடை :  a) பெரியோர்களிடம்‌ பணிந்து நடக்க வேண்டும்‌ என்று ஆசிரியர்‌ பணித்தார்‌

9) இருவினைகளின்‌ பொருள்‌ வேறுபாடு அறிக.
மாறு, மாற்று
a) மாறுபாடு அறிந்து மாற்று
b) மனிதராக மாறு, மற்றவரையும்‌ மாற்று
c) மாறுபாடு அற்ற சமூகமாக மாறு
d) மனிதராக மாரு சமூகத்தை மாற்று
விடை : b) மனிதராக மாறு, மற்றவரையும்‌ மாற்று

10) இருவினைகளின்‌ பொருள்‌ வேறுபாடு அறிக.
சேர்ந்து – சேர்த்து
a) மாணவர்கள்‌ சேர்த்து சண்டையிட்டனர்‌ ஆசிரியர்‌ சேர்ந்து வைத்தார்‌.
b) மாணவர்கள்‌ சேர்ந்து சண்டையிட்டதால்‌ ஆசிரியர்‌ சேர்த்து வைத்தார்‌
c) ஆசிரியர்‌ சேர்ந்து வைத்தார்‌ மாணவர்கள்‌ சேர்த்து சண்டையிட்டனர்‌
d) மாணவர்கள்‌ சேர்த்தார்களா? ஆசிரியர்‌ சேர்ந்து வைத்தார்‌
விடை: b) மாணவர்கள்‌ சேர்ந்து சண்டையிட்டதால்‌ ஆசிரியர்‌ சேர்த்து வைத்தார்‌


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)