தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன்
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்:
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி புத்தகத்தில் (6th to 10 th Std Tamil Bpok) இருந்து எடுக்கப்பட்டதே.
1.விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம்.சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் கத்தமே அடிப்படை. இவ்விரித்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
1. பழமொழியின் சிறப்பு --------- சொல்வது
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழைமையைச்
ஈ) பல மொழிகளில்
விடை : ஆ) சுருங்கச்
2. நோயற்ற வாழ்வைத் தருவது
விடை: சுத்தம்
3. உடல்நலமே -------- அடிப்படை
விடை: உழைப்புக்கு
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
விடை: உணவு, உடை. உறைவிடம்
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
விடை: சுத்தம்
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கன், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள்.
இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
1. எதனை இயற்கை என்கிறோம்?
விடை: இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.
2. இப்பத்தியில் உன்ன இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
விடை : பனி படர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா போன்றவை இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.
3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
விடை : நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
விடை : இயற்கை வளம்.
3.தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு. உலகமே வியந்து பார்க்கும் வளமான சொற்கள் உடையது நம் அன்னைத் தமிழ்மொழி.
1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
விடை : தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்.
2. உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லை பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.
விடை : கேளிர்
3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
விடை : தமிழ்மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணப் பிரிவுகள் உள்ளன.
4. தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது?
விடை : யாதும் ஊரே யாவரும் கேளிர்.
4.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.
1. கிடைக்கும் பொருள்களின் ---------- க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
(அ) அளவை
(ஆ) மதிப்பை
(இ) எண்ணிக்கையை
(ஈ) எடையை
[விடை : (ஆ) மதிப்பை]
2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை கோலமாவாக மாற்றலாம்.
3. வணிகத்தின் நோக்கம் என்ன?
விடை : மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.
4. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
விடை : கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இது மதிப்புக் கூட்டுதல் எனப்படும்.
5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக
விடை : வணிகம்.
5.பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.
அரசர் ஒருவர் தம் மக்களிடம் "அமைதி என்றால் என்ன?” என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது.
"இந்த ஓவியத்தை வரைந்தது யார்?" என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். "இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?" என்றார் அரசர். அதற்கு ஓவியர் "மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்க விடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி' என்றார்.
1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
விடை : அமைதி என்றவுடன் என் மனதில் தோன்றுவது “தேவையற்ற பேச்சைத் தவிர்த்து, அவசிய வேலைகளை மட்டும் செய்து பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதே அமைதி”. மற்றும் அமைதி என்றால் தியானம் நினைவிற்கு வரும். அன்னை தெரசா நினைவிற்கு வருவார்.
2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?
விடை : பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்று இக்கதையில் கூறப்படுகிறது.
3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?
விடை : ஓர் அழகான பெரிய கோவில், அங்குள்ள கருவறை, மண்டபம், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவது போன்ற காட்சி. இக்காட்சியை ஓவியமாக வரைந்து இருப்பேன்.
4. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
விடை : எங்கே அமைதி?
சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலை விதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது.
ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும் போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.
வினாக்கள்:
1. சாலையின் எந்தப் பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?
விடை : சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும்.
2. விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக் குறிக்கும்?
விடை : இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.
3. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?
விடை : இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.
4. ஒருவழிப் பாதை எனப்படுவது யாது?
விடை : போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரே சாலையில் இரு கூறாகப் பிரிக்காமல், வாகனங்கள் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ அமைக்கப்பட்டுள்ளவை ஒருவழிப்பாதை ஆகும்.
5. வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக்கூறு.
விடை : வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.
7.பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
விடை: காங்கேயம் இனக் காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
அ) கர்நாடகம்
ஆ) கேரளா
இ) இலங்கை
ஈ) ஆந்திரா
விடை: இ) இலங்கை
3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.
ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன.
இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன.
ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.
விடை: அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.
4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்?
அ) வினாத் தொடர்
ஆ) கட்டளைத்தொடர்
இ) செய்தித்தொடர்
ஈ) உணர்ச்சித்தொடர்
விடை: இ) செய்தித்தொடர்
8.பத்தியைப் படித்து பதில் தருக:
வினாக்கள் :
1. பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை - இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவீர் கருதுவன யாவை?
விடைகள் :
1. மீண்டும் மீண்டும்.
2. புவி, தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியது
3. பெய்த மழை - பெய்மழை (வினைத்தொகை)
4. அறிவியல் கொள்கை
பருப்பொருள்கள் சிதறும்படியாக வெப்பமும் மழையும் மாறிமாறி வருவதால் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றுகிறது
5. வெப்பமும், குளிர்ச்சியும் மாறி மாறி நடைபெறுவதால் உயிர்கள் ஏற்ற சூழலாகும்.
வினாக்கள்:
1. தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் - இத்தொடரில் புலமைக் கதிரவன் என்பதற்கு இலக்கணக்குறிப்பத் தருக.
2. மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களைக் கண்டறிக.
3. மீனாட்சி சுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் - விடைக்கேற்ற வினாவை அமைக்க.
4. பத்தியில் மொழிமுதல் எழுத்துகளைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் எனச் சுட்டுக.
5. விளங்கினார் - பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.
விடைகள்:
1. புலமைக் கதிரவன் - உருவகத்தொடர்
2. வண்டு போல் - உவமைத்தொடர்; புலமைக் கதிரவன் - உருவகத்தொடர்
3. தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் யார்?
4. முகாவித்துவான் - ம் + அ மெய்முதல்; தலபுராணங்கள் - த் + அ மெய் முதல்; யமக அந்தாதி - ய் + அ மெய்முதல்; திரிபந்தாதி - த் + இ மெய் முதல்; கலம்பகம் - க் + அ மெய்முதல்.
5. விளங்கினார் - விளங்கு + இன் + ஆர்
விளங்கு - பகுதி, இன் - இறந்தகால இடைநிலை, ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.
10.வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஒருவர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார். அவர் உடனே 'அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி' என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். 'சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது' என்பது அவர் கூறியதற்குப் பொருள். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.
'வசனநடை கைவந்த வல்லாளர்' எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர். தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.
திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் - சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார். தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு 'நாவலர்' பட்டம் வழங்கியது. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.
வினாக்கள்:
1. 'எல்லி' என்பதன் பொருள் என்ன?
2. ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம்?
3. ஆழி, கால் பொருள் தருக.
4. ஆறுமுக நாவலர் எவ்வாறு புகழப்பட்டார்? அவர் அறிந்திருந்த மொழிகள் யாவை?
5. பெற்றவர் - இலக்கணக்குறிப்புத் தருக.
6. விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
7. ஆறுமுக நாவலரின் இயற்பெயர் என்ன? “நாவலர்' என்ற பட்டத்தை யார் வழங்கினார்?
8. 'வந்திருந்தார்' இரு பொருள்படும்படி வாக்கியம் அமைக்க.
விடைகள்:
1. சூரியன்.
2. 24 நிமிடம்.
3. ஆழி - மோதிரம், கடல்.
கால் - உடல் உறுப்பு, காற்று.
4. 'வசனநடை கைவந்த வள்ளலார்' எனப் புகழப்பட்டார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழிப் புலமை பெற்றவர்.
5. பெற்றவர் - வினையாலணையும் பெயர்.
6. பெர்சிவல் பாதிரியார்.
7. இயற்பெயர் - ஆறுமுகம்.
நாவலர் பட்டம் - திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியதாகும்.
8. வந்திருந்தார் : உடல் நலம் சரியில்லாத என் தந்தையைக் காண என் மாமா நீண்ட நாள் கழித்து வந்தார்.
வந்து இருந்தார் : பொதுக்கூட்டம் காண பல மைல் தூரம் நடந்த குமரன் கால் வலியால் வந்து இருந்தார்.