நாட்டிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு தமிழக அரசு 'அவசரம் 108' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது:
- தமிழ்நாட்டில் மொத்தம் 1,353, 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.
- 108 ஆம்புலன்ஸ் சேவையின் அவசரகால உதவி, தொடர் ஆம்புலன்ஸ் அழைப்பது என தினமும் கிட்டத்தட்ட 13,000 அழைப்புகள் வருகின்றன.
- மேலும் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சராசரியாக, ஒரு நாளில் 5,000 அவசரநிலைகளை கையாளுகிறது.
- இந்த நிலையில், தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் நெட்வொர்க் பயன்பாட்டை அதிகரிக்க “அவசரம் 108 தமிழ்நாடு” என்ற பெயரில் செயலி வெளியிட்டுள்ளது.
அவசரம் 108 தமிழ்நாடு -செயலி பயன்கள்:
- மருத்துவ அவசரநிலைகளுக்காக ஆம்புலன்ஸ்களைத் தேடும் நபர்களுக்கு தங்கள் மொபைல் போன்களில் வாகனங்களைக் கண்காணிக்க உதவும்.
- 108 அவசரகால பதில் மையத்தை தங்கள் மொபைல் போன்களில் அழைப்பவர்கள் ஆம்புலன்ஸ்களின் நிகழ்நேர குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை பெறுவார்கள்.
- 108 உதவி மையத்திற்கு நாள்தோறும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இவற்றல் 50 சதவீதம் ஆன்ட்ராய்டு போனில் இருந்து தான் அழைப்பு வருகிறது.
- எனவே விபத்து நடந்த பகுதியை எளிதில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்டுபிடிக்கும் வகையில் இந்த செயலி உதவும்.
- மருத்துவ, காவல், தீயணைப்பு ஆகிய துறைகளுக்கு உடனடியாக பதிலளிப்பதற்கு உதவும்.
- ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க உதவும்.
- உடனடியாக மருத்துவ சேவையைப் பெற உதவும்.