மத்திய பட்ஜெட்- முக்கிய அம்சங்கள்/ UNION BUGET 2025-2026 KEY POINTS

TNPSC PAYILAGAM
By -
0

UNION BUGET 2025 KEY POINTS


மத்திய பட்ஜெட் 2025-2026:

மக்களவையில் 01.02.2025 காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையில் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்: 


வருமான வரி சார்ந்த அறிவிப்புகள்:

  • புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.
  • வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும்.
  • மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது.
  • தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும்.
  • வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
  • வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு: 

  • புதிய வருமான வரி முறையின்படி ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. பழைய வரி விதிப்பு வருமான வரி முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்:
  • ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை
  • ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வரி
  • ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி
  • ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15% வரி
  • ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20% வரி
  • ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25% வரி
  • ரூ.24 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30% வரி
வேளாண் துறைக்கான அறிவிப்புகள்

  • பிகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும். வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையில் இது உதவும். மக்கானா (தாவர விதைகள்) விவசாயிகளுக்கு இது பயனளிக்கும். உலகளவில் 85% மக்கானா உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், இந்தியாவில் 90% மக்கானா பிகாரில் உற்பத்தியாகிறது.
  • பிகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மையம் அமைக்கப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் 10 முக்கியப் பகுதிகள் உள்ளன. விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
  • வேளாண் திட்டத்தில் 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். பிரதம மந்திரி தன் தானியா எனும் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும்.
  • அதிக விளைச்சல் தரும் விதைகளுக்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களுக்கென ஒருங்கிணைந்த வகையில், மாநிலங்களுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு கவனம் செலுத்தப்படும்.
  • எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு என ஆறு ஆண்டுகளாக திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
  • கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவே உள்ள ரூ.3 லட்சம் எனும் தொகையிலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில்முனைவோருக்கு சிறப்பு அறிவிப்பு: 

  • பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.
  • காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
  • நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
  • ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
  • அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
  • இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் கிக் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். நிரந்தர, முழுநேர வேலைகளுக்குப் பதிலாக, குறுகிய கால அளவில், நேர நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொண்ட சந்தையே கிக் பொருளாதாரம் என அறியப்படுகிறது. இவை பெரும்பாலும், ஓலா, உபெர், ஸ்விக்கி, ஜொமாட்டோ, அர்பன் கம்பெனி போன்ற செயலி-சார் பணிகளாகச் சமீப காலங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

கல்வி:

  • பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். நாடு முழுதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும்.
  • கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 100% அதாவது 65,000இல் இருந்து 1.35 லட்சம் எனும் அளவில் உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 5 ஐஐடி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும்.

மற்ற அறிவிப்புகள்:

செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் ‘அடல் ஆய்வகங்கள்’ அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும்.

  • 5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
  • காப்பீட்டுத் துறைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • ‘இந்தியாவின் குணமாகுங்கள்’ ஹீல் இன் இந்தியா (Heal in India) பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.
  • பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும்.

அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்றாண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ’டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும். இவற்றில் 200 மையங்களில் 2025 - 26 ஆண்டிலேயே அமைக்கப்படும்.

புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே வேளையில் உயிர்காக்கும் 6 மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

  • லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு.
  • பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரியில் சலுகை.
  • தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு வரிச் சலுகை.
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை நீட்டிக்கப்படுகிறது.
  • ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக 10 ஆயிரம் ஃபெலோஷிப்கள் வழங்கப்படும்.
இந்திய அரசின் வட்டார விமான நிலையங்களின் வளர்ச்சி தொடர்பான உடான் திட்டம் (UDAN), 120 பிராந்திய அளவில் புதிய பகுதிகளை இணைக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் விமானங்களில் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக்‌ஷம் அங்கன்வாடி போஷன் 2.0 திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம், 8 கோடி குழந்தைகள் பயன் பெறுவர். இதனுடன், ஒரு கோடி கர்ப்பிணிகளும் பயனடைவர்.

பொருளாதார ஆய்வறிக்கை 2025:
  • முன்னதாக, இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

  • அதில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3-6.8% என்ற விகிதத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


நன்றி: இந்து தமிழ் திசை,BBC NEWS


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)