பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய விமான மற்றும் பாதுகாப்புக் கண்காட்சி:
- இரு வருட ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு (2025 பிப்ரவரி 08) கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விமான தகுதி சான்றிதழ் மையம் (செமிலாக்), ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (ஏஎஸ்ஐ) உடன் இணைந்து ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோடியாக இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
அறிமுகம்:
- ஏரோ இந்தியா, ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியாகும். பெங்களூருவில் நடைபெறும் இரு வருட விமான கண்காட்சியான இது பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- ஏரோ இந்தியா இந்தியாவின் முதன்மையான செயல்பாடு விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியாகும். இதில் உலகளாவிய விமானத் துறை தொழில் துறையினரும் இந்திய விமானப்படையும் (ஐ. ஏ. எஃப்) பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும்.
- இது உலகளாவிய தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பாதுகாப்பு நிபுணர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு முதன்மை நிகழ்வாகும். இந்த நிகழ்வு நாட்டின் தொழில்நுட்ப வலிமையையும் புதுமைகளையும் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தையும் வழங்குகிறது.
ஏரோ இந்தியாவின் மரபும் முக்கியத்துவமும்:
- ஏரோ இந்தியா ஒரு பெரிய சர்வதேச நிகழ்வாக உருவெடுத்துள்ளது, இது விண்வெளி தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், உள்நாட்டு, சர்வதேச பங்குதாரர்களிடையே தொடர்புகளுக்கான முக்கியமான மன்றமாகவும் செயல்படுகிறது.
- இந்த நிகழ்ச்சி விண்வெளி, பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.
உரையாடல்களை ஊக்குவித்தல்:
- உயர்மட்ட உரையாடல்கள் மூலம், ஏரோ இந்தியா கொள்கை, பாதுகாப்பு ஒத்துழைப்புகள், விண்வெளித் துறையின் எதிர்காலம் போன்றவை குறித்த விவாதங்களுக்கு ஒரு அரங்கை வழங்கியுள்ளது.
- உலகளாவிய விண்வெளி நிறுவனங்கள், பாதுகாப்பு முகமைகளின் பங்கேற்புடன், சர்வதேச விண்வெளி சமூகத்தில் ஒரு முக்கிய நாடாக இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
ஏரோ இந்தியா 2025:
- ஏரோ இந்தியாவின் 15 வது பதிப்பு, விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல் பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா 2025, பிப்ரவரி 10 முதல் 14 வரை இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடைபெறும்.
- முதல் மூன்று நாட்கள் வணிக பார்வையாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்களாகும். கடைசி இரண்டு நாட்கள் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன.
- இந்நிகழ்ச்சியின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் உட்பட பல இருதரப்பு சந்திப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய கண்காட்சியாளர்கள்:
- முக்கிய கண்காட்சியாளர்களில் ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஆர்மி ஏவியேஷன், எச். சி. ரோபாட்டிக்ஸ், சாப், சஃப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, பாரத் ஃபோர்ஜ் லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி. இ. எல்), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி. டி. எல்), பிஇஎம்எல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்
- புதுமை, உத்திசார் ஒத்துழைப்பு, விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் சிறந்து விளங்குவது ஆகியவற்றில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஏரோ இந்தியா ஒரு சான்றாக நிற்கிறது.
- நாடு ஏரோ இந்தியா 2025-ஐ நடத்தத் தயாராகி வரும் நிலையில், இந்த நிகழ்வு முந்தைய பதிப்புகளின் வளமான பாரம்பரியத்தை கட்டியெழுப்ப உறுதியளிக்கிறது. ஏரோ இந்தியா 2025 உலகளாவிய விண்வெளி அரங்கில் இந்தியாவின் நற்பெயரை மேலும் உயர்த்த தயாராக உள்ளது.
SOURCE : PIB