- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 78வது சுதந்திர தின (15.08.2024)உரையின்போது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கிட முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.
- இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- இவ்வரசாணையில் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் / ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் / முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறலாம்.
- இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முன்னாள் ராணுவ வீரர்களின் விண்ணப்பங்கள் 17.02.2025 முதல் வரவேற்கப்படுகின்றன. https://www.exwel.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் – 15.08.2024
திட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் – 17.02.2025
SOURCE: Dinakaran Newspaper