ஊழல் குறைந்த நாடுகள் பட்டியல் 2024:
- உலக நாடுகளின் ஊழல், லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்கிறது. 180 நாடுகளுக்கு பூஜ்யம் முதல் 100 வரை மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் (2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) )-தரவரிசை பிரிக்கப்படுகிறது.
- இதில் இந்தியா கடந்த 2023-ல் 39 மதிப்பெண்களுடன் 93-வது இடத்தில் இருந்தது. 2024-ம் ஆண்டில் இந்தியா 38 மதிப்பெண்களுடன் 96-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
- இந்தியாவுக்கு நிகரான ஊழல் குறியீட்டைக் கொண்ட நாடுகளாக காம்பியா மற்றும் மாலத்தீவு நாடுகள் உள்ளன.
- உலகளவில் மிகவும் குறைவான ஊழல் உள்ள நாடாக டென்மார்க் திகழ்கிறது. அது 90 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து ஃபின்லாந்து 88, சிங்கப்பூர் 84, நியூ சிலாந்து 83.
- அதிக ஊழல் நடந்த நாடாக தெற்கு சூடான் வெறும் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தொடன்று சோமாலியா 9, வெனிசுலா 10, சிரியா 12 நாடுகள் உள்ளன.
- இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135 வது இடம் மற்றும் இலங்கை 121-வது இடம் பெற்று உள்ளன. வங்காளதேசத்தின் தரவரிசை 149 ஆக பின்தங்கி உள்ளது. சீனா 76-வது இடத்தைப் பிடித்து உள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் 2024 இன் ஊழல் புலனாய்வுக் குறியீடு 2024 இன் படி, ஊழல் குறைந்த முதல் 10 நாடுகள்:
- டென்மார்க் - மதிப்பெண்: 90
- பின்லாந்து - மதிப்பெண்: 88
- சிங்கப்பூர் - மதிப்பெண்: 84
- நியூசிலாந்து - மதிப்பெண்: 83
- லக்ஸ்சம்பர்க் - மதிப்பெண்: 81
- நார்வே - மதிப்பெண்: 81
- சுவிட்சர்லாந்து - மதிப்பெண்: 81
- ஸ்வீடன் - மதிப்பெண்: 80
- நெதர்லாந்து - மதிப்பெண்: 78
- ஆஸ்திரேலியா - மதிப்பெண்: 77