CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (10.02.2025- 11.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (10.02.2025- 11.02.2025)


சாதனை படைத்த பரிக்‌ஷா பே சர்ச்சா  8வது பதிப்பு :  Pariksha Pe Charcha" (PPC): 

  • (2025 பிப்ரவரி 10) காலை 11 மணிக்கு, இந்த ஆண்டின் பரிக்‌ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இதில் பிரதமர் நேரடியாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் அவர் கலந்துரையாடுவார். 
  • (10 பிப்ரவரி 2025) திட்டமிடப்பட்டுள்ள தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8வது ஆண்டு நிகழ்வு ஏற்கனவே ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது. 5 கோடிக்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன், இந்த ஆண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
  • இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிக்கு, அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலிருந்து, மாநில / யூனியன் பிரதேச அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளி, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி, சிபிஎஸ்இ, நவோதயா வித்யாலயா ஆகியவற்றிலிருந்து 36 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடுவார்கள்.
  • பரிக்ஷா பே சர்ச்சா 2025 ஏழு நுண்ணறிவு அத்தியாயங்களைக் கொண்டிருக்கும். 
  • விளையாட்டு, ஒழுக்கம் குறித்து மேரி கோம், அவனி லெகாரா, சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் பேசுவார்கள்.மன ஆரோக்கியம் குறித்து தீபிகா படுகோனே பேசுவார்.
  • ஊட்டச்சத்து, தொழில்நுட்பம், நிதி, நேர்மறை சிந்தனைகள், நினைவாற்றல், மன அமைதி போன்றவை குறித்தும் சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.

பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழகம் முதன்மை மாநிலம்:

  • பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் 1,000 பேருக்கு 2 என்ற அளவிலேயே இருக்கிறது. 
  • பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையைப் பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது” என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.


நாட்டிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு தமிழக அரசு 'அவசரம் 108' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது:

  • தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் நெட்வொர்க் பயன்பாட்டை அதிகரிக்க “அவசரம் 108 தமிழ்நாடு” என்ற பெயரில் செயலி வெளியிட்டுள்ளது. 


பிரதமர் சுவநிதி திட்டம்:

  • பிரதமர் சுவநிதி என்பது மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு எந்த நிதியும் வெளியிடப்படுவதில்லை. கடன் தொகை வங்கிகளால் நேரடியாக பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
  • ஜனவரி 30, 2025 நிலவரப்படி, பிரதமர் சுவநிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 68.02 லட்சம் ஆகும். இவர்களில் தமிழ்நாட்டில் 3.99 லட்சம் பயனாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 429 பயனாளிகள் கடன் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 8,966 பேர் பயன் பெற்றுள்ளன.
  • ஜனவரி 30, 2025 நிலவரப்படி, தமிழ்நாட்டில், சுமார் 2.28 லட்சம் பயனாளிகள் முதல் தவணை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர், அவர்களில் 1.37 லட்சம் பயனாளிகள் 2-வது தவணை கடனைப் பெற்றுள்ளனர். மேலும், 45,363 பயனாளிகள் 2-வது தவணை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். இவர்களில் 26,955 பயனாளிகள் 3-வது தவணை கடனைப் பெற்றுள்ளனர். 

2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்படும் - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா:

  • இந்தியாவை நக்சலைட்டு இல்லாத நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில், பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கையில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன," என்று அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
  • 2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சல் தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிப்போம், நக்சலிசத்தால் நாட்டின் எந்தவொரு குடிமகனும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய கடற்படை தலைவர்கள் மாநாடு 2025:

  • இந்திய கடற்படை தலைவர்களின் மாநாடு புதுதில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் 2025 பிப்ரவரி 08 முதல் 09 வரை நடைபெற்றது. இதில் எட்டு முன்னாள் கடற்படை தளபதிகளும்  தற்போதைய கடற்படை தளபதியும் கலந்து கொண்டனர்.
  • முன்னாள் தளபதிகளின் கூட்டு அனுபவத்திலும் அறிவிலும் இருந்து பயனடைவதும், கடற்படையின் சமீபத்திய முன்னேற்றங்கள், கொள்கை முயற்சிகள் குறித்து அவர்களுக்கு விளக்குவதும் மாநாட்டின் நோக்கமாகும்.
  • பிப்ரவரி 08 அன்று, முன்னாள் தலைவர்களுக்கு கொள்கை முன்முயற்சிகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் விளக்கப்பட்டன.
  • வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சூழலில் கடல்சார் உத்திகள் குறித்து விவாதிக்க ஒரு பிரத்யேக அமர்வும் நடத்தப்பட்டது.
  • முன்னாள் கடற்படை தளபதிகள் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
  • இந்தியாவின் கடல்சார் சக்தியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அதே வேளையில், கடந்த கால தலைமையின் அனுபவத்தைப் பெற்று தொடர்ச்சியான மேம்பாட்டுக்கான கடற்படையின் உறுதிப்பாட்டை இந்த மாநாடு உறுதிப்படுத்தியது.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி 2025:

  • சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில்  ஆடவர் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் கைரியன் ஜாக்கெட் - சுவீடனின் எலியஸ் மெர் மோதினா். 
  • விறுவிறுப்பக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 7(7)-6(1), 6-4 என்ற செட்களில் ஆட்டத்தை வென்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினா் கைரியன் ஜாக்கெட். 
  • இதன்மூலம், சர்வதேச டென்னிஸில் மிக உயரிய பட்டமாகக் கருதப்படும் ஏடிபி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளார் கைரியன் ஜாக்கெட்.

ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பின் பிரிவு-இந்தியா :

  • ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்புடன் பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், சுவிஸ் நாட்டின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி ஹெலீன் பட்லிகர் ஆர்டிடா, நார்வே நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. தாமஸ் நோர்வோல், ஐஸ்லாந்தின் நிரந்தர பிரதிநிதி மார்ட்டின் ஐஜோல்ஃப்சன், லிச்சென்ஸ்டீன் நாட்டு வெளியுறவு, கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு டொமினிக் ஹாஸ்லர், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பின் துணைச் செயலாளர் திரு. மார்கஸ் ஸ்க்லாஜென்ஹாஃப் ஆகியோர் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பின் பிரிவை  11.02.2025 தொடங்கி வைக்கவுள்ளனர்.
  • 2024 மார்ச் 10 அன்று கையெழுத்திடப்பட்ட இந்தியா ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பின் வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் அத்தியாயம் 7 இன் படி, இந்த முயற்சி, இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் ஆகிய நான்கு ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக வசதியை மேம்படுத்துவதற்கான ஒரு பிரத்யேக தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA-European Free Trade Association) என்பது ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும், இது ஐரோப்பாவிற்குள் மற்றும் உலகளவில் அதன் உறுப்பினர்களிடையே தடையற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது

ANNUAL NATIONWIDE MASS DRUG ADMINISTRATION (MDA) CAMPAIGN / வருடாந்தர தேசிய தடுப்பு மருந்து வழங்கும் இயக்கம்:

  • நாட்டில் நிணநீர் யானைக்கால் நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 13 மாநிலங்களில் அத்தொற்றை அகற்றும் வகையில்,  நாடு முழுவதும் வருடாந்தர தேசிய தடுப்பு மருந்து வழங்கும் இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ பி நட்டா, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  
  • இந்த இயக்கத்தின் நோக்கங்கள், முக்கிய உத்திசார் நடவடிக்கைகள் மற்றும் பங்கேற்கும் மாநிலங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பாதிக்கப்பட்டுள்ள 13 மாநிலங்களைச் சேர்ந்த 111 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும். வீடு வீடாகச் சென்று நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட உள்ளன.
  • இந்த இயக்கத்தின் மூலம் நாட்டிலிருந்து நிணநீர் யானைக்கால் நோயை முற்றிலும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பூச்சிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும். இந்த நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு தனி நபருக்கும் நோய் எதிர்ப்பு மருந்து வழங்குவது உறுதி செய்யப்படும்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


SEARCH KEYWORDS CURRENT AFFAIRS FEBRUARY 2025:
  • TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2025
  • CURRENT AFFAIRS FEBRUARY 2025 TAMIL
  • TODAY CURRENT AFFAIRS IN TAMIL PDF FEBRUARY 2025
  • CURRENT AFFAIRS FEBRUARY 2025 IN TAMIL PDF
  • TODAY CURRENT AFFAIRS PDF FEBRUARY 2025
  • CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025
  • CURRENT AFFAIRS FEBRUARY 2025 QUESTIONS AND ANSWERS IN TAMIL
  • MONTHLY CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025

Post a Comment

0Comments

Post a Comment (0)