புதிய வருமான வரி மசோதா 2025:
- வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
- புதிய வருமான வரி சட்டம் எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
- TNPSC EXAM POINT: INCOME TAX BILL 2025 DETAILS IN TAMIL
புற்றுநோய் இல்லாத இந்தியா:
- இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக புற்றுநோய் உள்ளது. புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் 1 லட்சம் பேரில் 100 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் புள்ளி விவரப்படி 2023-ம் ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
- புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்தவும் மத்திய அரசு சிறந்த கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நோய் தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல், மருத்துவ சிகிச்சை, நோயாளிகளை கவனித்தல் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கவும் இந்தக் கொள்கைகள் வழிவகை செய்கின்றன.
- மத்திய பட்ஜெட் 2025-26 புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு மொத்தம் ரூ.99,858.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.95,957.87 கோடி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கும் ரூ.3900.69 கோடி சுகாதார ஆராய்ச்சி துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மத்திய பட்ஜெட்டில் பகல் நேர புற்றுநோய் மையங்கள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டில் 200 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.
- புற்றுநோய் மற்றும் இதர அரிய வகை நோய்கள், நாட்பட்ட நோய்கள் ஆகியவற்றுக்கான உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 6 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சலுகையாக 5 சதவீத சுங்கத் தீர்வை விதிக்கப்படுகிறது.
நீர் மின்னுற்பத்தி 2024-25: இலக்கை அடைந்த தமிழக மின்வாரியம்:
- நீர்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி செய்ய மத்திய மின்சார ஆணையம் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து வருகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டுக்கு 4,220 மில்லியன் யூனிட் மின்னுற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கை விட கூடுதலாக 4,231.351 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து இலக்கை அடைந்துள்ளது.
- தமிழகத்தில் நீர் மின்னுற்பத்தி செய்வதற்காக 2,321.90 மெகாவாட் திறனில் 47 நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன.
- ஈரோடு, கடம்பாறை, குந்தா மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த மின்நிலையங்கள் அமைந்துள்ளன.
- மின்னுற்பத்தியில் இந்த நீர்மின் நிலையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினமும் ஒரு கோடி யூனிட் என்ற அளவில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
அரசு திட்டங்களுக்கு புள்ளி விவரங்கள் தொகுப்பு சிறப்புப் பயிற்சி:
- அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முறையாக மக்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவும், தகுதியுடைய பயனாளிகள் எவரேனும் விடுபட்டு விட்டனரா என்பதை கண்டறியவும், கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவும், அதன் வாயிலாக அரசுத் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தவும் அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்" என்று சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டு மனிதவள மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கையின்போது அத்துறையின் அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.
- அதன் பேரில் தமிழக அரசின் வரலாற்றிலேயே முதல்முறையாக பல்வேறு அரசுத் துறைகளின் புள்ளி விவரங்களை அறிவியல் முறையில் தொகுத்தல் குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) பிப்ரவரி 12 முதல் 14-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தும் சிறப்பு பயிற்சிக்கு 25 அரசு அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டம்:
- வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆந்திராவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டத்தை தொடங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
- இத்திட்டம் முதலில் வெள்ளோட்டமாகவும், பிறகு மாநிலம் முழுவதுமாகவும் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
- ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டத்துக்காக அரசு தரப்பில் ஒர்க் ஷாப் (பணி நிலையம்) கட்டப்பட உள்ளது. இங்குள்ள கணினிகள் மூலம் ஆண், பெண் இருபாலரும் பணி செய்துவிட்டு வீடு திரும்பலாம். சில நிறுவனங்களிடம் இதற்கான பேச்சுவார்த்தையிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
உலக வானொலி தினம் 2025:
- வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி நாளாக 2011-ல் அறிவித்தது. 1946-ல் இதே நாளில்தான் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்டது. அதனால், அந்த தினம் உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- அந்த வகையில் (13-2-2025) உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வானொலி நிலையங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. பல்வேறு கல்வி நிறுவனங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
- இந்த ஆண்டு உலக வானொலி தினத்திற்கான கருப்பொருள் "வானொலியும் காலநிலை மாற்றமும்" என்பதாகும். இந்த முக்கியமான பிரச்சினை குறித்து வானொலி நிலையங்கள் செய்திகளை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்வுகளும் ஒலிபரப்பப்படுகின்றன.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..