CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (14.02.2025- 15.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (14.02.2025- 15.02.2025)


ஊழல் குறைந்த நாடுகள் பட்டியல் 2024:

  • உலக நாடுகளின் ஊழல், லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்கிறது. 180 நாடுகளுக்கு பூஜ்யம் முதல் 100 வரை மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில்  (2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) )-தரவரிசை பிரிக்கப்படுகிறது.
  • இதில் இந்தியா கடந்த 2023-ல் 39 மதிப்பெண்களுடன் 93-வது இடத்தில் இருந்தது. 2024-ம் ஆண்டில் இந்தியா 38 மதிப்பெண்களுடன் 96-வது இடத்துக்கு சரிந்துள்ளது. 


அமெரிக்க தயாரிப்பான எப்-35 போர் விமானங்கள்:

  • பிரதமர் மோடி அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு எப்-35 போர் விமானங்கள் விற்கப்படும் என அறிவித்தார்.
  • அமெரிக்காவின் லாக்கீட் மார்டின் நிறுவனம் தயாரிக்கும் எப்-35 போர் விமானங்கள் தற்போது அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் நேட்டோ அணியில் இடம்பெற்றுள்ள இஸ்ரேல் மற்றும் ஜப்பானிடம் மட்டுமே உள்ளன. 
  • எப்-35 விமானத்தில் ஏ,பி,சி என 3 ரகங்கள் உள்ளன. இதில் எப்-35ஏ வழக்கமாக மேலெழும்பி தரையிறங்கக் கூடியது. இதன் விலை 80 மில்லியன் டாலர். எப்-35 பி ரகம் குறுகிய ஓடு பாதையில் பறந்து செங்குத்தாக தரையிறங்கும் திறன் படைத்தது. இதன் விலை 115 மில்லியன் டாலர். எப்-35 சி ரக விமானம் போர் கப்பல்களில் தரையிறங்க கூடியது. இதன் விலை 110 மில்லியன் டாலர்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி:

  • மணிப்பூரில் குகி பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே கடந்த 2023-ல் ஏற்பட்ட இனக் கலவரத்துக்கு பிறகு அங்கு இன்னும் இயல்நிலை திரும்பாத சூழலில் முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து மணிப்பூரில் 14.02.2025 குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
  • குடியரசு தலைவர் ஆட்சி வரலாறு: இந்தியாவில் மாநில அரசை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்படுவது என்பது இது முதல் முறை அல்ல. அரசியலமைப்பின் 356வது பிரிவின்படி, அல்லது எளிமையான வார்த்தைகளில் சொன்னால், நாட்டின் 134 வெவ்வேறு பகுதிகளில் இதுவரை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதச மாநிலங்களில் தான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மணிப்பூரில் 11 முறையும், உத்தரபிரதேசத்தில் 10 முறையும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.


காசி தமிழ் சங்கமம் 3.0:

  • உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2025 பிப்ரவரி 15 முதல் 24 வரை காசி தமிழ் சங்கமம் 3.0 நடைபெறவுள்ளது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொன்மை நாகரீக பிணைப்பை கொண்டாடுவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரப்பிரதேச அரசின் ஒத்துழைப்புடன் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.   இந்த இரண்டு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள், வணிகர்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள், வாழ்க்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் வாய்ப்பளிப்பதாக காசி தமிழ் சங்கமம் திகழ்கிறது. 
  • சித்த மருத்துவ முறைக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் மிகவும் மதிக்கத்தக்க முனிவரான மகரிஷி அகத்தியரின் முக்கியப் பங்களிப்பு இந்த 3-வது ஆண்டு நிகழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 
  • இந்த முறை காசி தமிழ்ச் சங்கமம் 3.0-ன் மூலக்​கருத்தாக தமிழ் இலக்​கி​யத்தை முதன்​முறையாக எழுதிய மகரிஷி அகத்திய முனி என்று வைக்​கப்​பட்​டுள்​ளது
  • மகரிஷி அகத்தியரின் ஞானம், தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைத்திருப்பதோடு மாண்புகளையும், அறிவுப் பாரம்பரியத்தையும் பகிர்ந்து வழங்கியுள்ளது. இது குறித்த கண்காட்சி காசி தமிழ் சங்கமத்தில் இடம் பெறுகிறது. இதையொட்டி கருத்தரங்குகள், பயிலரங்குகள், நூல் வெளியீடுகள் ஆகியவை இடம் பெறும்.
  • 2022-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட   காசி தமிழ் சங்கமத்தின் வெற்றியையடுத்து 17.12.2023 முதல் 30.12.2003 வரை நமோ படித்துறையில் 2-வது நிகழ்வு நடைபெற்றது.


உலகின் மிகப்பெரிய முத்திரைப் பதிவு ஒவியத்தை படைக்கும் சாதனை நிகழ்வு / WORLDS LARGEST STAMP IMPRESSION PAINTING: 

  • நுகர்வோர் உரிமைகள், தயாரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு அசாதாரண சாதனை படைக்கும் முயற்சியில் BIS-(Bureau of Indian Standards) இறங்கியது. 
  • உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இந்த நினைவுச்சின்ன நிகழ்வு பிப்ரவரி 14, 2025 அன்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் (SVCE) நடைபெற்றது. 
  • இங்கு மாணவர்களும் BIS அதிகாரிகளும் 2030 சதுர அடி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய முத்திரை ஓவியத்தை(Worlds Largest Stamp Impression Painting) உருவாக்கினர். இதில் ISI, CRS மற்றும் ஹால்மார்க் முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவில் நம்பிக்கை மற்றும் தர உறுதிப்பாட்டின் அடையாளங்களாகும்.

டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு கெளரவ நைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது:
  • பிரிட்டன்-இந்தியா இடையே வணிக உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு ‘தி மோஸ்ட் எக்சலன்ஸ் ஆா்டா் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயா் (சிவில் பிரிவு)’ என்ற பட்டத்தை அவருக்கு பிரிட்டன் அரசா் சாா்லஸ் வழங்கியதாக டாடா குழுமம் தெரிவித்தது.

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


Post a Comment

0Comments

Post a Comment (0)