CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (16.02.2025- 17.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (16.02.2025- 17.02.2025)


ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன:

  • ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 682.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என  மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜனவரி 2023-24-ல் 636.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 7.21% வளர்ச்சியாகும்.
  • இந்தக் காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஏப்ரல்-ஜனவரி 2023-24 காலகட்டத்தில் 353.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 1.39% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • பெட்ரோலியம் அல்லாத பிற ஏற்றுமதிகள் ஏப்ரல் -ஜனவரி 2023-24ல் 283.45பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது ஏப்ரல்-ஜனவரி 2024-25-ல்  305.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • ஜனவரி 2025-ல் மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்துகள், அரிசி, ரத்தினங்கள், நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து காணப்பட்டது.
  • மின்னணு பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.29 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 78.97% அதிகரித்து 2025 ஜனவரியில் 4.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல்  8.77 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 7.44% அதிகரித்து 2025 ஜனவரியில் 9.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • மருந்துகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.13 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 21.46% அதிகரித்து 2025 ஜனவரியில் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • அரிசி ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 0.95 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 44.61% அதிகரித்து 2025 ஜனவரியில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • ரத்தினங்கள், நகைகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 15.95% அதிகரித்து 2025 ஜனவரியில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • 2025 ஜனவரி மாத்திற்கான மொத்த ஏற்றுமதி (வர்த்தகம், சேவைகள் இணைந்து) 74.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என  மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஜனவரி மாதத்துடன்  ஒப்பிடும்போது 9.72 சதவீத வளர்ச்சியாகும்.


பாரத் டெக்ஸ் 2025/ Bharat Tex 2025:

  • மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணைய அலுவலகம், கைவினைத்திறனின் துடிப்பை உணரவும், பாரம்பரியத்தை கௌரவிக்கவும் "பிரீத்திங் த்ரெட்ஸ்" என்ற தலைப்பில் ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு (பேஷன்) கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்தது.
  • மும்பை வைஷாலி எஸ் கோச்சர், வைஷாலி எஸ் த்ரெட்ஸ்டோரீஸ் பிரைவேட் லிமிடெட், கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பாரத் டெக்ஸ் 2025-ன் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தில் உள்ள ஆம்பிதியேட்டரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • கையால் நெய்த ஜவுளிகள் நாட்டின் செல்வமாகும். அவற்றை மிகவும் நவீன, உலகளாவிய வகையில் காட்சிப்படுத்துவது ஒரு சிறப்பாகும்.
  • இந்த ஆடை அலங்கார கண்காட்சியில் 5 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமங்களில் நெய்யப்பட்ட துணிகள் இருந்தன. மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் 20 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.


சண்டே ஆன் சைக்கிள்  என்ற இயக்கம் : (Sundays on Cycle)

  • ஃபிட் இந்தியா எனப்படும் உடல்திறன் இந்தியா இயக்கத்தின்(Fit India Movement's Flagship Programme) முதன்மை நிகழ்ச்சிகளில் ஒன்றான 'சண்டே ஆன் சைக்கிள்' (ஞாயிறுகளில் மிதிவண்டியில் பயணம்) என்ற இயக்கம் (16.02.2025) மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்றது. 
  • சைக்கிள் ஓட்டுதல் மூலம்  ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாசுபாட்டிற்கான தீர்வையும் இது ஊக்குவிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து ஆரோக்கிய நிபுணர்கள், பல்வேறு சைக்கிள் கிளப்புகள், தனிப்பட்ட உடற்பயிற்சி ஆர்வலர்கள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர்கள் இதில் பங்கேற்றனர்.
  • மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தலைமை வகித்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். உடல் பருமன் பிரச்சினையை, குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே உள்ள உடல் பருமன் பிரச்சினையை எதிர்த்துப் போராட பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் விடுத்த அழைப்பிற்கு ஏற்ப 'ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கம்' மும்பையில் நடைபெற்றது.


அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் -(PM-AASHA) அதாவது 2025-26 வரை தொடர மத்திய அரசு ஒப்புதல்:

  • 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை ஒருங்கிணைந்த பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்தை (அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் -PM-AASHA) அதாவது 2025-26 வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ஒருங்கிணைந்த பிரதமரின் ஆஷா திட்டம், கொள்முதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் அதிக செயல்திறனை ஏற்படுத்தும். இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு மலிவு விலையில் அத்தியாவசி வேளாண் விளைபொருட்கள்  கிடைப்பதை உறுதி செய்யும்.
  • உள்நாட்டு பருப்பு உற்பத்தியை மேம்படுத்துவதில் பங்களிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், 2024-25 கொள்முதல் ஆண்டில் உற்பத்தியில் 100% க்கு சமமான அளவில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்து, மசூர் ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு அனுமதித்துள்ளது.


மத்ஸ்யா-6000: இந்தியாவின் நான்காவது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது:

  • மத்திய அரசின் ஆழ்கடல் இயக்கச் செயல்பாடுகளின் கீழ், புவி அறிவியல் அமைச்சகம், சமுத்திரயன் திட்டத்தின் ஒரு பகுதியாக "மத்ஸ்யா-6000" என்று பெயரிடப்பட்ட 4-வது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து மேம்படுத்தும் பணியை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. 
  • இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் அதன் சிறிய 2.1 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ பகுதிக்குள் மூன்று பேரை தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இது இந்தியாவின் கடல் ஆய்வுத் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
  • இதற்கான வடிவமைப்பு கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மத்ஸ்யா-6000-ன் செயல்பாட்டிற்கு முக்கியமான பல்வேறு துணை அமைப்புகள் அடையாளம் காணப்பட்டு உருவாக்கப்பட்டன. 
  • துணை அமைப்புகள் அனைத்தும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை தற்போது முழுமையான ஒருங்கிணைப்புக்கும் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.


ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டம் 2021:

  • லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013, சில பொது ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அது தொடர்பான விஷயங்களை விசாரிக்க மத்திய அரசிற்கு லோக்பால் மற்றும் மாநிலங்களுக்கு லோக் ஆயுக்தா என்ற அமைப்பை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. 
  • நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், 16.01.2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2013 ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 3 இன் படி நடைமுறைக்கு வந்ததன் மூலம் நிறுவப்பட்ட ஒரு அமைப்புக்கு பிரத்தியேகமாக 'லோக்பால்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது.
  • ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் புகார்களை இலவசமாக நிவர்த்தி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி 2021-ஆம் ஆண்டில் 'ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த ஆம்பட்ஸ்மேன் திட்டம், 2021' ஐ அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, இந்தத் திட்டம், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது, 'ரிசர்வ் வங்கி- ஒருங்கிணைந்த லோக்பால் திட்டம்' என்று படிக்கப்பட்டது. 
  • ரிசர்வ் வங்கியின் திட்டத்தில் 'லோக்பால்' என்ற வார்த்தையின் பயன்பாடு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 இன் விதிகளுக்கு முரணானது, ஏனெனில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 நடைமுறைக்கு வந்த பிறகு 'லோக்பால்' என்ற சொல் லோக்பால் என்று அழைக்கப்படும் சட்டப் பிரிவு 3 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு அமைப்பைக் குறிக்கிறது.
  • எனவே, திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும், 'ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் (ஆம்பட்ஸ்மேன்) திட்டம், 2021' என்று மறுபெயரிடவும், அதன் குறைதீர்ப்பாளர் திட்டம் தொடர்பான பிற அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் உடனடியாக மறுபெயரிடவும் இந்த விஷயம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொண்டு செல்லப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கி இப்போது 'ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த ஆம்புட்ஸ்மேன் திட்டம், 2021' இன் இந்தி பதிப்பில் 'லோக்பால்' என்ற வார்த்தையை 'ஆம்பட்ஸ்மேன்' என்ற வார்த்தையாக மாற்றியுள்ளது.

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


Post a Comment

0Comments

Post a Comment (0)