மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை- தரவரிசை 2025: PANCHAYAT DEVOLUTION INDEX REPORT 2025 :
- மத்திய அரசு, கடந்த 13ம் தேதி, ' மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை- சான்றுகள் அடிப்படையிலான தரவரிசையை வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலானது 1. கட்டமைப்பு 2. செயல்பாடுகள் 3. நிதி 4. பிரதிநிதிகள் 5. திறன்மேம்பாடு 6. பொறுப்புடைமை ஆகியன அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
- தமிழகம் , ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும், அதிகார பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் முதல் இடத்தில் உள்ளது. செயல்முறைப்படுத்தும் காரணிகள் கணக்கீட்டின்படி தமிழகம் அதிக மதிப்பெண்களையும், ‘திறன் மேம்பாடு' மற்றும் ‘செயல்பாடுகள்’ ஆகியவற்றில் 2-வது இடத்தையும், நிதி பரிவர்த்தனைகளை பொருத்தவரை தமிழகம் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த குறியீட்டின்படி மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
- ஒட்டுமொத்த குறியீட்டின்படி மாநிலங்களின் தரவரிசை பட்டியல்: முதலிடம் – கர்நாடகம் ,இரண்டாமிடம் – கேரளா, 3-வது இடம்-தமிழகம்.
புதிய தேர்தல் ஆணையர்:
- புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஜோஷியின் நியமனத்தைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் மூன்று தேர்தல் ஆணையர்களைக் கொண்ட முழு அமைப்பாக மாறியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் ஓய்வைத் தொடர்ந்து தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமார், தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் செயல்படுவர்.
- ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான விவேக் ஜோஷி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் மத்திய பணிகளில் உள்ளார். முன்பு இவர், இந்திய அரசின் பணியாளர்கள் ஆணைய செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையம்:
- முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சம் வழங்கிய சான்றிதழை ஐஜி நேரில் வழங்கி வாழ்த்தினார்.
- மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் 2024ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், வருடாந்திர தரவரிசையில் சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தை மத்தியஅரசு தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது.
இந்தியா-கத்தாா் இடையிலான ஏழு ஒப்பந்தங்கள் 2025:
- இந்தியா-கத்தாா் இடையிலான நல்லுறவை வியூக அந்தஸ்துக்கு உயா்த்துவதற்கான ஒப்பந்தம் உள்பட ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
- இருதரப்பு நல்லுறவை வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கான ஒப்பந்தம்
- இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு மற்றும் நிதி முறைகேடுகள் தடுப்பு தொடர்பாக திருத்தப்பட்ட ஒப்பந்தம்
- நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக இந்தியாவின் நிதி அமைச்சகம் மற்றும் கத்தார் நிதி அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஆவணங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இன்வெஸ்ட் இந்தியா மற்றும் இன்வெஸ்ட் கத்தார் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் கத்தார் தொழிலதிபர்கள் சங்கம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
- கடந்த 2022-23-இல் 18.77 பில்லியன் டாலராக இருந்த இந்தியா-கத்தாா் வா்த்தகம், 2023-24-இல் 14 பில்லியன் டாலராக சரிவடைந்தது. 2000, ஏப்ரல் முதல் 2024, செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் கத்தாரிடமிருந்து இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.13,000 கோடி) அந்நிய நேரடி முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 13-வது கூட்டம்:
- மலேசியா-இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 13-வது கூட்டம் 2025 பிப்ரவரி 19-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது.
- மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் திரு லோக்மான் ஹக்கீம் பின் அலி ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
- பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
- இணையதளப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சூரிய கொரோனல் துளைகளின் வெப்ப நிலை மற்றும் அவற்றின் காந்தப் புலங்கள் கண்டறியப்பட்டுள்ளன:
- சூரிய கொரோனல் துளைகளின் வெப்ப நிலை மற்றும் அவற்றின் காந்தப் புலங்களை புதிய ஆய்வு ஒன்று துல்லியமாக மதிப்பீடு செய்துள்ளது. இது செயற்கைக்கோள்களை பாதிக்கின்ற விண்வெளி வானிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல் இந்திய கோடை கால மழைப்பொழிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- எக்ஸ்ரே-யில் இருண்மை பகுதியாகவும், சூரியனில் புறஊதா ஒளிப் படங்களாகவும் உள்ள கொரோனல் துளைகள் காந்தப்புலங்களை திறந்திருப்பதோடு, கோள்களுக்கு இடையேயான தன்மையையும் விண்வெளி வானிலையையும் புரிந்து கொள்வதற்கு முக்கியமானதாக இருக்கின்றன.
- 1970-களில் எக்ஸ்ரே செயற்கைக் கோள்கள் மூலம் சூரியனின் சுற்றுப்பகுதியில் கொரோனல் துளைகள் கண்டறியப்பட்டன. இந்த சூரிய செயல்பாடு நொடிக்கு 450-800 கிலோ மீட்டர் வேகத்திலான காற்று சூரியனிலிருந்து வெளியேறும் துகள்களை வெகு எளிதாக விண்வெளிக்கு கொண்டு வருகின்றன.
- இந்த ஆய்வு வானியல் மற்றும் வான் இயற்பியல் துறையின் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு இந்திய வான் இயற்பியல் கல்வி கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே முதன்மையானவராக இருந்துள்ளார்.
மறுமலர்ச்சி தினம்:
- பிப்ரவரி 19-ல் உ.வே.சா அவர்களின் பிறந்த நாளனது மறுமலர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது
- தமிழக சட்டப் பேரவையில் (டிசம்பர் 10, 2024) சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழக அரசு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
- இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் உ.வே.சாமிநாதன் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பிபிசி, 2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது:
- பிரபல ஆங்கில ஊடகமான பிபிசி, 2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருது வழங்கியிருக்கிறது.உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இந்தியாவின் சிறந்த விளையாட்டு விராங்கனை மனு பாக்கர்
- சிறந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை அவ்னி லேகரா
- சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை ஷீத்தல் தேவி
- வாழ்நாள் சாதனையாளர் மிதாலி ராஜ்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..