CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (20.02.2025- 21.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (20.02.2025- 21.02.2025)


உலகின் மிகப்பெரிய உந்துசக்தி கலவை இயந்திரம்: இஸ்ரோ உருவாக்கி சாதனை:

  • விண்வெளித்துறையி்ல தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை (World’s Largest Vertical Propellant Mixer) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • விண்வெளித்துறையில் இஸ்ரோ தற்சார்பு நிலையை அடைந்து வருகிறது. தற்போது கிரையோஜெனிக் இன்ஜின் உள்நாட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் 10 டன் எடையில் உலகின்மிகப் பெரிய உந்துசக்தி கலவை இயந்திரத்தை இஸ்ரோ வெற்றிகரமாக உருவாக்கியுள்து. இதன் எடை 10 டன். இந்த புதிய சாதனம் பெங்களூருவில் உள்ள மத்திய தயாரிப்பு தொழில்நட்ப மையம்(சிஎம்டிஐ) ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ராக்கெட்டில் திட எரிபொருள் உந்துசக்தி முக்கிய பங்காற்றுகிறது. ராக்கெட் மோட்டார் தயாரிப்பில், செங்குத்தான உந்துசக்தி கலவை சாதனம் மிக முக்கியமானது.


முதலாவது சோல் (SOUL) தலைமைத்துவ மாநாடு 2025:

  • புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி  சோல் (School of Ultimate Leadership (SOUL) Leadership Conclave 2025) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து உரையயாற்றினார். 
  • பிப்ரவரி 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த இரண்டு நாள் தலைமைத்துவ மாநாட்டில், அரசியல், விளையாட்டு, கலை, ஊடகம், ஆன்மீகம், பொதுக்கொள்கை, வர்த்தகம், சமூக நலன் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தலைமைத்துவப் பண்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கவும் செய்வார்கள்.  இந்த மாநாடு ஒத்துழைப்பு, சிந்தனை ஆகிய இரண்டு அம்சங்களுடன் தலைமைத்துவப் பண்பிற்கான சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும், வெற்றி, தோல்வி ஆகிய இரண்டிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதன் அம்சங்களை இளம் பார்வையாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
  • தலைமைத்துவப் பயிற்சி வழங்கும் நிறுவனம் (சோல்) என்பது குஜராத்தில் அமையவுள்ள தலைமைத்துவ நிறுவனமாகும். இது திறமையான தலைவர்களை உருவாக்குவதன் மூலம் பொது நலனை மேம்படுத்த உதவுகிறது. முறையான பயிற்சி மூலம் இந்தியாவில் அரசியல் தலைமைத்துவப் பயிற்சிக்கான சூழல் அமைப்பை விரிவுபடுத்துவதும், தகுதி, அர்ப்பணிப்புணர்வு, பொதுச் சேவைக்கான ஆர்வம் ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்களை சேர்ப்பதும் இதன் நோக்கமாகும். இன்றைய உலகில் தலைமைத்துவத்தின் சிக்கலான சவால்களை வழிநடத்த தேவையான நுண்ணறிவு, திறன்கள், நிபுணத்துவப் பண்புகளை இந்த நிறுவனம் (சோல்) கொண்டு வருகிறது.

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா:

  • டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா (21.02.2025) பதவியேற்றுக் கொண்டார். 
  • டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். 
  • துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்பு பாஜக 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அதன்படி, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். 
  • இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர். அந்த வரிசையில் ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக லோக் ஆயுக்தா தலைவர் :

  • தமிழக லோக் ஆயுக்தாவின் தலைவராக சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லோக்பால், லோக் ஆயுத்தா சட்டம் 2013-ல் கொண்டு வரப்பட்டது.
  • தமிழ்நாடு லோக் ஆயுத்தா சட்டம் – 13.11.2018
  • லாேக்பால் : மத்திய அரசு ஊழியர்கள் மீது உள்ள குற்றசாட்டுகளை விசாரிக்க உருவாக்கபட்டது.
  • லாேக்ஆயுக்தா : மாநில அரசு ஊழியர்கள் மீது உள்ள குற்றசாட்டுகளை விசாரிக்க உருவாக்கபட்டது.

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

Post a Comment

0Comments

Post a Comment (0)