அப்பா என்ற புதிய செயலி:
- தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் 'அப்பா' எனும் செயலி (The Anaithu Palli Parent Teachers Association -(APPA))உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இச்செயலி பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்றாட தகவல் பகிர்வு மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான அரசு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதை எளிதாக்குகிறது.
- அத்துடன் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அனைத்து உத்தரவுகளையும் இதில் காணலாம். சுமார் 46 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களை சார்ந்த சுமார் 12, ஆயிரம் தனியார் பள்ளிகள் இந்த தளத்தின் மூலம் பயனடைவர்.
அகத்தியர்" பற்றிய தேசிய கருத்தரங்கம்:
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ஆயுர்வேத பீடத்தில் உள்ள சம்ஹிதா மற்றும் சித்தாந்தத் துறை, "அகத்தியர்" பற்றிய தேசிய கருத்தரங்கை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.
- ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ கவுன்சில் மற்றும் சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆகியவை இந்த கருத்தரங்கிற்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கின.
- இது காசி தமிழ் சங்கமம் 3.0 -ன் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. இது மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச அரசின் முன்முயற்சியாகும், வாரணாசியில் பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதமரின் முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், அப்பதவியில் இருந்து கடந்த 2024 டிசம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற்றார்.
- இந்த சூழலில் பிரதமரின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிரதமர் மோடியின் பதவிக்காலம் அல்லது மறு உத்தரவு வரும் வரை இவர் அப்பதவியில் நீடிப்பார்.
இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு: வரலாறு படைத்த முதல் ஏற்றுமதிப் பொருட்கள்:
- ஆஸ்திரேலியாவுக்கு முதன்முறையாக இந்திய மாதுளை ஏற்றுமதி
- அத்திப்பழச் சாறு போலந்துக்கு முதல் முறையாக ஏற்றுமதி
- டிராகன் பழம், முதல் முறையாக லண்டனுக்கும் பஹ்ரைனுக்கும் ஏற்றுமதி
- அமெரிக்காவிற்கு மாதுளையின் முதல் சோதனை ஏற்றுமதி
- அசாமின் 'லெட்டேகு' பழம் துபாய்க்கு ஏற்றுமதி
- திரிபுராவில் இருந்து ஜெர்மனிக்கு பலாப்பழம் ஏற்றுமதி
- நாகாலாந்தில் இருந்து முதன்முறையாக லண்டன் சென்ற மிளகாய் வகையான 'ராஜா மிர்ச்சா'
- அசாமில் இருந்து அமெரிக்காவுக்கு 'சிவப்பு அரிசி' ஏற்றுமதி
- கேரளாவில் இருந்து துபாய், ஷார்ஜாவுக்கு வாழக்குளம் அன்னாசிப்பழத்தின் முதல் ஏற்றுமதி
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!