CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (24.02.2025- 25.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (24.02.2025- 25.02.2025)


 முதல்வர் மருந்தகம் திட்டம் :

  • பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுபோன்ற திட்டங்களால் வளமான, நலமான தமிழகம் உருவாகும் என்று உறுதிபட தெரிவித்தார்.
  • தமிழக கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் பணத்தை பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது:

  • வேலை நிமித்தமாக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்ஆர்ஐ), தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்புவதை ரெமிட்டன்ஸ் என சர்வதேச நிதியம் (International Monetary Fund வரையறை செய்துள்ளது.
  • கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் பணத்தை பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை, இந்திய பொருளாதாரத்தில் என்ஆர்ஐ அனுப்பும் பணத்தின் பங்களிப்பை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது.

விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – ஜனவரி, 2025:

  • விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் (அடிப்படை: 1986-87=100) 2025 - ம் ஆண்டு ஜனவரி (All-India Consumer Price Index Numbers For Agricultural And Rural Labourers )மாதத்தில் முறையே 4 & 3 புள்ளிகள் குறைந்து, 1316 & 1328 புள்ளிகளை எட்டியுள்ளது.
  • 2025 - ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதங்கள் முறையே 4.61% & 4.73% ஆக பதிவாகியுள்ளன. 
  • இது 2024 - ம் ஆண்டு ஜனவரியில் 7.52% & 7.37% ஆக இருந்தது. 2024 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 5.01% - வீதமாகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான விலைக் குறியீடு 5.05% ஆகும்.

வளரிளம் பெண்கள் மன்றம் / ADOLESCENT GIRLS CLUB:

  • வளரிளம் பருவம் என்பது பல்வேறு சவால்கள், வாய்ப்புகள் கொண்ட ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும். ஒரு தனிநபர், குழந்தைப் பருவத்தின் பாதுகாப்பான சூழலிலிருந்து, முதிர்வயதை அடைய முயற்சிக்கும் தருணம் இதுவாகும். இது தீவிரமான உடலியல் மற்றும் உளவியல் மாற்றத்தின் ஒரு கட்டமாகும்.  இதில் பதின் பருவத்தினர் மிகவும்  மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களை ஆரோக்கியமற்ற மற்றும் ஆபத்தான நடத்தைகளுக்கு வழி நடத்தக் கூடும். எனினும், சரியான வழிகாட்டுதல் இருந்தால் இது அவர்களின் வலிமைகளையும் திறமைகளையும் ஆராய்ந்து, அவர்களின் கனவுகளை செயல்படுத்த உதவும்.
  • மகளிர் இயக்கத்தின் கீழ் முதலாவது வளரிளம் பருவப் பெண்கள் மன்றம், நாகாலாந்தின் வோக்காவிலுள்ள டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் 50 வளரிளம் பருவப் பெண்களுடன் தொடங்கப்பட்டது. 10 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இத்தகைய இளம் பருவப் பெண்கள் மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • தன்னம்பிக்கை மிக்க, தகவலறிந்த மற்றும் இரக்கமுள்ள தலைவர்களாக மாற்றுவதற்கு கல்வி, சுகாதார விழிப்புணர்வு, சமூக மற்றும்  வாழ்க்கைத் திறன்களை கட்டமைப்பதன் மூலம்  வளரிளம் பருவப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கச் செய்வது இந்த மன்றத்தின் நோக்கமாகும்.


பாகேஷ்வர் தாம் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்:

  • மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி (23.02.2025) அடிக்கல் நாட்டினார்.
  • நோக்கம்: சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்குதல்.
  • கட்டமைப்பு: 10 ஏக்கர் பரப்பளவில், ஆரம்ப கட்டத்தில் 100 படுக்கைகளுடன் கட்டமைக்கப்படும்.
  • முக்கியத்துவம்: கோயில்கள் மற்றும் புனித இடங்கள் வழிபாட்டு மையங்களாக மட்டுமன்றி, அறிவியல் மற்றும் சமூக சிந்தனைகளின் மையங்களாகும் என பிரதமர் கூறினார்.
  • மடாலயம்: பாகேஷ்வர் தாம் ஆன்மீக மையமாக இருந்து சுகாதார மையமாக மாறுகின்றது.

உலகில் அதிக புற்றுநோயாளிகள் வாழும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம்:

  • இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • உலகம் முழுவதும் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. சுமார் 36 வகையான புற்றுநோய்கள் காணப்படுகின்றன. உலகில் அதிக புற்றுநோயாளிகள் வாழும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா 2-ம் இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர்
  • இந்தியாவை பொறுத்தவரை 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.
  • இதை தடுக்க முன்கூட்டியே பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும். வாய், கருப்பை, நுரையீல் புற்றுநோயாலும் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 
  • இந்திய புற்றுநோயாளிகளில் 50 சதவீதம் பேர் 50 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவ்வாறு ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)