தேசிய அறிவியல் தினம் 2025:
- கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் சங்கத்தின் ஆய்வகத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற இயற்பியலாளர் சர் சி.வி.ராமன் கண்டுபிடித்த 'ராமன் விளைவை' நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தக் கண்டுபிடிப்பிற்காக, அவருக்கு 1930-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- தேசிய அறிவியல் தினத்தன்று, அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. முதலாவது அறிவியல் தினம் 1987-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி கொண்டாடப்பட்டது.
- எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் என்ற கருபொருளில் அறிவியல் தினம் கொண்டாடப்பட உள்ளது.
- உலக அளவில் இந்தியாவின் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும் வளர்ச்சியடைந்த தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாட்டின் அறிவியல், தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படவுள்ளது.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2025:
- ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு ( Great Backyard Bird Count - GBBC) உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நான்கு நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்வில் உலக முழுவதும் பலர் தங்கள் பகுதியில் உள்ள பறவைகளை ஆவணப்படுத்தி மக்கள் அறிவியல் தளமான ebird-ல் பதிவேற்றுவர்.
- இக்கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தரவுகளை கொண்டு பறவை இனங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் பாதிப்புகள் போன்வற்றை அறிந்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை உலகளாவிய ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ந்தது.
- இவ்வாண்டிற்கான ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் அதிக பறவை இனங்கள் வசிக்கும் வாழ்விடங்களில் தமிழ்நாட்டில் மீண்டும் முதலிடத்தை இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டம் எலத்தூர் குளம் பெற்றுள்ளது.இந்திய அளவில் இது 22 வது இடம்.
பாரத் நெட்:
- தமிழகத்தில் ‘பாரத் நெட்’ திட்டத்தின் மூலம் 11,507 கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாரத் நெட்’ திட்டம், இந்தியாவின் அனைத்து கிராமங்களையும், கிராம பஞ்சாயத்துகளையும் டிஜிட்டல் முறையில் இணைப்பதற்கான பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
- நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் இணைத்து, அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1 ஜிபிபிஎஸ் அளவிலான அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பாரத் அழைப்பு மாநாடு 2025:
- மும்பையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை(ஐஎம்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி) ஏற்பாடு செய்திருந்த 'பாரத் அழைப்பு மாநாடு 2025'-ஐ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
- 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான பாதை: அனைவருக்குமான செழுமை' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் முதன்மைப் பேச்சாளராக இருந்தார்.
- பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கான இணையற்ற வாய்ப்புகளை வழங்கி, உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா எவ்வாறு முன்னணியில் நிற்கிறது என்பதை இந்த மாநாடு எடுத்துக்காட்டுகிறது. வலுவான மற்றும் நெகிழ்திறன் கொண்ட பொருளாதாரம், பெரிய மற்றும் துடிப்பான நுகர்வோர் சந்தை மற்றும் வர்த்தகத்திற்கு உகந்த கொள்கைகளை வளர்ப்பதில் உறுதிபூண்டுள்ள அரசு ஆகியவற்றுடன், உலகின் முன்னணி முதலீட்டு இடங்களில் ஒன்றாக இந்தியா மாறத் தயாராக உள்ளது.
- இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய திரு பியூஷ் கோயல், 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றும், அவர்களில் பலர் ஆர்வமுள்ள இளைஞர்கள் என்றும் கூறினார்.
உலகை காதி அணியச் செய்வோம்" பிரச்சாரம்:
- காதி நிறுவனம் கதர் ஆடை அணியும் பழக்கத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் "உலகை காதி அணியச் செய்வோம்" பிரச்சாரம் நாட்டின் வளமான ஜவுளி பாரம்பரியத்தை உலகளவில் ஆடை வடிவமைப்புகளுக்கான தற்போதைய கலாச்சாரத்துடன் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தப் பிரச்சாரம் விளம்பரத்துறையினர் மற்றும் தனிப்பட்ட முறையில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சவாலாக இருக்கும். வேவ்ஸ் எனப்படும் உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி புதுமையான விளம்பரங்கள் மூலம் கதர் ஆடையை உலகம் முழுவதிலும் அனைவராலும் விரும்பி அணியும் வகையில், வர்த்தக முத்திரையுடன் நிலை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.
- மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய விளம்பர முகவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டிகள் உள்நாட்டு, சர்வதேச சந்தைகளில் இருந்து பங்கேற்பாளர்களை டிஜிட்டல், அச்சு ஊடகம், வீடியோ, அனுபவ வடிவங்களில் ஆக்கபூர்வமான கருத்துக்களை உருவாக்க அழைக்கிறது. சிந்தனைத் திறன், படைப்பாற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், உலகிற்கான கதர் ஆடை என்ற வர்த்தக முத்திரையை மேம்படுத்தவும், நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும் உலகளவிலான புதிய யோசனைகளை முன்வைக்க ஊக்குவிக்கிறது.
- மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மாநாட்டு மையத்தில் 2025 மே 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. வேவ்ஸ் மாநாடு ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் நான்கு பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒரே நாடு-ஒரே துறைமுகம் செயல்முறை :
- இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், அதன் உலகளாவிய வர்த்தக இருப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முக்கிய முயற்சிகளை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். கடல்சார் துறைக்காக மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளின் பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க மும்பையில் இன்று நடைபெற்ற பங்குதாரர் கூட்டத்தின் போது இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டன.
- இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் செயல்பாடுகளை தரப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு முயற்சியான 'ஒரே நாடு-ஒரே துறைமுகம் செயல்முறை' அமைச்சர் தொடங்கிவைத்தார். திறன் பற்றாக்குறை, அதிகரித்த செலவுகள் மற்றும் செயல்பாட்டு தாமதங்களுக்கு வழிவகுக்கும் ஆவணங்கள் மற்றும் செயல்முறைகளில் உள்ள முரண்பாடுகளை அகற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!