CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (02.02.2025- 03.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (02.02.2025- 03.02.2025)


19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை (2025) தொடர்ந்து 2வது முறையாக இந்தியா வென்றுள்ளது:

  • 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில்  18.01.2025-தேதி தொடங்கியது. 
  • 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. 
  • இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 
  • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது
  • .இந்நிலையில், ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை தேர்வு செய்து இந்த தொடரின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த அணியில் 4 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
  • ஐ.சி.சி. தேர்வு செய்த சிறந்த அணி விவரம்: கொங்காடி திரிஷா (இந்தியா), ஜெம்மா போத்தா (தென் ஆப்பிரிக்கா), டேவினா பெரின் (இங்கிலாந்து), ஜி கமலினி (இந்தியா), கைம்ஹே ப்ரே (ஆஸ்திரேலியா), பூஜா மஹதோ (நேபாளம்), கைலா ரெய்னெக் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), கேட்டி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து), ஆயுஷி சுக்லா (இந்தியா), சாமோதி பிரபோதா (இலங்கை), வைஷ்ணவி சர்மா (இந்தியா).


67வது கிராமி விருதுகள் 2025:

  • இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் உயரிய விருது கிராமி விருது ஆகும். கடந்த 1951ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பாப், ராக், நாட்டுப்புறம், ஜாஸ் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 
  • அந்த வகையில், 67வது கிராமி விருது விழா மற்றும் கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 
  • மொத்தம் 94 பிரிவுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான பாடகி சந்திரிகா டாண்டன், தனது 'திரிவேணி' இசை ஆல்பத்திற்காக 'சிறந்த தற்கால ஆல்பம்' என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார். சென்னையில் பிறந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • குறிப்பாக இந்த விழாவில் "நாட் லைக் அஸ்" என்ற பாடல் மற்றும் 5 பிரிவுகளின் கீழ் விருது வென்று அசத்தியுள்ளது. அதாவது சிறந்த ராப், சிறந்த ராப் பெர்பாமன்ஸ், சிறந்த மியூசிக் வீடியோ, சிறந்த ரெக்கார்டிங் , இந்த ஆண்டின் சிறந்த பாடல் என 5 கிராமி விருதுகளை குவித்துள்ளது.


ரயில்வே பட்ஜெட்டில் 2025-26 தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடு:

  • 2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட 7.5 மடங்கு அதிகமாகும்.
  • 2014-ம் ஆண்டிலிருந்து 2025-ம் ஆண்டு வரை 1303 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் உள்ள முழு ரயில் கட்டமைப்புத் தூரத்தை ஏறத்தாழ நெருங்கியுள்ளது.
  • 2014-ம் ஆண்டு முதல் 2,242 கிலோ மீட்டர் தூர ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94 சதவீதம் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
  • ரூ.33,467 கோடி செலவில் 2,587 கிலோ மீட்டருக்கான 22 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2948 கோடி மதிப்பில் 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
  • கவச் அமைப்பை 1460 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 601 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • 715 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் 2014-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் பயணிகளுக்கான மின்தூக்கிகள் 98-ம், நகரும் படிக்கட்டுகள் 53-ம் அமைக்கப்பட்டுள்ளன. 415 ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
  • 19 மாவட்டங்களை உள்ளடக்கி 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்த ரயில்கள் 20 நிலையங்களில் நின்று செல்கிறது.
  • மால்டா நகரிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ஒரு அமிர்த பாரத் விரைவு ரயில் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தின் வழியே செல்கிறது. இரண்டு இடங்களில் அந்த ரயில் நின்று செல்கிறது.

'ஈகிள்' என்ற பெயரில் குழுவை அமைத்த காங்கிரஸ்:

  • இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை (EAGLE) அமைத்துள்ளார்.
  • இந்த குழு முதலில் மராட்டிய வாக்காளர் பட்டியல் மோசடி பிரச்சினையை எடுத்துக்கொண்டு, விரைவில் தலைமைக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும். EAGLE மற்ற மாநிலங்களில் கடந்த கால தேர்தல்களையும் பகுப்பாய்வு செய்யும், மேலும் வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து பிற பிரச்சினைகளையும் முன்கூட்டியே கண்காணிக்கும்.
 
SwaRail SuperApp -ரெயில் பயணிகளுக்காக சிறப்பு செயலி

  • இந்திய ரெயில்வே ஸ்வாரெயில் சூப்பர்ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு, ரெயில் கண்காணிப்பு மற்றும் ரெயில்வே சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தீர்வாகும், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் AI-இயங்கும் அம்சங்களுடன் பயனர்களின் வசதியை மேம்படுத்துகிறது. 
  • இந்த தகவலை ரெயில்வே போக்குவரத்து செய்தி இணையதளமான ரெயில்வே சப்ளை தெரிவித்துள்ளது . பயணிகளின் வசதியாக முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பெறலாம் மற்றும் சீசன் பாஸ்களை ஆப் மூலம் நிர்வகிக்கலாம். 
  • இந்த செயலி மூலம் நிகழ்நேர PNR நிலையைக் கண்காணிப்பது, இருக்கை கிடைப்பது சரிபார்ப்புகள் மற்றும் ரெயில்வே அட்டவணை விசாரணைகள் , ஓடுதல் நிலை, ரெயில் தேடல், பெட்டிகள் அமைப்பு உள்ளிட்ட பல சேவைகளை இச்செயலி வழங்கவுள்ளது.
  • பயணச்சீட்டு, பார்சல் மற்றும் சரக்குக் கண்காணிப்பு, உணவு ஆர்டர்களுக்கான ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான ரெயில் மடாட் போன்றவற்றையும் இந்த செயலி வாயிலாக பெறலாம் . இதன் மூலம் சேவைகளை ஒருங்கிணைத்து, ரெயில்வே தொடர்பான செயல்பாடுகளை எளிதாக்குகிறது.
  • ரெயில்வே அமைச்சகம், Google Play Store மற்றும் Apple TestFlight ஆகியவற்றில் பீட்டா சோதனைக்காக SwaRail SuperApp ஐ வெளியிட்டது

அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் நிதி 2025:

  • 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மத்திய வெளியுறவுத்துறைக்கு மொத்தம் ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
  • இதில் ரூ.5,483 கோடி என்பது பிற நாடுகளுக்கு உதவிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு உதவி செய்ய மத்திய அரசு சார்பில் ரூ.5,806 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை அந்த தொகை என்பது சற்று குறைக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விபரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • அதன்படி அண்டை நாடான பூடானுக்கு தான் அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது. 2025-26ம் நிதியாண்டில் பூடானுக்கு இந்தியா சார்பில் ரூ.2,150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.2,543 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை குறைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த பட்டியலில் நேபாளம் 2வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டுக்கு இந்தியா ரூ.700 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 
  • கடந்த நிதி ஆண்டில் மாலத்தீவுக்கு ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.600 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த பட்டியலில் 4வது இடத்தில் இலங்கை உள்ளது. இலங்கைக்கு, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ரூ.300 கோடி நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • 5வது இடத்தில் வங்கதேசம் உள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் அதேபோல் ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளது.

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடர்:

  • நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார். 
  • தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். 
  • இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

அண்ணா நினைவு நாள்

  • முன்னாள் தமிழ் நாடு முதல் அமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் பிப்ரவரி 3-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.
  • 1935-ல் பெரியார், அண்ணா சந்திப்பு நடந்தது. திருப்பூரில் நடந்த மாநாட்டில் அண்ணாவின் பேச்சு பெரியாரைக் கவர்ந்தது.
  • பெரியாரின் சுவீகாரபுத்திரனாக இருந்தார் அண்ணா.
  • 1935-ல் அண்ணா நீதிக்கட்சியில் இணைந்தார். அதன் 'ஜஸ்டிஸ்' என்ற பத்திரிக்கையின் துணைப் பதிப்பாசிரியராக பணியாற்றினார்.
  • பெரியாரின் குடியரசு, விடுதலை பத்திரிக்கைகளின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
  • பின்னர் திராவிட நாடு எனும் சொந்த பத்திரிக்கையைத் தொடங்கினார்.
  • 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ல் பெரியார் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், அண்ணாதுரை தீர்மானம் இயற்றி நீதிக் கட்சியை 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார்.
  • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்
  • காஞ்சிபுரத்தில் 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் நடைபெற்ற முதலாவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார்.
  • இந்தித் திணிப்பு தொடர்ந்து நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு 1960 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சென்னையின் கோடம்பாக்கத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் DMK-ன் இந்தித் திணிப்புக்கு எதிரான திறந்தவெளி மாநாடு நடைபெற்றது.
  • அண்ணாதுரை 1965 ஆம் ஆண்டில் இந்தியாவின் 15 வது குடியரசு தினம், மற்றும் இந்தியாவின் அலுவலக மொழியாக இந்தி மொழி நடைமுறைக்கு வந்த தினமான ஜனவரி 26-'துக்க தினமாக அறிவித்தார்
  • 1957 ஆம் ஆண்டு தனது சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்திலிருந்து மதராஸ் சட்ட சபைங்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஆனார்.
  • 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த போதும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1967 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மெட்ராஸ் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்
  • தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த 'கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்' என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, 'தமிழக அரசு' என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த 'சத்யமேவ ஜயதே' என்ற வடமொழி வாக்கியம். 'வாய்மையே வெல்லும்' என்று தமிழில் மாறியது.
  • சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.
  • 'ஆகாஷ்வாணி' என்ற வார்த்தைக்குப் பதிலாக வானொலி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.
  • 15.5.1967-ல் படி அரிசித் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார் அண்ணா.
  • 27.6.1967-ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 1967 சுயமரியாதை திருமணச் சட்டம் இயற்றப்பட்டது.
  • தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை அறவே ஒழிக்க ஏதுவாக, இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..






Post a Comment

0Comments

Post a Comment (0)