CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (04.02.2025- 05.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (04.02.2025- 05.02.2025)



தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0:

  • சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
  • காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.
  • இந்த உச்சி மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
  • மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0-ல், ( TAMIL NADU CLIMATE SUMMIT 3.0) தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் “காலநிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறை” (Lifestyle for Climate) ஆவணத்தை வெளியிட்டார்.


சாகித்ய அகாடமி விருது 2025:

  • இக் ஹோர் அஸ்வத்தாமா (சிறுகதைகள்) என்ற டோக்ரி மொழி நூலுக்காக அதன் ஆசிரியர் மறைந்த சமன் அரோராவுக்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்க சாகித்ய அகாடமி தலைவர் திரு மாதவ் கௌசிக் ஒப்புதல் அளித்துள்ளார். 
  • வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படையில் இந்தப் புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
  • டோக்ரி மொழியில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை டாக்டர் சுஷ்மா ராணி, டாக்டர் வீணா குப்தா, டாக்டர் ஜிதேந்திர உதம்புரி ஆகியோரை கொண்ட நடுவர் குழு பரிந்துரைத்தது.
  • விருது பொறிக்கப்பட்ட செப்புத் தகடு, ரூ.1,00,000/- ரொக்கப் பரிசு ஆகியவை விருது பெற்றவரின் குடும்ப உறுப்பினர்/பரிந்துரைக்கப்பட்டவருக்கு 2025 மார்ச் 8 அன்று புது தில்லியில் நடைபெறும் சிறப்பு விழாவில் வழங்கப்படும்.

Guillain-Barre Syndrome (GBS):

  • திருவள்ளூா் அருகே ஜிபிஎஸ் நோய்த் தொற்றால் 4-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பகுதி முழுவதும் ஒரு வாரம் வரை சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலா் பிரியதா்ஷினி தெரிவித்தாா்.
  • Guillain-Barre Syndrome (GBS) என்பது புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்னுடல் தாக்கக் கோளாறு.
  • ஜிபிஎஸ் திடீரென்று வெளிப்படும் மற்றும் விரைவாக அதிகரிக்கக்கூடியது. இது தசை பலவீனம், உணர்வின்மை மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது.
  • ஜிபிஎஸ் அறிகுறிகள்: தசை பலவீனம், கூச்ச உணர்வு, நிலையற்ற நடைபயிற்சி, கண் மற்றும் முக அசைவுகளில் சிரமம், கடுமையான வலி, சிறுநீர்ப்பை மற்றும் குடல் செயலிழப்பு, மற்றும் விரைவான இதயத் துடிப்பு ஆகும்.
  • ஜிபிஎஸ் நோயின் வகைகள்: Acute Inflammatory Demyelinating Polyneuropathy (AIDP), Miller Fisher Syndrome (MFS), Acute Motor Axonal Neuropathy (AMAN), Acute Motor and Sensory Axonal Neuropathy (AMSAN), Bickerstaff Brainstem Encephalitis (BBE).
  • ஜிபிஎஸ் சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் இது பெரும்பாலும் தொற்றுநோயால் தூண்டப்படலாம்.
  • GBS கண்டறிதல்: இடுப்பு பஞ்சர், எலக்ட்ரோமோகிராபி (EMG), நரம்பு கடத்தல் ஆய்வுகள் (NCS).
  • GBS சிகிச்சை: பிளாஸ்மாபெரிசிஸ், இம்யூனோகுளோபுலின் சிகிச்சை (IVIg)


உலக அளவிலான செல்போன் தயாரிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • 2014ஆம் ஆண்டு நாட்டில் 2 மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 தயாரிப்பு மையங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
  • இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 32.5 கோடி முதல் 33 கோடி செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சராசரியாக ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் தயாராகின்றன.
  • இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்போன்களில் 99.2% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. 2024ஆம் ஆண்டில் உள்நாட்டின் தயாரிப்பு மதிப்பு ரூ. 4,22,000 கோடியாக உள்ளது. ஏற்றுமதி மதிப்பு ரூ. 1,29,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கட்டாய மத மாற்ற தடைச் சட்ட மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:

  • ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்ட மசோதா  முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. 
  • மாநில சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் இதனை அறிமுகம் செய்தார். 
  • கட்டாயப்படுத்தியும் தூண்டுதலின் பேரிலும் மோசடியாகவும் மற்றும் திருமணம் மூலமும் மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்படுகிறது.
  • இது போன்ற மதமாற்றங்களை கைது செய்யக்கூடிய மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்பட்டு, குற்றவாளிகளாக கண்டறியப்படுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.


38-வது தேசிய விளையாட்டு போட்டி 2025:

  • 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. 
  • இதில் பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உத்தராகண்டின் சூர்யக்‌ஷ் ராவத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
  • தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆத்யா வரியத், சதீஷ் கருணாகரன் ஜோடி 21-11, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா வின் தீப் ரம்பியா, அட்சய வரங் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான 3X3 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி அரை இறுதியில் 15-16 என்ற கணக்கில் கேரளாவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
  • ஆடவருக்கான பளுதூக்குதலில் +109 கிலோ எடை பிரிவில் தமிழகத்தின் எஸ்.ருத்ராமயன் 355 கிலோ (ஸ்நாட்ச் 175 + கினீன் அன்ட் ஜெர்க் 355) எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் அவர், தேசிய சாதனையை படைத்தார்.
  • ஸ்குவாஷில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், மகாராஷ்டிராவை சேர்ந்த ராகுலை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத்கான் புதிய சாதனை படைத்துள்ளார்:

  • 461 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் 633* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், நான்கு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
  • மேற்கிந்திய தீவுகள் மற்றும் பல அணிகளுக்காக விளையாடியுள்ள பிராவோவின் 18 ஆண்டுகால டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 3 முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..






Post a Comment

0Comments

Post a Comment (0)