CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (06.02.2025- 07.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025 - (06.02.2025- 07.02.2025)



ரெப்போ வட்டி விகிதம்:

  • ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
  • இதில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்தார்.
  • தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக உள்ள நிலையில் 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதனால் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும், 2025-26 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்றும் பணவீக்கம் 4.2% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

  • 2025-26 ஆம் நிதியாண்டில் நான்கு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 6.7%, 7%, 6.5%, 6.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆர்பிஐ கூறியுள்ளது.


தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள்:

  • இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொல்பொருள் துறை ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் 30 இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டதாக  மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
  • மாநிலங்களவையில் திரு ஆர் கிரிராஜன்  எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில், கீழடியில் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகழாய்வு பணிகளை மேற்கொண்டதாகவும், 2020-ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை அந்தப் பணிகளை தொடர்ந்து செய்துவருவதாகவும் தெரிவித்தார். 2020-ம் ஆண்டு கொடுமணலிலும், 2020-21-ம் ஆண்டுகளில் மயிலாடும் பாறையிலும் ஆய்வுப் பணிகள் நடைபெற்றதாக அவர் கூறினார்.

  • கீழடி, சிவகலை, கொற்கை, ஆதிச்சநல்லூர் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப்பகுதிகள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்  ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


சிறந்த ஆரோக்கியத்திற்காக சதாவரி பிரச்சாரம் / Shatavari – For Better Health :

  • மருத்துவ தாவரங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,"சிறந்த ஆரோக்கியத்திற்காக சதாவரி" (Shatavari – For Better Health) என்ற இனங்கள் சார்ந்த பிரச்சாரத்தை, மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)  திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று  தொடங்கி வைத்தார்.
  • பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிப்பதிலும், பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்பட்ட சதாவரி, இப்போது இந்த பிரச்சாரத்தின் மூலம்  அனைவரையும் ஈர்க்கும்,  இந்த முன்முயற்சி நாடு முழுவதும் பரந்த பார்வையாளர்களை சென்றடைவதை உறுதி செய்யும். இந்தியாவில் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருத்துவ தாவரங்களை ஊக்குவிப்பதற்கான ஆயுஷ் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த பிரச்சாரம் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க  நடவடிக்கையாகும்.
  • ஆகஸ்ட் 15, 2022 அன்று தனது சுதந்திர தின உரையின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டிய ஐந்து உறுதிமொழிகள் இலக்கை அடைவதில் சதாவரியின் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார். 2047 இல்  நூற்றாண்டு  சுதந்திர தினத்தின்பொது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பிரதமர்  உறுதிபூண்டுள்ளார் . இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய ஆதாரமாக சதாவரி தாவரம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குடிமக்களின் முழுமையான நல்வாழ்வு என்ற பரந்த இலக்குடன் ஒத்துப்போகிறது.


சர்வதேச தோல் கண்காட்சி 2025 / Delhi International Leather Expo (DILEX) 2025:

  • தோல் ஏற்றுமதிக்கான கவுன்சிலானது தில்லி சர்வதேச தோல் கண்காட்சி 2025-(Delhi International Leather Expo (DILEX) 2025) ஐ பிப்ரவரி 20-21 தேதிகளில் புதுதில்லி ஐசிசி துவாரகாவில் உள்ள யஷோபூமியில் நடத்துகிறது.
  • இந்தக் கண்காட்சியானது உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் சமீபத்திய தயாரிப்புகள், புதுமைப் படைப்புகள்  மற்றும் திறன்களை சாத்தியமான ஆதார மாற்றுகளைத் தேடும் சர்வதேச வாங்குபவர்களுக்கு காட்சிப்படுத்த ஒரு வலுவான தளத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மையான நிகழ்வாகும். 
  • "இந்தியாவில் தயாரிப்போம்" மற்றும்  "தற்சார்பு இந்தியா" முன்முயற்சிகளுடன் இணைந்து, இந்தக் கண்காட்சி ஏற்றுமதிகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உலகச் சந்தைகளில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்க அரசு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஈரமான நீல தோல் மீதான அடிப்படை சுங்க வரி  பிப்ரவரி 2, 2025 முதல் 10% இலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  
  • இது  தொழில்துறையினரின் முக்கியமான கோரிக்கையை பூர்த்தி செய்கிறது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் குறிப்பாக காலணித் துறையில், உற்பத்தித்திறன், தரம் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டுதல் மற்றும் ரூ.1.1 லட்சம் கோடி ஏற்றுமதியை உருவாக்குதல் மற்றும் 22 லட்சம் வேலைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பாரத்நெட் / BHARATNET :

  • நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்க ‘பாரத்நெட்’ திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
  • மொபைல் சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதியுதவியுடன் பல திட்டங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களில் 3,500 தொலைத்தொடர்பு சேவை இல்லாத கிராமங்கள் மற்றும் 286 தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் வழியே 2,829 மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

மல்டி-மாடல் என்செம்பிள் / Multi-Model Ensemble (MME)  :

  • புள்ளிவிவர முன்னறிவிப்பு முறை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மல்டி-மாடல் என்செம்பிள் (எம்எம்இ-Multi-Model Ensemble- (MME)) அடிப்படையிலான முன்னறிவிப்பு முறை ஆகிய இரண்டின் அடிப்படையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கான மாதாந்திர மற்றும் பருவகால செயல்பாட்டு முன்னறிவிப்புகளை வெளியிடுவதற்கு இந்திய வானிலை ஆய்வுத் துறை ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்துள்ளது.
  • எம்எம்இ அணுகுமுறை, இந்திய வானிலை ஆய்வு மையம் பருவமழை முன்னறிவிப்பு அமைப்பு, பல்வேறு உலகளாவிய பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களிலிருந்து இணைக்கப்பட்ட உலகளாவிய பருவநிலை மாதிரிகளை பயன்படுத்துகிறது.
  •  இந்த தரவுகள் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படுகின்றன. சிறந்த பிராந்திய திட்டமிடலுக்கான பிராந்திய சராசரி மழைப்பொழிவு முன்னறிவிப்புகளுடன் பருவகால மழையின் இடஞ்சார்ந்த விநியோகத்தை முன்னறிவிப்பதற்கான பல்வேறு பயனர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கோரிக்கைகளை இது பூர்த்தி செய்வதாகும்.
  • 2007-ம் ஆண்டில் புள்ளிவிவர குழும முன்னறிவிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, 2021-ம் ஆண்டில் பருவகால முன்னறிவிப்புக்கு எம்எம்இ அணுகுமுறையைப் பயன்படுத்தியதிலிருந்து, பருவகால மழைப்பொழிவுக்கான இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் செயல்பாட்டு முன்னறிவிப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. 
  • எடுத்துக்காட்டாக, சமீபத்திய 18 ஆண்டுகளில் (2007-2024) அதே எண்ணிக்கையிலான ஆண்டுகளுடன் (1989-2006) ஒப்பிடும்போது, ​​இந்தியாவின் பருவகால மழைப்பொழிவை முன்னறிவிப்பதில் முழுமையான முன்னறிவிப்பு பிழை சுமார் 21% குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமான முன்னறிவிப்பைக் குறிக்கிறது. 
  • கடந்த 10 ஆண்டுகளில் (2015-2024) இந்திய கோடை பருவமழையின் முன்னறிவிப்பின் சராசரி முழுமையான பிழை நீண்ட கால சராசரியில் 5.01% ஆகும்.

புதிய சுங்கச் சாவடி கட்டண முறை 2025 :

  • ஆண்டுக்கு ரூ.3000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது. 
  • சுங்க வசூலை ஒழுங்குபடுத்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, மத்திய அரசு தனியார் வாகன உரிமையாளர்களுக்கான இரண்டு புரட்சிகரமான புதிய சுங்கச் சாவடி கட்டண முறைகளை அறிமுகம் செய்ய உள்ளது. 
  • அதாவது, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்துதல் அல்லது ஒரே ஒருமுறை மொத்தமாக கட்டணம் செலுத்துதல் என்ற புரட்சிகரமான புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
  • ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது வாழ்நாள் கட்டணமாக 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ரூ.30,000 கட்டணத்தை ஒரு முறை செலுத்தினால், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தாமல் சென்று வரலாம்.


இந்திய வன நிலை அறிக்கை– 2023:

  • நாட்டின் மொத்த நிலப்பரப்பில்  குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக அல்லது மரங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் மற்றும் அந்த மொத்தப் பசுமை நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு குன்றுகள் மற்றும் மலைப்பகுதிகளில்  இருக்க வேண்டும் என்ற தேசிய இலக்கைக் தேசிய வனக் கொள்கை 1988, கொண்டுள்ளது.
  • டேராடூனில் உள்ள இந்திய வன கணக்கெடுப்பு ஆய்வு வெளியிட்ட சமீபத்திய இந்திய வன நிலை அறிக்கை– 2023-இன் படி, நாட்டின் மொத்த மரங்கள் மற்றும் வனப்பகுதி 8,27,356.95 சதுர கிலோமீட்டர் ஆகும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.15% ஆகும். முந்தைய 2021 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு அறிக்கையுடன் ஒப்பிடும்போது நாட்டின் மரங்கள் மற்றும் வனப்பகுதி 1445.81 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது.
  • காடுகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை என்பது முதன்மையாக மாநில அரசின் பொறுப்பாகும். நாட்டின் காடுகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை ஒழுங்குபடுத்தும் தேசிய மற்றும் மாநில மட்டங்களில் போதுமான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை அரசு வகுத்துள்ளது. காடுகளின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய மத்திய அளவிலான கொள்கை மற்றும் சட்டங்களில் தேசிய வனக் கொள்கை, 1988, இந்திய வனச் சட்டம், 1927, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 போன்றவை அடங்கும்.

உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளது:

  • சொமாட்டோ நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக ஈடர்னல் (Eternal) எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
  • சொமாட்டோ, பிளிங்கிட், டிஸ்ட்ரிக் (லைஃப் ஸ்டைல் செயலி), ஹைபர்பியூர் ஆகிய நிறுவன சேவைகளை உள்ளடக்கியதாக ஈடர்னல் நிறுவனம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தடை:
  • பிறப்பால் ஆணாக பிறந்து, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் அல்லது சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்பதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


Post a Comment

0Comments

Post a Comment (0)