ராணுவ தலைமையகம் பெயர் மாற்றம் 'விஜய் துர்க்' ஆனது வில்லியம் கோட்டை:
- கோல்கட்டா, காலனித்துவ மரபுக்கு முடிவு கட்டும் வகையில், மேற்கு வங்கம் கோல்கட்டாவில் கிழக்கு பிராந்திய ராணுவ தலைமையகத்தின் பெயர் 'விஜய் துர்க்' என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- நம் நாட்டு ராணுவத்தின் கிழக்கு பிராந்தியத்தின் தலைமையகம், மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவில் உள்ளது. 'வில்லியம் கோட்டை' என, அழைக்கப்பட்ட இந்த கோட்டையானது, 1781ல் கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் ஹூக்ளி நதிக்கரையில் கட்டப்பட்டது.
- மொத்தம் 170 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தலைமையகத்தில், ராணுவத்தின் முக்கிய கட்டடங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கோட்டைக்கு சவுரிங்கி, பிளாசி, கல்கத்தா, வாட்டர் கேட், புனித ஜார்ஜ், டிரஷரி கேட் என ஆறு நுழைவு வாயில்கள் உள்ளன. கடந்த 1962ல் இந்தியா - சீனா இடையிலான போரின்போது, 1963ல் வில்லியம் கோட்டை, நம் ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையகமாக மாறியது. முன்னதாக உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இந்த தலைமையகம் செயல்பட்டு வந்தது.
- கிச்சனர் ஹவுஸ் என்ற பகுதி, கடந்த 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போரில் தலைவராக இருந்த பீல்ட் மார்ஷல் மானேக்சாவின் நினைவாக 'மானேக்சா ஹவுஸ்' என, மாற்றப்பட்டுள்ளது.
- கோட்டை உள்ளே இருக்கும் ரசல் பிளாக், சுதந்திர போராட்ட வீரர் ஜதிர்ந்திரநாத் முகர்ஜியின் நினைவாக 'ஜதின் பிளாக்' என, மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது:
- டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5.02.2025-ம் தேதி நடைபெற்றது.பெரும்பான்மையை நிரூபிக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது (மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் அக்கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றது.).
- கடந்த 1993-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1998 வரை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மதன்லால் குரானா, சாகிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அடுத்தடுத்து முதல்வராக பதவி வகித்தனர். 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இடைத்தேர்தல்:
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 05.02.2025-ம் தேதி நடந்தது. 67.97% வாக்குகள் பதிவாகின.
- மில்கிபூர் தொகுதியின் சமாஜ்வாதி எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். இதில் பைசாபாத் தொகுதியில் அவர் வெற்றி பெற்று எம்.பி.யானார். இதனால் காலியான மில்கிபூர் தொகுயில் இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் பாஜக வேட்பாளர் சந்திர பானு பாஸ்வான் வெற்றி பெற்றுள்ளார். இவர் சமாஜ்வாதி வேட்பாளர் அஜித் பிரசாத்தை 61,710 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியா@2047-ஐ நோக்கி:
- வளர்ச்சியடைந்த இந்தியா@2047-ஐ நோக்கி:பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, உலகளாவிய கூட்டாண்மைகள் மற்றும் சட்டத்தை வலுப்படுத்துதல்” (Towards Viksit Bharat @ 2047-Strengthening Economy, National Security, Global Partnerships, and Law” ) என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நிதி ஆயோக் 2025 பிப்ரவரி 6 அன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடத்தியது.
- இந்த மாநாட்டில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், நிதி ஆயோக் உறுப்பினர்கள், நிதி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஆகியோர் முக்கிய உரைகளை வழங்கினர். இந்த நிகழ்வில் அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவசியமான விவாதங்கள் இடம்பெற்றன.
- 2047-ம் ஆண்டிற்குள் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை குறித்த குழு விவாதம் இதில் சிறப்பம்சமாக இருந்தது.
- இம்மாநாட்டில் கொள்கை, கல்வி மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் உலகளாவிய பொருளாதார சக்தியாக மாறுவதற்கான இந்தியாவின் பாதையை ஆய்வு செய்தனர். ஒழுங்குமுறை அமைப்பில் சீர்திருத்தங்கள், புதிய கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் உத்திசார்ந்த பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் விவாதங்களில் எடுத்துக்காட்டப்பட்டது.
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீடட்டை அதிகரிப்பது, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அவசியத்தைக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
தமிழக யானை திருவிழா 2025 :
- தமிழ்நாடு வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் தமிழக யானை திருவிழா நிகழ்ச்சி சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 07.02.2025 தொடங்கி 08.02.2025 நிறைவடைந்தது. வனத்துறை அமைச்சர் பொன்முடி விழாவை தொடங்கிவைத்தார்
- வனத்துறை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 2,961 யானைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை எடுத்து வருகிறது. பல காலமாக வனத்தை ஆக்கிரமித்து வருபவர்களை, வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய் யானையுடன் இருக்கும் யானைக் குட்டிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது
மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:
- முதல் கல்வெட்டு நாலரை அடி நீளம், 3 அடி உயரம், 15 வரிகள் கொண்டுள்ளது. இதில், "மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ஏழாம் ஆட்சி ஆண்டில், துவராபதி நாடு (இன்றைய நத்தம் பகுதி) எறிபடைநல்லூர் உடையார் ஈஸ்வரத்து இறைவனுக்கு படைத்தலைவன் பாஸ்கரன் என்பவன் நிலக்கொடை அளித்து, அதில் ஒரு மா அளவு நிலத்துக்கு வரும் வரியைத் கொண்டு கடமை, அந்தராயம் போன்ற வரிகளும் செலுத்தி, திரமம் என்னும் காசு ஒன்றும் கோயிலுக்கு தானமாகக் கொடுத்துள்ளான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இரண்டாவது கல்வெட்டு 6 அடி நீளம், 3 அடி உயரம், 14 வரிகள் கொண்டது. இதே பாண்டிய மன்னரின் 12-வது ஆட்சி ஆண்டில் பாஸ்கரன் என்னும் படைத்தலைவனுக்கு கம்பவூர் மக்களும், அப்பகுதியில் அதிகாரியாக இருந்த தென்னகங்க தேவனும் சேர்ந்து பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக ஒரு மா நிலம் நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்று தெரிவிக்கிறது.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி இளைஞர் உச்சிமாநாடு 2025:BIMSTEC Youth Summit 2025:
- இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறை, 2025 பிப்ரவரி 7 முதல் 11 வரை குஜராத்தின் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி இளைஞர் உச்சிமாநாடு 2025-ஐ (BIMSTEC Youth Summit 2025) ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பிப்ரவரி 8, 2025 அன்று இந்த நிகழ்வை முறைப்படி தொடங்கி வைத்தார்.
- 2018 ஆகஸ்ட் 30-31 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற்ற 4-வது உச்சிமாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி மூன்று நாள் இளைஞர் உச்சிமாநாட்டை நடத்துவதாக அறிவித்தார். பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்படும் இளைஞர்கள் தலைமையிலான முன்முயற்சிகள் குறித்த அனுபவங்களையும், நுண்ணறிவுகளையும் பரிமாறிக் கொள்வதை இளைஞர் உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் முன்னேற்றம் குறித்த பேச்சுவார்த்தைக்கான விலைமதிப்பற்ற தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்கும். ஒவ்வொரு உறுப்பு நாடும் 10 இளைஞர் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்.
100 ஜிகாவாட் சூரிய உற்பத்தி செய்து இந்தியா வரலாற்று சாதனை:
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகளாவிய முதன்மை நாடாக தனது நிலையை வலுப்படுத்தி, 100 ஜிகாவாட் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறனை இந்தியா தாண்டி ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
- இந்தியாவின் சூரிய சக்தி துறை கடந்த பத்தாண்டுகளில் அசாதாரணமான 3450% திறனைக் கண்டுள்ளது, இது 2014 இல் 2.82 ஜிகாவாட்டிலிருந்து 2025-ல் 100 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. 2025 ஜனவரி 31 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த சூரிய சக்தி நிறுவப்பட்ட திறன் 100.33 ஜிகாவாட்டாக உள்ளது.
- இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் சூரிய சக்தி ஆதிக்கம் செலுத்துகிறது, இது மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் 47% ஆகும். 2024-ம் ஆண்டில், சாதனை அளவாக 24.5 ஜிகாவாட் சூரிய சக்தி திறன் சேர்க்கப்பட்டது.
- இது 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சூரிய மின் சக்தி நிறுவு திறன்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.
- கடந்த ஆண்டு 18.5 ஜிகாவாட் பயன்பாட்டு அளவிலான சூரிய சக்தி திறன் நிறுவப்பட்டது, இது 2023-உடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 2.8 மடங்கு அதிகரிப்பாகும்.
- ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் அடங்கும், இது இந்தியாவின் மொத்த பயன்பாட்டு அளவிலான சூரிய நிறுவல்களுக்கு கணிசமாக பங்களிக்கின்றன.
ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு 2025:
- இரு வருட ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு (2025 பிப்ரவரி 08) கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விமான தகுதி சான்றிதழ் மையம் (செமிலாக்), ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (ஏஎஸ்ஐ) உடன் இணைந்து ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோடியாக இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
- இந்தக் கருத்தரங்கு உலகளாவிய விண்வெளி அரங்கில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டு கருப்பொருள் 'எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள்: வடிவமைப்பு சரிபார்ப்பில் சவால்கள்' என்பதாகும். எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்களில் வளர்ந்து வரும் போக்குகள், ராணுவ விமானத் தகுதி சான்றிதழ், வடிவமைப்பு, சோதனை ஆகியவற்றில் உள்ள சவால்கள் குறித்த விவாதங்களும் அதற்கான தீர்வுகளும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது
- TNPSC EXAM KEY NOTES: AERO INDIA 2025 DETAILS IN TAMIL
பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்:
- பாதுகாப்பு அமைச்சகம், (2025 பிப்ரவரி 08) புதுதில்லியில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடன் 11 புதிய தலைமுறை கடல் ரோந்து கப்பல்களுக்கான 28 இஓஎன்-51 அமைப்புகளுக்கும் இந்திய கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்களை வாங்குவதற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இஓஎன்-51 என்பது எலக்ட்ரோ ஆப்டிகல் தீ கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது எலக்ட்ரோ ஆப்டிகல், தெர்மல் இமேஜர்ஸ் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலக்குகளைத் தேடுதல், கண்டறிதல், வகைப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது.
- இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் பல வேலைவாய்ப்பை உருவாக்கும். அத்துடன் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய தொழில்துறைகளின் தீவிர பங்கேற்பை ஊக்குவிக்கும். பாதுகாப்பில் 'தற்சார்பு' என்ற இலக்கை அடைவதற்கான அரசின் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இது வழங்கும்
சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை ‘பேட் கேர்ள்’ (Bad Girl) திரைப்படம் வென்றுள்ளது:
- வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதனிடையே, இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணியையும் படக்குழு மேற்கொண்டது.
- அதில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான NETPAC விருதை வென்றுள்ளது ‘பேட் கேர்ள்’ திரைப்படம்.
- NETPAC விருதானது (Network for the Promotion of Asian Cinema) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த ஒரு தனித்துவமான திரைப்படத்துக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வளர்ந்து வரும் இயக்குநர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதத்தில் முதல் மற்றும் இரண்டாவது திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
- ‘பேட் கேர்ள்’ படத்தினை எழுதி இயக்கியுள்ளார் வர்ஷா பரத். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..
SEARCH KEYWORDS CURRENT AFFAIRS FEBRUARY 2025:
- TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2025
- CURRENT AFFAIRS FEBRUARY 2025 TAMIL
- TODAY CURRENT AFFAIRS IN TAMIL PDF FEBRUARY 2025
- CURRENT AFFAIRS FEBRUARY 2025 IN TAMIL PDF
- TODAY CURRENT AFFAIRS PDF FEBRUARY 2025
- CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025
- CURRENT AFFAIRS FEBRUARY 2025 QUESTIONS AND ANSWERS IN TAMIL
- MONTHLY CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2025