நாட்டின் முதல் ஹைபர் லூப் பரிசோதனை வழித்தடம் :
- ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி உருவாக்கிய நாட்டின் முதல் ஹைபர் லூப் பரிசோதனை வழித்தடம் தயார் நிலையில் உள்ளது.
- நீண்ட தூர பயணத்துக்கான அதிவேக ரயில் போக்குவரத்து ஹைபர்லூப் என அழைக்கப்படுகிறது. இதில் வெற்றிட இரும்புக் குழாய்கள் வழியாக, ரயில்கள் எலக்ட்ரோ மேக்னடிக் தொழில் நுட்பத்தில் காற்றின் உராய்வு இன்றி, மேக் 1 வேகத்தில், அதாவது மணிக்கு 761 மைல் வேகத்தில் செல்லும்.
- குறைந்த எரிசக்தியில் விமானத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும். இந்த புதுமையான ரயில் போக்குவரத்துக்கான 422 மீட்டர் நீள பரிசோதனை வழித்தடத்தை ரயில்வே அமைச்சகம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சென்னை ஐஐடி, அதன் தையூர் டிஸ்கவரி வளாகத்தில் உருவாக்கியுள்ளது.
- இந்த ஹைபர்லூப் ரயில் போக்குவரத்து அமலுக்கு வந்தால் 350 கி.மீ தூர பயணத்தை அதாவது டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு அரை மணி நேரத்தில் செல்லலாம்.
மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியல் 2025:
- கடந்த 2023-24ம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள மின்விநியோக நிறுவனங்களின் செயல் திறன் தொடர்பாக, அவற்றின் நிதி நிலைமை, மின்கட்டண வசூல், மின்விநியோக செயல்பாட்டை மதிப்பீடு செய்து தரவரிசை பட்டியலை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.
- இத்தர வரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனமான அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை நிறுவனம் 99.80 மதிப்பெண்களுடன் முதல் இடத்திலும், குஜராத் அரசின் தக்ஷின் குஜராத் விஜ் என்ற நிறுவனம் 97.50 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், உத்தரபிரதேசத்தின் நொய்டா பவர் நிறுவனம் 97.20 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
- தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண்ணுடன் 'சி மைனஸ்' கிரேடு பெற்று 48-வது இடத்தைப் பிடித்துள்ளது.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கழுகுகளைக் கொண்ட மாநிலம்:
- நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கழுகுகளைக் கொண்ட மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாறியுள்ளது. வனத்துறையால் சமீபத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கழுகுகள் கணக்கெடுப்பில், கழுகுகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளது.
- மத்தியப் பிரதேசத்தில், கழுகுகள் கணக்கெடுப்பு, மாநிலத்தில் உள்ள 16 வட்டங்கள், 64 பிரிவுகள் மற்றும் வனத்துறையின் 9 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது.
- மத்தியப் பிரதேசத்தில் கழுகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், கழுகுகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 397 ஆக இருந்தது, இது 2024 இல் 10 ஆயிரத்து 845 ஆக அதிகரித்தது.
அட்வான்டேஜ் அசாம் 2.0:
- பிரதமர் நரேந்திர மோடி, "அட்வான்டேஜ் அசாம் 2.0" உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2025- உச்சி மாநாட்டை கவுகாத்தியில் தொடங்கி வைத்தார்
- குவஹாத்தியில் நடைபெற்ற அட்வான்டேஜ் அசாம் 2.0, முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாட்டில் அசாமின் உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை உருமாற்றுவதற்காக ரூ.4,800 கோடிக்கும் அதிகமான முதலீட்டுத் திட்டத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அறிவித்தார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!