Drug Free TN Mobile Application

TNPSC PAYILAGAM
By -
0

Drug Free TN Mobile Application


போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற செல்போன் செயலி:

  • கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த புகார்கள் அளிக்க ஏதுவாக புதிதாக "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" (Drug Free TN Mobile Applicationஎன்ற அலைபேசி செயலி  (11.01.2025) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
  • இச்செயலி மூலம் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும். மேலும் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்கத்திற்கான இலட்சினை (Logo)-யும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 16.05.2024 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய மூன்று வல்லுநர்கள் கொண்ட போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டிற்கான இயக்க மேலாண்மை அலகு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றம் கல்லூரிகளில் 15,266 போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, 1,99,136 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)