புதிய வருமான வரி மசோதா / INCOME TAX BILL 2025

TNPSC PAYILAGAM
By -
0

INCOME TAX BILL 2025 DETAILS IN TAMIL


புதிய வருமான வரி மசோதா 2025:


  • வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா  மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
  • வரி நிர்வாகத்தினர், வரி நிபுணர்கள் மற்றும் வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் கட்டுமானம் மற்றும் சிக்கல்கள் குறித்து கவலை எழுப்பி உள்ளனர். ஆகவே, எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான சுருக்கமான சட்டம் உருவாக்க, வருமானவரிச் சட்டம் 1961 முழுவதுமாக மீள்பார்வை செய்யப்படும் என்று ஜூலை 2024 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
  • புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு எனவும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மாற்றப்பட்டுள்ளது. 
  • வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தொடங்கும் 12 மாதங்களை குறிப்பதாகும். அதன்படி இது, நிதியாண்டின் கட்டமைப்போடு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
  • புதிய வருமான வரி சட்டப்படி மாதம் 1 லட்சம் வருமானம் என ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி கிடையாது.
  • இந்தியாவில் இதுவரை கொண்டுவரப்பட்ட ஆறாவது வருமான வரி மசோதா ஆகும்.
  • 'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்ற ஒரே ஒரு வார்த்தையால் மாற்ற முன்மொழியப்படவுள்ளது. வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும்.
  • இது வருமான வரிச் சட்டம், 1961-ன் மொழி மற்றும் கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது.


மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் இந்த மசோதாவை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன:

1.தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
2.வருமான வரிச் சட்டத்தின் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில் வரிக் கொள்கைகளில் எவ்வித முக்கிய மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை
3.வரி செலுத்துவோருக்கு முன்கூட்டியே மதிப்பீடு செய்யும் வகையில், வரி விகிதங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 


மேலும்

  • மும்முனை அணுகுமுறையுடன் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
  • வாசிப்பது  எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக சிக்கலான மொழிநடை தவிர்க்கப்பட்டுள்ளது.
  • எளிதில் கண்டறிய வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ள விதிப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
  • ஒப்புநோக்க வசதியாக இருக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் தர்க்க ரீதியாக மறுசீரமைக்கப்படடுள்ளன.
  • தற்போது 2024-25 நிதியாண்டில் சம்பாதித்த வருமானம் அடுத்த நிதியாண்டில் மதிப்பிடப்படுகிறது. இந்த புதிய வரிமுறையில் 2025-26 மதிப்பீட்டு ஆண்டாக இருக்கும். மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம், வரி நிர்வாக விதிகளை நிறுவவும், இணக்கமான நடவடிக்கைகளை செயல்படுத்தவும், டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளை அடிக்கடி சட்ட மாற்றங்கள் தேவையின்றி செயல்படுத்தவும் இப்புதிய மசோதா அனுமதிக்கும்.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)