- பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுபோன்ற திட்டங்களால் வளமான, நலமான தமிழகம் உருவாகும் என்று உறுதிபட தெரிவித்தார்.
- தமிழக கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்பட்டுள்ளது.
- முதல்வர் மருந்தகம் திட்டம் தொடர்பாக அறிவிப்பு கடந்த 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது வெளியானது
- கூட்டுறவு சங்கம் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளன.
- இந்த திட்டமானது முதலமைச்சர் மேற்பார்வையில் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மருந்துகள் சேவை கழகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
- மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக தமிழகத்தில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும்
- இங்கு சலுகை விலையில் மருந்துகளை வாங்க முடியும். அதாவது, சந்தையில் கிடைப்பதை விட 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகள் வாங்கலாம்.
- அதுமட்டுமின்றி மத்திய அரசின் மருந்தகத்தை விட 20 சதவீதம் குறைந்த விலைக்கு மருந்துகளை வாங்கி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
- தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க https://mudhalvarmarundhagam.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தனர்.
- இதுவரை நேரடியாக விண்ணப்பித்தவர்களில் 340 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.
- முதல்வர் மருந்தகம் அமைக்கும், தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்குகிறது. கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்து தரப்படும்.
- தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்பட உள்ளது. இறுதி மானியம் ரூ.1.50 லட்சத்துக்கு மருந்துகள் வழங்கப்படும். இவைதவிர விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- குறிப்பாக சென்னையில் மட்டும் 33 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன
- மொத்தம் 39 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.