NAKSHA SCHEME - தேசிய புவிவெளிசார் அறிவு அடிப்படையிலான நகர்ப்புற வாழ்விடங்களின் நில ஆய்வு - திட்டம்:

TNPSC PAYILAGAM
By -
0
NAKSHA SCHEME DETAILS IN TAMIL


  • மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண் மற்றும் உழவர் நலம் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்(18.02.2025) மத்தியப் பிரதேசத்தின் ரைசனில், தேசிய புவிவெளிசார் அறிவு அடிப்படையிலான நகர்ப்புற வாழ்விடங்களின் நில ஆய்வு (NAKSHA-National Geospatial Knowledge-based Land Survey of Urban Habitations) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • 26 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 152 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நில வளத் துறை இந்த முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
  • நில உரிமை தொடர்பான துல்லியமான, நம்பகமான ஆவணங்களை உறுதி செய்வதற்காக நகர்ப்புறங்களில் நிலப் பதிவுகளை உருவாக்கி புதுப்பிப்பதே நக்ஷா திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்த முன்முயற்சி மக்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், வாழ்க்கையை எளிமைப்படுத்தி நகர்ப்புற திட்டமிடலை மேம்படுத்தும்.
  • அத்துடன் நிலம் தொடர்பான சர்ச்சைகளையும் இது குறைக்கும்.
  • நக்ஷா (NAKSHA) திட்டத்தின் தொழில்நுட்ப பங்குதாரராக இந்திய நிலஅளவீட்டு அமைப்பு செயல்படும்.
  • இந்த முன்னோடித் திட்டத்திற்கு உத்தேசமாக ரூ.194 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு முழுமையாக நிதியளிக்கும்.

SOURCE : PIB


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)