- நானோ குமிழித் தொழில்நுட்பம் என்பது நீரின் மேல் தரத்தை மேம்படுத்த சிறிய குமிழிகளைப் பயன்படுத்தும் நீர் சுத்திகரிப்பு முறையாகும். மாசுபடுத்திகளை அகற்றுதல், கரைந்துள்ள ஆக்ஸிஜன் உள்ளடக்கத்தை அதிகரித்தல், பாசி அகற்ற உதவுதல், பயோஃபிலிமைக் குறைத்தல், இறுதியில் நீர்வாழ் விலங்குகளுக்கு ஏற்றவாறு நீரின் பண்புகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியமான சுற்றுச்சூழல் நன்மைகள் ஆகும்.
- நானோ குமிழி தொழில்நுட்பம் நீர்நிலைகளில் குமிழிகளின் சிறிய அளவு மற்றும் நிலைத்தன்மை காரணமாக மிகவும் ஒரே மாதிரியான பரவலாக்கத்திற்கு வழிவகுக்கும். மறுபுறம், பாரம்பரிய அமைப்புகள் பரவலாக்கத்தில் குறைவான சீரான தன்மையைக் காட்டக்கூடும். இது நீரின் பரப்பளவு முழுவதும் மாறுபட்ட ஆக்சிஜனேற்றம் மற்றும் கிருமி நீக்கச் செயல்திறனை ஏற்படுத்தும்.
- நீர்வாழ் விலங்குகளைக் கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உட்பட, தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களின் நிர்வாகமானது 1972-ம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட மேலாண்மைத் திட்டத்தின்படி செய்யப்படுகிறது.
- நீர் மட்டத்தைப் பராமரித்தல், நீர் சுழற்சி, வண்டல் நீக்கம், காற்றோட்டம் ஆகிய முறைகள் மூலம் நீர்வாழ் களைகளை அகற்றுதல் ஆகியவை இதில் அடங்கும்.
- மத்திய விலங்குகள் காட்சிச்சாலைகள் ஆணையம், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் பிரிவு 63-ன் கீழ் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உயிரியல் பூங்கா அங்கீகார விதிகள், 2009-ல் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, நீர்வாழ் விலங்குகள் உட்பட உயிரியல் பூங்காக்களில் உள்ள அனைத்து விலங்குகளின் சிறப்பான சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை செயல்படுத்தி வருகிறது.
- மேலும், உயிரியல் பூங்காக்களில் பிடித்து வரப்பட்டு கண்காணிப்பில் உள்ள அனைத்து விலங்குகளின் சரியான சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்காக மத்திய விலங்குகள் காட்சிச் சாலைகள் ஆணையம் அவ்வப்போது உயிரியல் பூங்காக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
- இந்தியாவில் சமீபத்தில் நானோ குமிழி தொழில்நுட்பம் நீர் சுத்திகரிப்புக்கு ஒரு சோதனை அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதால், நீரின் தரம் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தில் இந்த தொழில்நுட்பத்தின் நீண்டகால தாக்கத்தை காலப்போக்கில் அறிய முடியும்.
SOURCE : PIB