தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் / NATIONAL CYCLONE RISK MITIGATION PROJECT (NCRMP)

TNPSC PAYILAGAM
By -
0
NATIONAL CYCLONE RISK MITIGATION PROJECT (NCRMP)



  • இந்தியாவின் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புயல்களின் விளைவுகளைத் தணிக்க பொருத்தமான கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு சாராத நடவடிக்கைகளை மேற்கொள்வதே திட்டத்தின் நோக்கமாகும்
  • தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் 8 கடலோர மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது.

  • முதல் கட்டத்தில் ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களிலும், இரண்டாம் கட்டத்தில் கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

  • வகை I: அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் அதாவது ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம்.
  • வகை II: குறைந்த பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் அதாவது மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, கோவா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.

  • திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதன் கீழ் வழங்கப்பட்ட மொத்த நிதி ரூ. 3380.61 கோடியாகும். முதல் கட்டத்தில் ரூ. 1957.76 நிதியும் இரண்டாம் கட்டத்தில் ரூழ 1422.85 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல், நிலைத்திருக்கச் செய்யும் பொறுப்பு ஆகியவை மாநில அரசுகளிடம் உள்ளது. தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் கீழ், பல்நோக்கு புயல் பாதுகாப்பு முகாம்களின் செயல்பாட்டு நிலைத்தன்மைக்காக பதிவு செய்யப்பட்ட சங்கமாக புயல் பாதுகாப்பு மேலாண்மை குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட கால பராமரிப்புக்காக மாநில பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கவும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்:

  • 1999ல் ஏற்பட்ட மாபெரும் புயலை அடுத்து ஒரிசா மாநில பேரிடர் குறைப்பு ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது. பிறகு ஒரிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமாக மாற்றப்பட்டது.
  • இதற்குப் பிறகு, வந்த பேரிடர்கள் அனைத்தும் இந்த ஆணையத்தால் கையாளப்பட்டன. ஒவ்வொரு புதிய பேரிடரின்போதும் இந்த ஆணையம், அந்த அனுபவத்தைக் கொண்டு தன்னை தொடர்ந்து புதுப்பித்துவருகிறது. குறிப்பாக 2013ஆம் ஆண்டில் ஃபாலின் புயல் ஒரிசாவைத் தாக்கியபோது சுமார் 11,54,000 பேரை பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து வெளியேற்றியது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
  • ஒரிசாவுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம்தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது. 2001 ஜனவரி 26ஆம் தேதியன்று குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்தே அதே ஆண்டில் பேரிடர் மேலாண்மைக்கென இந்த ஆணையத்தை உருவாக்கியது குஜராத். இப்போது தாலுகா மட்டம்வரை தனது கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறது குஜராத் மாநில பேரிடர் ஆணையம்.

  • இந்த இரு ஆணையங்களின் கட்டமைப்பின் அடிப்படையில்தான் தேசிய அளவில் பேரிடர் மேலாண்மைக்கென 2005 டிசம்பரில் சட்டம் இயற்றப்பட்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்பட ஆரம்பித்தன. 
  • இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை ஆணையம் 2003ல் துவக்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாடு சந்தித்த புயல்கள்:

  • 1966 பெயரில்லா புயல்: நாகப்பட்டினத்தில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போது, புயல் சென்னையை நோக்கி நகர்ந்து, கப்பல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியது.
  • 1977 புயல்: நாகப்பட்டினத்தை தாக்கியது, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
  • 1985 புயல்: மேலும் குறிப்பிடத்தக்க புயலாக உள்ளது.
  • 1998 புயல்: கணிசமான மழையை கொட்டியது, சராசரியை விட 30% அதிகமான மழையை ஏற்படுத்தியது.
  • 2005 புயல்கள் (பியார், பாஸ், ஃபர்னூஸ்): ஃபர்னூஸ் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது, பரந்த அளவிலான வேளாண் சேதத்தை உண்டாக்கியது.
  • 2008 புயல் நிஷா: 189 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது மற்றும் ஒரத்தநாடு மற்றும் தஞ்சாவூரில் கடுமையான வெள்ளங்களை ஏற்படுத்தியது.
  • 2010 புயல் ஜல்: தென் சீனக் கடலிலிருந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்தது, 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
  • 2011 புயல் தானே: புதுச்சேரி மற்றும் கடலூரில் சேதங்களை ஏற்படுத்தியது.
  • 2012 புயல் நீலம்: கரையைக் கடந்த பகுதியில் பரந்த அளவிலான வெள்ளம்.
  • 2013 புயல் மடி: மிக குறைந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.
  • 2016 புயல்கள் (ரோனு, கியான்ட், நடா, வர்தா): வர்தா மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது, சென்னையில் கடுமையான சேதங்களை உண்டாக்கியது.
  • 2017 புயல் ஒக்கி: 218 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது மற்றும் கன்னியாகுமரியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
  • 2018 புயல் கஜா: 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை பாதித்து, 40-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
  • 2020 புயல்கள் நிவர் மற்றும் புரேவி: கணிசமான மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தியது.
  • 2022 புயல் மாண்டஸ்: 4 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
  • 2023 புயல் மிக்ஜாம்: 47 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழையை ஏற்படுத்தியது, 17 உயிரிழப்புகளை கொண்டுள்ளது.
2024 : பெஞ்சல் புயல் பற்றிய சில தகவல்கள்: 

  • இந்த புயல், நவம்பர் 26 முதல் வீசத் தொடங்கியது.
  • இந்த புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அதிக கனமழை பொழிவு ஏற்பட்டது.
  • இந்த புயல் காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)