இளையோர் நாடாளுமன்றத் திட்டம் / NATIONAL YOUTH PARLIAMENT SCHEME (NYPS) 2.0

TNPSC PAYILAGAM
By -
0

NATIONAL YOUTH PARLIAMENT SCHEME (NYPS) 2.0


நாடாளுமன்ற விவகார அமைச்சகம், தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திட்டத்தின் (NYPS) வலை போர்ட்டலை 2019 நவம்பர் 26 அன்று அறிமுகப்படுத்தியது.

ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்துவது, ஆரோக்கியமான அறநெறி சார்ந்த பழக்கங்களை வளர்ப்பது மற்றும் மற்றவர்களின் கருத்துக்களை சகித்துக்கொள்ளும் திறன் ஆகியவற்றை வளர்ப்பது, மாணவர்கள் நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ள உதவுவது, அரசின் செயல்பாடு, அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் ஜனநாயக வழியில் தங்கள் வாழ்க்கையை வாழ்வது பற்றிய அறிவை மேம்படுத்துவது ஆகியவை தேசிய இளையோர் நாடாளுமன்றத் திட்டம் 2.0-ன் முக்கிய கனிமங்கள் நோக்கங்கள் ஆகும்.

NYPS 2.0 இணையதளம்:

NYPS 2.0 இணையதளமானது நாட்டின் அனைத்து குடிமக்களும் அமைச்சகத்தின் இளையோர் நாடாளுமன்ற திட்டத்தில் 3 வெவ்வேறு வழிகளில் பங்கேற்க உதவுகிறது:

(i) கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் கிடைக்கும் வழிகாட்டுதல்களின்படி இளையோர் நாடாளுமன்ற அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தப் பிரிவில் பங்கேற்கலாம். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் “கிஷோர் சபா” துணைப்பிரிவிற்கும், இளங்கலை, முதுகலை நிலை மாணவர்கள் “தருண் சபா” துணைப்பிரிவிற்கும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

(ii) குழுவினர் பங்கேற்பு: இணையதளத்தில் உள்ள வழிகாட்டுதல்களின்படி இளையோர் நாடாளுமன்ற அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் குழுவினர் இந்தப் பிரிவில் பங்கேற்கலாம்.

(iii) தனிநபர் பங்கேற்பு: 'இந்திய ஜனநாயகம் செயல்பாட்டில்' என்ற கருப்பொருளில் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தனிநபர் ஒருவர் இந்தப் பிரிவில் பங்கேற்கலாம்.




SOURCE : PIB



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)