பரிக்ஷா பே சர்ச்சா என்பது 2018 (பிப்ரவரி 16,2018) முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
இந்த நிகழ்வின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடுகிறார், மேலும் வாரியத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை நிதானமாகவும் மன அழுத்தமில்லாமலும் எப்படி எடுப்பது என்பது குறித்த உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்
வரலாறு:
- பரிக்ஷா பே சர்ச்சாவின் முதல் பதிப்பு பிப்ரவரி 16, 2018 அன்று நடைபெற்றது;
- இரண்டாவது பதிப்பு ஜனவரி 29, 2019 அன்று புதுதில்லியில் நடைபெற்றது;
- மூன்றாவது பதிப்பு 2020 இல் நடைபெற்றது,
- நான்காவது பதிப்பு ஏப்ரல் 7, 2021 அன்று ஒரு ஆன்லைன் சந்திப்பு மூலம் நடைபெற்றது.
- 5வது பதிப்பு ஏப்ரல் 1, 2022 அன்று புது தில்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் நடத்தப்பட்டது
- 6வது பதிப்பு ஜனவரி 27, 2023 அன்று புது தில்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் நடத்தப்பட்டது .
- 7வது பதிப்பு ஜனவரி 29, 2024 அன்று நடைபெற்றது.
- பரிக்ஷா பே சர்ச்சாவின் 8வது பதிப்பு (10 பிப்ரவரி 2025) நடைபெற்றது.
பரிக்ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடலின் தாக்கம்:
- தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கடந்து தேர்வை நேர்மறையானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி உருவெடுத்துள்ளது.
- கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், தீர்வுகளை வழங்குவதன் மூலமும், பிரதமர் திரு நரேந்திர மோடி கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, மாணவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார்.
- திட்டத்தின் உள்ளடக்கம், டிஜிட்டல் அணுகல், புதுமையான அணுகுமுறைகள் ஆகியவை இந்தியாவில் மாணவர் ஈடுபாட்டின் தொடர்ச்சியான வெற்றியை உறுதி செய்கின்றன.
- தேர்வுகள் முடிவல்ல, ஒரு தொடக்கம் என்ற செய்தியை ஒவ்வொரு ஆண்டும் இந்த கலந்துரையாடல் எடுத்துறைக்கிறது!