CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (21.03.2025-22.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (21.03.2025-22.03.2025)


நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன் அளவை எட்டி சாதனை:

  • 2024-25-ம் நிதியாண்டில் 2025 மார்ச் 20-ம் தேதி  நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன் அளவை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை கடந்த நிதியாண்டின் நிலக்கரி உற்பத்தியான 997.83 மில்லியன் டன் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு 11 நாட்களுக்கு முன்னதாகவே எட்டப்பட்டுவிட்டது. 
  • இது எரிசக்தி தேவைகளை பூர்த்தி  செய்வதிலும், தொழில்துறை, விவசாயம், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதிலும் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
  • நாட்டின் எரிசக்தித்துறை 55% நிலக்கரி பயன்பாட்டை அடிப்படையாக கொண்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் சுமார் 74 சதவீதம் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நிலக்கரியின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் :

  • தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் (மார்ச் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்
  • 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
 7 தீர்மானங்கள்:

  1. மத்திய அரசு தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்பினரை உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் விரிவாக விவாதிக்க வேண்டும்.
  2. 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்.
  3. மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்.
  4. தொகுதி மறுவரையறை தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள, கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மையக் குழு, நாடாளுமன்ற உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படும்.
  5. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, நாடாளுமன்றக் குழு பிரதமரைச் சந்தித்து, இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்கும்.
  6. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பர்.
  7. கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது:

  • இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவத்தில் தற்போது 105 மற்றும் 130 எம்எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில் இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 307 நவீன பீரங்கிகள், அதை இழுத்துச் செல்வதற்கு 327 வாகனங்களும் வாங்கப்படும். இந்த பீரங்கிகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளுக்கு அனுப்பப்படும். 
  • இந்த பீரங்கிகள் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் 65 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாகங்கள். அதனால் இந்த கொள்முதல் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.

ஜிஎஸ்எல் நிறுவனத்தால் கட்டப்பட்ட 1135.6 திட்ட இரண்டாவது போர்க்கப்பல் அறிமுகம் செய்யப்பட்டது:

  • கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (ஜிஎஸ்எல்) கட்டிய 'தவஸ்யா'(‘Tavasya) என்று பெயரிடப்பட்ட திட்டம் 1135.6 கூடுதல் வரிசைக் கப்பல்களின் இரண்டாவது போர்க்கப்பல், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில் (மார்ச் 22, 2025) அன்று கோவாவில் உள்ள ஜிஎஸ்எல் தளத்தில் அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த போர்க்கப்பல்கள் பி1135.6 கப்பல்களின் தொடர் வரிசையாகும். இவை இப்போது இந்திய கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வருகின்றன.
  • இந்திய கடற்படையின் வலுவான உணர்வும் வளர்ந்து வரும் வலிமையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 'மகாபாரதத்தின்' புகழ்பெற்ற வீரரான 'பீமா'வின் கதாயுதத்தின் நினைவாக இந்த கப்பலுக்கு 'தவஸ்யா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இரண்டு ப்ராஜெக்ட் 1135.6 வரிசை போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே 25 ஜனவரி 2019 அன்று கையெழுத்தானது. முதல் கப்பல் 'டிரிபுட்' 23 ஜூலை 2024 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கப்பல்கள் தரை, கடலுக்கு அடியில், வான்வழி போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 'திரிபுத்', 'தவஸ்யா' ஆகியவை 124.8 மீட்டர் நீளமும் 15.2 மீட்டர் அகலமும் கொண்டவை.
  • 'திரிபுத்', 'தவாஸ்யா' ஆகியவை உள்நாட்டு மூல உபகரணங்கள், ஆயுதங்கள், சென்சார்களில் அதிக சதவீதத்தைக் கொண்டுள்ளன. இது இந்திய உற்பத்தி பிரிவுகளால் பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தியை உறுதி செய்கிறது. இது நாட்டிற்குள் வேலைவாய்ப்பையும் திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கிறது. இந்த கப்பல்களில் மேம்பட்ட அம்சங்கள், மேம்பட்ட ஆயுதம், சென்சார்கள், சிறந்த இயங்குதள மேலாண்மை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டுகளால் 6 ஆண்டுகளில் 47 பேர் தற்கொலை - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்:

  • தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. 
  • இச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது. \மேலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட யாரையும் அனுமதிக்கக்கூடாது என்ற நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. 
  • இதை எதிர்த்து பிளே கேம் பிரைவேட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வக்கீல் அரவிந்த் ஸ்ரீவட்சன் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:- 
  • "ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட பண நஷ்டம் காரணமாக 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 47 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை.அதேபோல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் விளையாடினால் தூக்கமின்மை பாதிப்பு, உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நேர கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்துடன் டாடா குழும நிறுவனங்கள் வர்த்தக கூட்டணி:

  • எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எலான் மஸ்கின் டெஸ்லாவுடன் டாடா குழும நிறுவனங்கள் வர்த்தக கூட்டணியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சர்வதேச ஆட்டோமோட்டிவ் துறையின் சந்தை மதிப்பில் பாதியளவை கொண்ட நிறுவனங்களின் கூட்டணியாக இது உருவெடுத்துள்ளது.
  • டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செயல்பட தொடங்கினால் அதன் வர்த்தக வாய்ப்புகளை டாடா ஆட்டோகாம்ப், டாடா கன்சஸ்டன்ஸி சர்வீசஸ், டாடா டெக்னாலஜீஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை நிலைநிறுத்திக் கொள்ளும்.
  • மேலும், இந்த டாடா குழும நிறுவனங்கள் டெஸ்லாவுடன் தங்கள் விநியோக சங்கிலி நெட்வொர்க்கில் மிக முக்கிய பங்குதாரராக இணைப்பதன் மூலம் உலகளாவிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. 2024-ம் நிதியாண்டில் அமெரிக்க மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய விநியோகங்களுக்கு அவர்கள் பங்களிக்கின்றனர்.

தெலுங்கானாவில் 72-வது உலக அழகிப்போட்டி 2025:

  • இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தெலுங்கானா மாநில அரசு நடத்துகிறது.
  • 72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும்

சர்வதேச ஒலிம்பிக் ஆணையத் தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் தேர்வு:

  • கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144-வது சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் கூட்டத்தில் 10-வது தலைவருக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
  • இவர்களுக்குள் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 41 வயதான ஜிம்பாப்வே விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த கிறிஸ்டி கோவென்ட்ரி வெற்றி பெற்றார்.
  • 2013 ஆம் ஆண்டில் முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாக், மீண்டும் 2021 ஆம் ஆண்டில் தலைவரானார். அவருக்குப் பின்னர் கிறிஸ்டி கோவென்ட்ரி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 23 ஆம் தேதி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும், சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றப்போகும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் கிறிஸ்டி.
  • • ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவரான கிறிஸ்டி, 2033 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் பதவி வகிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  வாழ்நாள் சாதனையாளர் விருது:

  • தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது தொண்டு நிறுவனம் மூலம், சேவைகளும் செய்து வருகிறார்.

  • இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி அவரின் சினிமா பங்களிப்பையும் சமூக தொண்டுகளையும் அங்கீகரிக்கும் விதமாக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ‘திங்க் டேங் பிரிட்ஜ் இந்தியா’ என்ற அமைப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸி’ல் இவ்விருதை வழங்கியது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2025:

  • சர்வதேச மகிழ்ச்சி தினம் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
  • சமூக ஆதரவு. சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இது பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
  • இதில், அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால், முதலிடம் பெற்ற நாடான பின்லாந்து 7.74 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றது. மற்றவர்களை நம்புவது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது போன்றவை மக்களின் சந்தோஷத்திற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன. பின்லாந்து தொடர்ந்து எட்டாம் ஆண்டாக இந்த தகுதியை பின்லாந்து பெற்றுள்ளது.
  • 2.டென்மார்க், 3.ஐஸ்லாந்து, 4.நார்வே, 5.ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 
  • இலங்கை 133-வது இடத்திலும், வங்கதேசம் 134வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளன. 2012ம் ஆண்டில் 11 வது இடத்தில் இருந்த அமெரிக்கா, 24 வது இடத்திற்கு சென்றுள்ளது. இங்கிலாந்து 23வது இடத்தைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 நாடுகளில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினம் 2025:

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஆலோசகரான ஜேமீ இலியன் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.
  • இது உலக மகிழ்ச்சி இயக்கத்தை ஊக்குவித்தல், அணி திரட்டுதல் மற்றும் முன்னேற்றமடையைச் செய்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பூடான் நாட்டினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியது. இது மார்ச் 20 ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாகப் பறை சாற்றியது.
  • முதலாவது சர்வதேச மகிழ்ச்சி தினமானது 2013 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று அனுசரிக்கப்பட்டது.

  • சர்வதேச மகிழ்ச்சி தினம் 2025 கருப்பொருள் : "Caring and Sharing,"

உலக நீர் நாள் 2025:

  • நீரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்வதற்காக அந்த மாநாட்டில் ‘உலக நீர் நாள்’ என்கிற கருத்தாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து 1993 மார்ச் 22 முதல் ‘உலக நீர் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக பனிப்பாறைகள் தினம் 2025:

  • உருகும் பனிப்பாறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பை வலியுறுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை ( UNESCO மற்றும் WMO ஆகியவை) 2025 ஐ "சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக" (தீர்மானம் A/RES/77/158) அறிவித்துள்ளது, மேலும் மார்ச் 21 ஐ "உலக பனிப்பாறைகள் தினமாக" அறிவித்துள்ளது.

புவி நேரம் நிகழ்வு 2025 :

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் 'புவி நேரம்' நிகழ்வு நடத்தப்படுகிறது. அந்நாளில் ஒரு மணி நேரத்திற்கு அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைத்து, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆதரவை உலக நாடுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த 2007-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக இயற்கை நிதியம் (WWF) சிட்னி, அமைப்பு விளக்குகளை அணைத்து புவி நேரம் நிகழ்வை முதல் முதலாக தொடங்கியது.
  • இவ்வாறு சுற்றுச்சூழலுக்கான மிகப்பெரிய உலகளாவிய இயக்கமாக கருதப்படும் புவி நேரம் நிகழ்வின் 19வது பதிப்பானது, ஐ.நா. அவையின் உலக நீர் தினத்துடன் இணைந்து, (மார்ச் 22) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை கொண்டாடப்படுகிறது.
  • உலக இயற்கை நிதியத்தின் சிறப்பு தூதர்கள் புவி நேர நிகழ்வில் பங்கேற்பதுடன், #BeWaterWise என்கிற கருத்தாக்கத்தில் கீழ் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர்.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)