கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன் (ஜி.சி.எஸ்.கே) விருது:
- மொரீஷியஸ் குடியரசின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
- இந்தக் கொண்டாட்டங்களின் போது, மொரீஷியஸ் குடியரசின் அதிபர் திரு. தரம்பீர் கோகூல், மொரீஷியஸின் மிக உயரிய சிவில் விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன் (Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean (G.C.S.K) Award) விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்தியத் தலைவர் ஒருவர் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
- இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான சிறப்பு நட்புறவுக்கும், இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் மற்றும் மொரீஷியஸில் உள்ள 1.3 மில்லியன் சகோதர சகோதரிகளுக்கும் பிரதமர் மோடி இந்த விருதை அர்ப்பணித்தார்.
- தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது, இந்திய கடற்படை அணிவகுப்புக் குழுவினரும் அணிவகுப்பில் பங்கேற்றனர். தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒரு இந்திய கடற்படை கப்பலும் அங்கு சென்றிருந்தது.
- மொரீஷியஸ் தேசிய தினம் (Mauritius National Day) கடைபிடிக்கப்படும் தினம்-மார்ச் 12
- (இந்தியா - மொரிஷியஸ் இடையே) இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைழுத்தாகின.
பிரதமர் மித்ரா பூங்கா:
- பிரதமர் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்காக தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கல்புர்கி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ / ஹர்தோய்) மற்றும் மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களை அரசு இறுதி செய்துள்ளது.
- இப்பூங்காக்கள் ஜவுளித் தொழிலை உலக அளவில் போட்டியிடவும் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.
- TNPSC EXAM KEY POINT NOTES: PM MITRA / பிஎம் மித்ரா பூங்காக்கள் திட்டம்
விருதுகள்:
- சிறந்த பெண் குழந்தை விருது 2025 :சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை, போதை ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வடிவமைத்து, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், கடலூர் மாவட்டம். காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சவுமியாவிற்கு 2025-ம் ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதினையும், விருது தொகையாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்..
- ஔவையார் விருது 2025: சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்து வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் யசோதா சண்முகசுந்தரம் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 2025-ம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
- தமிழில் மொழிபெயர்பிற்கான சாகித்ய அகாடமி விருது: மத்திய அரசின் சார்பில், இந்தியாவின், 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகளை வழங்குகிறது.விருதாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம், செப்பு பட்டயம், பொன்னாடை ஆகியவை, டில்லியில் நடக்க உள்ள விழாவில் வழங்கப்படும். அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. ' திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.,யும்- 1908' என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐநா அமைப்பின் மகளிர் நிலை குறித்த ஆணையத்தின் 69-வது அமர்வில் இந்தியா பங்கேற்றது:
- நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் 2025 மார்ச் 10 அன்று தொடங்கிய ஐநா அமைப்பின் மகளிர் நிலை குறித்த ஆணையத்தின் 69-வது அமர்வில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணாதேவி தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.
- 2025 மார்ச் 10 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் நிலையிலான அமர்வில் உரையாற்றிய திருமதி அன்னபூர்ணா தேவி நாடு முழுவதும் மகளிர் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த மேம்பாடு, அதிகாரமளித்தல், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். முக்கியமான 12 துறைகளில் பாலின சமத்துவத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
- மகளிர் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து, கல்வி, பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் அரசின் முக்கிய திட்டங்களின் தாக்கம் பற்றியும் அமைச்சர் விவரித்தார்.
உலகில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரங்கள் பட்டியல் 2024:
- சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூ ஏர், உலக காற்று தர அறிக்கையை (2024) வெளியிட்டுள்ளது. இதன்படி உலக அளவில் மிகவும் மோசமாக காற்று மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
- உலக அளவில் மிகவும் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் கடந்த 2023-ல் சராசரியாக, காற்று மாசு குறியீடான பிஎம்2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 92.7 மைக்ரோ கிராமாக இருந்தது. இது 2024-ல் 91.6 ஆக உள்ளது.
- பிர்னிஹட் (அசாம்), டெல்லி, முல்லன்பூர் (பஞ்சாப்), பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா ஆகிய 13 இந்திய நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
- இதுபோல உலக அளவில் மிகவும் மோசமாக காற்று மாசடைந்த நாடுகள் பட்டியலில், கடந்த 2023-ல் 3-ம் இடத்தில் இருந்த இந்தியா, 2024-ல் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அளவில் 2023-ல் பிஎம் 2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோ கிராமாக இருந்தது. இது 2024-ல் 7% குறைந்து 50.6 ஆக உள்ளது.
- இந்தியாவில் காற்று மாசு காரணமாக உடல்நல கோளாறுகள் அதிகரித்து சராசரி வாழ்நாள் குறைந்து வருகிறது. கடந்த 2009 முதல் 2019 வரையிலான 10 ஆண்டில், காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என லான்செட் பிளானெட்ரி ஆய்வு தெரிவிக்கிறது.
ஆட்டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்றிதழ் வழங்கும் நடைமுறை:
- மகாராஷ்டிர மீன்வளம் மற்றும் துறைமுக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதேஷ் ராணே, ஆட்டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.
- இதுகுறித்து அமைச்சர் ராணே கூறியதாவது: மகாராஷ்டிராவில் உள்ள இந்து சமுதாயத்தினருக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இந்துக்களால் நடத்தப்படும் சரியான ஆட்டிறைச்சி கடைகளை அடையாளம் காண ‘மல்ஹர்’ சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இறைச்சியில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்யவும் இது உதவும்.
- இந்துக்கள் மல்ஹர் சான்றிதழ் பெற்ற கடையில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டும். இந்த சான்றிதழ் பெறப்படாத கடையில் ஆட்டிறைச்சி வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த முயற்சி இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆஹார் 2025-39-வது கண்காட்சி:
- புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2025 மார்ச் 4 முதல் 8 வரை இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆஹார் 2025-ன் 39-வது கண்காட்சியில் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் சிறப்புகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா-The Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) ) வெளிப்படுத்தியது.
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) என்பது இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். உணவு மற்றும் பானத் துறையில் நாட்டின் உலகளாவிய தடத்தை மேம்படுத்தும் அதே வேளையில், இந்தியாவில் இருந்து விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை மேம்படுத்துதல், எளிதாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை APEDAவின் நோக்கமாகும்.
- இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் உற்பத்தி அமைப்புகள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட 95 அமைப்புகளைச் சேர்ந்த காட்சிப்படுத்துவோர் அரங்குகளை அமைத்திருந்தனர்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!